வாங்க இங்கிலீஷ் பேசலாம் 151

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் மருத்துவருக்கான காத்திருப்போர் அறையில் இருக்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 151
Published on
Updated on
2 min read

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரிடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் மருத்துவருக்கான காத்திருப்போர் அறையில் இருக்கிறார்கள். அவர்களுடன் அங்கே ஒரு மீசைக்காரரும் நடாஷா எனும் பெண்ணும் இருக்கிறார்கள். இருவரும் போனில் பிக்பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மீசைக்காரர் நடாஷாவிடம் பிக்பாஸ் பங்கேற்பாளர் ஷாரிக் பற்றி சொல்லும் போது அவர் ஒரு omega male என்கிறார். 
கணேஷ்: சார், நான் alpha male கேள்விப்பட்டிருக்கேன். ஒரு கூட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆணை alpha male என்பார்கள். ஆனால் அதென்ன omega male?
புரொபஸர்: கொஞ்சம் அப்பிராணியான எதுக்கு வம்பு என ஒதுங்கிப் போகும் ஆண்களை omega male என்பார்கள்.
கணேஷ்: ஆனால் சார் ஷாரிக்கை ஜட்ஜ் ஆக்கிய போது அவர் உறுதியாக நடந்து கொண்டாரே?
புரொபஸர்: ஆமாம், ஆனால் அந்த பணி முடிந்ததும் அவர் பழையபடி ஒதுங்கி விட்டாரே.
கணேஷ்: அப்படீன்னா பொன்னம்பலம், சென்டிராயன் எல்லாம்?
புரொபஸர்: யார் தான் அந்த வீட்டில போட்டி போடல? ஒரு வாரம் omega maleன்னா, ஒதுங்கிப் போறாங்கன்னா, அடுத்த வாரம் alpha male ஆகிடறாங்க. அதற்கு அடுத்த வாரம் beta male ஆகறாங்க.
கணேஷ்: அதென்ன க்ஷங்ற்ஹ ம்ஹப்ங்?
புரொபஸர்: எந்த போட்டியும் வம்பும் இல்லாம, எதிலும் பட்டுக்காம இருக்கிறது.
நடாஷா: maj, he is a kind of metrosexual, இல்லியா?
புரொபஸர்: ஓரளவுக்கு.
நடாஷா: He is cute!
கணேஷ்: சார் மெட்ரோசெக்ஷுவல்னா ரொம்ப ஸ்டைலா, சிட்டி பாய்ஸ் போல இருக்கிறது அப்படித் தானே?
புரொபஸர்: இது ஒரு stereotype. அதாவது மக்களை தட்டையா வகைப்படுத்துவது. கிராமத்து ஆண்கள் எல்லாரும் ஜல்லிக்கட்டில் மாட்டை விரட்டிக்கிட்டு, கம்பு கத்தி, வீச்சரிவாளோட சுத்தற மாதிரி நம் தமிழ் சினிமா ஒரு பிம்பத்தை உருவாக்கி இருக்கே அது ஒரு stereotype. இதே ஸ்டீரியோடைப்பின் படி நகரத்து ஆண்கள் மிகையான ஆண்மையோட இருக்க மாட்டார்கள். மாறாக, மென்மையாக கனிவாக கொஞ்சம் பெண்மை சாயலோட இருப்பார்கள். தலைமுடியை சாயம் அடிச்சுக்கிறது, காது குத்திக்கிறது, நீளமா முடி வளர்க்கிறது, பெண்கள் அதிகமா அணியுற வண்ணங்களில் தாமும் ஆடை அணிவதென்று ஒரு மார்க்கமா இருப்பாங்க. நகரத்துப் பெண்கள் படித்தவர்கள். சுயமாய் சம்பாதித்து சொந்த காலில் நிற்பவர்கள். ஆகையால் அவர்கள் ஆண்கள் முன்னால் கூந்தலில் பூ சூடி வெட்கி தலை குனிந்து இருக்க மாட்டார்கள். ஆண்கள் தம்மை சமமாய் நடத்த வேண்டுமென எதிர்பார்ப்பார்கள். இவர்களிடம் அணுக்கமாய் இருக்கும் ஆண்கள் ஆதிக்கம் செய்யாமல் பணிந்து போகிறவர்களாய் அல்லது பெண்களிடம் ஒரு தோழியைப் போல தயக்கமின்றி பழகுகிறவர்களாய் இருப்பார்கள். இத்தகைய ஆண்களே மெட்ரோமேல். அப்பாடா, எவ்வளவு பெரிய விளக்கம்!
கணேஷ்: ஆனால் சார், நானும் இந்த நகரத்தில் தான் பிறந்து வளர்ந்தேன். நான் அப்படி இல்லையே?
புரொபஸர்: தம்பி அதனால தான் அது ஒரு ஸ்டீரியோடைப்ன்னு சொன்னேன். அது உண்மை இல்லே
கணேஷ்: சார், நம் சினிமா நடிகர்களில் metromale ன்னா யார்?
புரொபஸர்: மாதவன்
கணேஷ் (மீசைக்காரரிடம்): சார் நீங்க எந்த டைப்?
மீசைக்காரர்: நான் சிங்கிள். காதலியோ மனைவியோ இல்ல.
கணேஷ்: ஏன் சார்?
மீசைக்காரர்: எனக்கேற்ற துணை வரணும்னு வெயிட் பண்றேன்.
புரொபஸர்: He is a quirkyalone.
கணேஷ்: ஓ... பிரம்மச்சாரி
புரொபஸர்: இல்லடா. பிரம்மச்சாரின்னா திட்டவட்டமான முடிவோட கல்யாணம் பண்ணாம தனியா வாழுறது. ஆனால் quirkyalone என்றால் தனக்கான பொருத்தமான துணை அமையும் வரை பொறுமையாக காத்திருக்கக் கூடியவர்கள். புரியுதா?
கணேஷ்: யெஸ் சார், Tinder app பயன்படுத்தாதவங்க.
புரொபஸர்: இந்த quirkyalone எனும் சொல்லைக் கண்டுபிடித்து முதலில் பயன்படுத்தினவங்க Sasha Cagen. அவங்க 2004இல் ஒரு புத்தகம் எழுதினாங்க. Quirkyalone: A Manifesto for 
Uncompromising Romantics. அப்படித் தான் இச்சொல் பிரபலமாச்சு.
கணேஷ் (நடாஷாவைப் பார்த்து): மேடம், எனக்கு உங்களைப் பார்த்தால் ஒரு ரஷ்ய கதை நினைவுக்கு வருது?
நடாஷா: என்ன
கணேஷ்: A Lady with a Dog.
நடாஷா: ஓ... செகாவ்
புரொபஸர்: ஆமா, இந்த கதை தமிழாக்கப்பட்ட போது ஒரு தமாஷ் நடந்துது தெரியுமா?
(இனியும் பேசுவோம்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.