சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 136

ஜூலி, கணேஷ் மற்றும் சர்வர் அரட்டையடித்துக் கொண்டிருக்கிறார்கள். சர்வர் ஒரு சந்தேகம் கேட்கிறான். Juggernaut rolls என முன்பு அவர்கள் பயன்படுத்திய சொற்றொடரின் பொருள் என்ன?

News image
Updated On :24 ஏப்ரல் 2018, 2:44 pm

ஆர்.அபி​லாஷ்

ரொபஸர், ஜூலி, கணேஷ் மற்றும் சர்வர் அரட்டையடித்துக் கொண்டிருக்கிறார்கள். சர்வர் ஒரு சந்தேகம் கேட்கிறான். Juggernaut rolls என முன்பு அவர்கள் பயன்படுத்திய சொற்றொடரின் பொருள் என்ன? அதற்கு பதிலளிக்கும் புரொபஸர் Juggernaut என்பதே இந்தியாவில் இருந்து தோன்றி இங்கிலாந்துக்கு சென்று அங்கிருந்து உலகம் முழுக்க ஆங்கிலம் வழி 
பரவிய ஒரு சொல் என்கிறார்.
புரொபஸர்: சரி, இந்த Juggernaut என்பதை நினைவுபடுத்தும் நம்ம உள்ளூர் சொல் என்ன சொல்?
கணேஷ்: ம்ஹும்...
புரொபஸர்: சொன்னா அரை பவுன் மோதிரம் பரிசு தரேன். சொல்லுங்க பார்ப்போம்.
ஜூலி (அலட்சியமாய்): Juggernaut என்பது பூரி ஜகந்நாதர் ஆலய தேர்த்திருவிழாவை குறிக்கிறது. அக்காலத்தைய வாய்வழிக் கதைகளின்படி பக்தசிரோன்மணிகள் ஓடும் தேர்க் கால்கள் முன் குதித்து தம்மை மாய்த்துக் கொள்வார்கள். இதை ஒட்டி காட்டுமிரண்டிகளின் உயிர்த்தியாகம் எனும் பொருளில் 19ஆம் நூற்றாண்டு ஆங்கிலத்தில் பயன்படுத்தினார்கள். ஜேன் ஆஸ்டின், சார்லஸ் டிக்கென்ஸ் ஆகிய புனைவிலக்கிய சாதனையாளர்களும் இந்தச் சொற்றொடரை சின்ன இனதுவேசத்துடன் தான் பயன்படுத்தினர். ஆனால் இந்த சொற்றொடருக்கு இந்த அர்த்தமும் உண்டு. அந்த தேரின் ஆற்றல், வேகம், முன் விழுபவரை நசுக்கி செல்லும் அதன் மூர்க்கம் - இதையெல்லாம் கொண்ட ஓர் அணி, கூட்டம், கட்சி ஆகியவற்றை குறிக்க ஜக்கர்நாட் எனும் சொல் பயன்படலாம். இப்பொருளிலே நவீன காலத்தில் ஜக்கர்நாட் பயனாகிறது. 
புரொபஸர்: வெரி குட். சரி கணேஷ், ஜூலியை சீக்கிரம் கிளப்பு. நாம சலபதியை பார்க்க கிளம்பணும். இன்னும் அரைமணியில நாம அங்க இருக்கணும். It's time.
சர்வர்: அதென்ன சார் It's time?
புரொபஸர்: தம்பி எனக்கும் டைம் ஆகுது. நான் போக வேண்டிய நேரம் ஆயிடுச்சு. புரிஞ்சுக்கோ.
சர்வர்: சார் நான் உங்களை delay பண்ணல. ஆனால் அதோட மீனிங் மட்டும் சொன்னீங்கன்னா...
புரொபஸர்: அதான் சொல்லீட்டேனே...
சர்வர்: எங்க?
ஜூலி: அவருக்கு போக வேண்டிய டைம் வந்திடுச்சுன்னா இங்கிலீஷ்ல it is time for him to leave
சர்வர்: அடப்பாவி...
ஜூலி: ஏன்?
சர்வர்: நான் ஒரு நாவல் வாசிச்சிக்கிட்டு இருந்தேன். தமிழ் மொழிபெயர்ப்பு. அது ஒரு ரஷ்ய நாவல். அதை ஆங்கிலம் வழி தமிழுக்கு சொக்கலிங்கம் என்பவர் மொழிபெயர்த்திருந்தார். நல்ல சரளமான மொழியாக்கம் தான். ஆனால் அவர் அப்பப்போ இது தான் நேரம்... இது தான் நேரம்...ன்னு எழுதுவார். அது மட்டும் எனக்குப் புரியாது. தனியா உறுத்தலா தெரியும். அது ஐற் ண்ள் ற்ண்ம்ங் என்பது தப்பான மொழியாக்கம் என்பதை இப்போ தான் தெரிஞ்சுக்கிட்டேன். 
புரொபஸர்: அது என்ன நாவல்?
சர்வர்: லியோ டால்ஸ்டாயோட War and Peace.
புரொபஸர்: வாவ்... அது உலகத்தில் இதுவரை எழுதப்பட்டதிலேயே சிறந்த நாவலாச்சே. அதைப் படிக்கையில் இதை ஒரு மனிதன் எழுதியிருக்க முடியாது, கடவுள் தான் எழுத முடியுமுன்னு நமக்குத் தோணும். தன் கதையில் வரும் ஒவ்வொரு மனிதனைப் பற்றியும் இவ்வளவு ஆழமா நுணுக்கமா டால்ஸ்டாய் மாதிரி இன்னொருத்தர் எழுத முடியாது. கடவுள் தன் உள்ளங்கையில் மனிதர்களை வைத்து வேடிக்கை பார்க்கிற மாதிரி டால்ஸ்டாய் பண்ணுகிறார், அவர் அபூர்வமானவர் என்று நமக்கு நாவலை படிக்கையில் தோன்றும். He is the greatest!

சர்வர்: சரி சார், அது இருக்கட்டும். ஐற் ண்ள் ற்ண்ம்ங் என்பதோட சரியான மொழியாக்கம் தான் என்ன?
புரொபஸர்: தாமதமாயிடுச்சு... இல்லாட்டி நாம கிளம்ப வேண்டிய நேரம் வந்திடுச்சு.
சர்வர்: ஓ...
புரொபஸர்: ஆனால் தலைப்பான "போரும் அமைதியும்' ஒரு நல்ல மொழியாக்கம். டால்ஸ்டாய் பிரான்ஸூடனான போர் முடிந்த பிறகு ஓர் ஆழமான உண்மையான வாழ்க்கை ரஷ்யர்களுக்கு எப்படி அமையுதுன்னு எழுதுகிறார். இதை உணர்ந்த ஒரு நல்ல மொழியாக்கம்.
கணேஷ்: சார்... வாங்க கிளம்புவோம்
புரொபஸர்: தம்பி சர்வர் சுந்தரம், நீ சினிமாவில் ஒரு ஸ்டார் ஆகி, உனக்கொரு ராதா அமைய வாழ்த்துக்கள்!

(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.