டிஜிட்டல் கேமரா தொழில்நுட்பம்... ஓர் இணையதளம்!
நம் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளை புகைப்படங்களாக, வீடியோக்களாக எடுத்து வைத்துக் கொள்கிறோம்.


நம் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளை புகைப்படங்களாக, வீடியோக்களாக எடுத்து வைத்துக் கொள்கிறோம்.
தொடக்கக் காலத்தில் பிலிம் கேமராக்களில் போட்டோ எடுக்க வேண்டுமெனில், அதற்கான புகைப்பட நிலையங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது. பிலிம் கேமராவில் படமெடுக்கும் புகைப்படக்கலைஞர்கள் பலர் இருந்தனர். தற்போது, பிலிம் கேமராக்கள் இருந்த இடத்தில் டிஜிட்டல் கேமராக்கள் வந்துவிட்டன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் அலைபேசிகளில் கூட புகைப்படம், வீடியோ எடுக்கும் வசதிகள் வந்துவிட்டன.
இன்றைய நிலையில், புகைப்படமெடுப்பது சாதாரணமானதாகி விட்டது. இருப்பினும், தற்போது அதிகப் பயன்பாட்டிலிருக்கும் டிஜிட்டல் கேமரா கொண்டு சிறப்பான புகைப்படங்களை எடுப்பது தனிக்கலையாகவே இருக்கிறது. டிஜிட்டல் கேமரா குறித்தும், புகைப்படக்கலை குறித்தும் பல்வேறு விளக்கங்களைத் தரும் வகையில் ஓர் இணையதளம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த இணையதளத்தில் டிஜிட்டல் கேமராக்கள், தொடக்கநிலை வழிகாட்டி (Beginner's Guide), புகைப்படக்கலை உதவிக்குறிப்புகள், புகைப்படம் திருத்தியமைத்தல், SimCam எனும் முதன்மைத் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.
டிஜிட்டல் கேமராக்கள் எனும் தலைப்பின் கீழ் Quick Picks, What Kind of Camera, Research Tips, Where to Buy எனும் துணைத்தலைப்புகளில் புதிய டிஜிட்டல் கேமராக்கள் குறித்த மதிப்புரைகள் மற்றும் கேமராக்களை வாங்குவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் போன்றவை தரப்பட்டிருக்கின்றன.
தொடக்கநிலை வழிகாட்டி எனும் தலைப்பின் கீழ் The Camera , Camera Modes, The Half-Press, Controlling Flash, Processing and Printing, Introduction to Exposure, The Universal Stop, Shutter and Aperture மற்றும் Film Speed எனும் துணைத்தலைப்புகளில் கேமராவைப் புதிதாகப் பயன்படுத்துபவர்களுக்குத் தேவையான தொடக்கநிலை வழிகாட்டித் தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன.
Photography Tips எனும் தலைப்பின் கீழ் Camera Shake, The Digital Push, Alternative Landscapes, Golden Guides எனும் துணைத்தலைப்புகளில் சிறந்த ஒளிப்படமெடுப்பதற்கான சிறு நினைவுக்குறிப்புகள், தந்திரங்கள், உதவிக்குறிப்புகள் போன்றவை தரப்பட்டிருக்கின்றன.
Photo Editing எனும் தலைப்பின் கீழ் Film Magic, Essential Techniques, Software எனும் துணைத்தலைப்புகளில் எடுக்கப்பட்ட ஒளிப்படத்தைக் கொண்டு சிறப்பான ஒளிப்படமாக அதனை மாற்றுவது குறித்த செய்திகள் தரப்பட்டிருக்கின்றன.
நண்ம்இஹம் எனும் தலைப்பின் கீழ் தொடரெண் குறியட்டை கேமராக்களில் ஒளிப்படங்களுக்கான Shutter and Aperture Sim, Film Speed Sim, Camera Shake Sim எனும் துணைத்தலைப்புகளில் பல்வேறு உதவிக்குறிப்புகள் தரப்பட்டிருக்கின்றன.
டிஜிட்டல் கேமராக்களைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கும், டிஜிட்டல் கேமராக்களைப் புதிதாக வாங்கி புகைப்படமெடுக்க விரும்புபவர்களுக்கும் இந்த இணையதளம் மிகுந்த பயனளிக்கும் தளமாக இருக்கும். இந்த இணையதளத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் http://www.photonhead.com/ எனும் இணைய முகவரியைப் பயன்படுத்துங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...