தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மர வேலைப்பாடுகள்...

இரும்பு, பிளாஸ்டிக்  பொருள்களின்  பயன்பாடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்றாலும், மக்களுக்கு மரப்பொருட்களின் மீதான ஆர்வம் குறைந்து போய்விடவில்லை.

News image
Updated On :26 மார்ச் 2019, 7:13 am

பி.ராஜகுமாரி


இரும்பு, பிளாஸ்டிக்  பொருள்களின்  பயன்பாடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்றாலும், மக்களுக்கு மரப்பொருட்களின் மீதான ஆர்வம் குறைந்து போய்விடவில்லை. எனவே, மர வேலைப்பாடுகளுடனான கலைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.    

கணினி மற்றும் இயந்திரங்கள் உதவியுடன், வீடுகளுக்குத் தேவையான பல்வேறு மரப்பொருட்கள் செய்யும் பணி எளிமையாக்கப்பட்டு இருக்கிறது.  என்றாலும் அவற்றை  முழுமையாகச் செய்து முடிக்க மர வேலை செய்பவர்களது தேவையும் இருந்து கொண்டுதானிருக்கிறது.   வீட்டிலுள்ள மரப்பொருட்களில் ஏற்படும் குறைகளைச் சரி செய்வதற்கும் மரவேலை செய்பவர்களின் தேவை இருக்கத்தான் செய்கிறது. அவர்களுக்கு உதவும் வகையில் மர வேலைகளுக்கான அடிப்படைத் தகவல்களைச் சொல்லித் தருவதற்கென்று ஓர்  இணையதளம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. 

இந்த இணையதளத்தில்  Timber, Joints, Finishes,  Adhesives, Components, Tools,  Facts and Tips  ஆகிய  முதன்மைத் தலைப்புகள் தரப்பெற்றிருக்கின்றன.  

Timber தலைப்பின் கீழ்  Solid Timber,  Particle Board ,  Plywood,   Medium Density Fiberboard - MDF, Veneer ஆகிய துணைத்தலைப்புகளில் மர வகைகள் துணைத்தலைப்புகளாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் துணைத் தலைப்புகளைச் சொடுக்கினால், அந்த மரங்களைப் பற்றிய தகவலுடன் அவற்றுக்கான பயன்கள்  மற்றும் பயன் குறைபாடுகள்   போன்றவை தரப்பெற்றிருக்கின்றன. 

Joints எனும் தலைப்பின் கீழ்,  Butt Mitre, Rebate ,  Housing,  Halving ,  Dowel ,  Biscuit ,  Dovetail,   Mortise and Tenon, Bridle , Tongue and Groove  எனும் துணைத்தலைப்புகளில் மரவேலைகளுக்கான இணைப்புகள் படத்துடன் விளக்கிக் காண்பிக்கப்பட்டுள்ளன.

இதுபோன்று, பிற முதன்மைத் தலைப்புகளின் பல துணைத் தலைப்புகளும் உள்ளன.  மரவேலை தொழில்நுட்பத்தை முழுமையாகத் தெரிந்து கொள்ளும் வகையில்  இந்த இணையதளம் உள்ளது.  

தொழிற்பயிற்சி நிலையங்களில்    மரவேலைப் பணியாளர்,  பயிற்சி பெறுபவர்கள், கட்டுமானப் பணிகளைச் செய்து வருபவர்கள் மற்றும் மரவேலைகளைப் பற்றிய அடிப்படைத் தகவல்களை அறிந்து கொள்பவர்களுக்குப் பயனுடையதாக அமைந்திருக்கும் இத்தளத்திற்குச் செல்ல http://www.woodworkbasics.com/  எனும் இணையமுகவரியைப் பயன்படுத்தலாம்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.