வாங்க இங்கிலீஷ் பேசலாம் 144
புரொபஸர், கணேஷ், ஜுலி, டார்லிங் எனும் நாய், அதன் உரிமையாளர் பிங்கி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரின் காத்திருக்கும் அறையில் இருக்கிறார்கள்.


புரொபஸர், கணேஷ், ஜுலி, டார்லிங் எனும் நாய், அதன் உரிமையாளர் பிங்கி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கான உளவியலாளரின் காத்திருக்கும் அறையில் இருக்கிறார்கள்.
டார்லிங்: நீ என்கிட்ட சட்னி கிட்னிக்காக எல்லாம் சண்டை போடுவியா?
ஜூலி: சேச்சே. ஆனால் நல்ல கறித்துண்டா கிடைச்சால் I want the lion’s share. அப்போ நீ எங்கிட்ட போட்டிக்கு வரக் கூடாது.
டார்லிங்: You MCP!
ஜூலி: how dare you?
கணேஷ்: ஹை ஜாலி... ரெண்டு பேருக்கும் சண்டை ஆரம்பிச்சிடுச்சு. சார்...
புரொபஸர் (பிங்கியிடம் இருந்து திரும்பி): என்னடா?
கணேஷ்: அதென்ன சார் MCP?
புரொபஸர்: male chauvinistic pig!
கணேஷ்: ஓ...
புரொபஸர்: சுருக்கமா எளிமையா சொல்றதுன்னா ஆணாதிக்க வெறியன். Male chauvinist!
கணேஷ்: அது யார் தான் male chauvinist?
புரொபஸர்: பெண்களுக்கு பிடிக்காதவங்க எல்லாரும்.
பிங்கி: மிஸ்டர் புரொபஸர் you are so prejudiced.
கணேஷ்: சார் prejudiced என்றால்?
புரொபஸர்: முற்சார்பு, மனச்சாய்வு. ஒருவரை / ஒருவிசயத்தை புரிந்து கொள்ளும் முன்பே ஒரு வலிந்து திணிக்கப்பட்ட கருத்தை கொண்டிருப்பது. (பிங்கியிடம்) By the by பெண்கள் தம்மிடம் அடக்குமுறை செலுத்தும் அனைத்து ஆண்களையும் MCP என்று அழைப்பதில்லை தெரியுமா. ஆதிக்கவாதியான காதலன் / கணவன் மீது அவர்கள் பிரியம் கொண்டிருக்கையில் அதை அமைதியாய் ஏற்றுக் கொள்கிறார்கள்; அதை ஆண்மை என சொல்லி ஏற்கிறார்கள், சிலாகிக்கிறார்கள். ஆனால் அவர் மீது வெறுப்பு வந்ததும் "இத்தனை நாள் இப்படியொரு ஆணாதிக்கவாதியுடனா இருந்தோம்?" என பெருமூச்சு விடுகிறார்கள். சரி jokes apart, male chauvinism is a serious issue. உலகமே ஆண்களால் ஆண்களுக்கு ஆதரவாய் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதை பெண்ணியம் எதிர்க்கிறது.
(கணேஷ் திரும்பி நோக்க, டார்லிங்கும் ஜூலியும் கொஞ்சிக் கொள்கிறார்கள்)
கணேஷ்: சார்... இதைப் பாருங்க
புரொபஸர்: லயன்ஸ் ஷேர் யாருக்குன்னு ஒரு டீலுக்கு வந்திருப்பாங்க...
கணேஷ்: லயன்ஸ் ஷேர் அப்டீன்னா? காட்டு விலங்குகளின் நியாயம் என பொருளா?
புரொபஸர்: கிட்டத்தட்ட. ஒரு பரிமாற்றத்தில் ஒருவருக்கு மட்டுமே அதிக லாபம் கிடைப்பதை லயன்ஸ் ஷேர் என்பார்கள். ஒரு தொழிற்சாலையின் உற்பத்தியில் உழைப்பாளிக்கு முக்கிய பங்கு உள்ளது; அவன் உற்பத்திக்கு காரணமாகிறான். ஆனால் லாபத்தில் முதலாளிக்கே லயன்ஸ் ஷேர் போகிறது என்றார் கார்ல் மார்க்ஸ். இந்த idiom ஏசாப் நீதிக்கதையில் இருந்து தோன்றியது தெரியுமா? Partnership with the mighty is never trustworthy என்பது தான் இக்கதையின் சாரம் மற்றும் நீதி. அதாவது ஒரு டீலிங்கில் ஒரு பக்கம் வலுத்தவர்களும் இன்னொரு பக்கம் இளைத்தவர்களும் இருந்தால் இளைத்தோர் ஏமாற்றப்படுவார்கள். Might என்றால் ஆற்றல். Mighty என்றால் பலம் பொருந்தியோர்.
பிங்கி: பெண்ணியமும் இதைத் தான் சொல்கிறது.
கணேஷ்: என்ன?
பிங்கி: கணவன் மட்டும் வேலைக்கு போகிறவனாய் இருந்தால் மனைவி அடிமையாக நடத்தப்படுவாள். அவளுக்கு நீதி கிடைக்காது.
கணேஷ்: குடும்பத்தில் நீதி ஏன் வேண்டும்? அதென்ன நீதிமன்றமா? குடும்பத்தில் அன்பல்லவா முக்கியம்?
பிங்கி: உனக்கு ஒரு மண்ணும் தெரியாது. ஷட் அப். பெண்களை யாரும் காது கொடுத்துக் கேட்பதில்லை. நீ கூட இப்போது எனக்கு நீதி மறுக்கிறாய்.
கணேஷ்: சரி நான் பேசலைங்க. சார் அதென்ன ஏசாப் கதை?
புரொபஸர்: ஒரு நாள் ஒரு சிங்கம், ஒரு ஆடு, ஒரு செம்மறி ஆடு மற்றும் ஒரு பசு வேட்டைக்கு போயின. வேட்டையில் கிடைத்த கறியை பங்கு போடத் தொடங்கின. அப்போது சிங்கம் சொல்லிற்று. "இதை நான்காய் பங்கிடுவோம்''. ஆடும் செம்மறியாடும் பசுவும் தலையசைத்தன. சிங்கம் மேலும் சொன்னது, "முதல் பங்கு எனக்கு. ஏனெனில் நானே காட்டின் ராஜா''. ஆடும் செம்மறியாடும் பசுவும் இதற்கும் தலையசைத்தன. அடுத்து சிங்கம் சொன்னது, "ரெண்டாவது பங்கும் எனதே. ஏனெனில் உங்களில் நானே வலிமையானவன். மூன்றாவது பங்கு கூட எனக்கே. அது இந்த அணியின் உறுப்பினனாய் எனக்குச் சேர வேண்டியது.'' ஆடும் செம்மறியாடும் பசுவும் வேறு வழியின்றி இதற்கும் தலையசைத்து விட்டு கேட்டன, "ராஜா அந்த நாலாவது பங்கு?'' சிங்கம் சொன்னது: "அதில் எவனாது கை வைத்தால் அவன் அடுத்த நொடி பிணமாவான்.''
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...