திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மாணவர்கள் கண்டுபிடித்த... புதிய நீர் மின் உற்பத்தி கருவி!

புதிய கண்டுபிடிப்புகளுக்கான தேசிய அளவிலான போட்டியில் சிறந்த நீர் மின் உற்பத்திக் கருவியைக் கண்டுபிடித்து புணேவைச் சேர்ந்த இரு மாணவர்கள் முதல் பரிசு ரூ. 10 லட்சம் வென்றுள்ளனர்.

News image
Updated On :26 மார்ச் 2019, 6:59 am

இரா. மகாதேவன்

புதிய கண்டுபிடிப்புகளுக்கான தேசிய அளவிலான போட்டியில் சிறந்த நீர் மின் உற்பத்திக் கருவியைக் கண்டுபிடித்து புணேவைச் சேர்ந்த இரு மாணவர்கள் முதல் பரிசு ரூ. 10 லட்சம் வென்றுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம், புணேவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சர்வதேச நிறுவனம் KPIT (Kirtane and Pandit Information Technologies). இந்த நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, நீதி ஆயோக்கின் அடல் கண்டுபிடிப்பு திட்டம், தொழில்நுட்பக் கல்விக்கான அனைத்திந்திய ஒழுங்கமைப்புக் குழு உள்ளிட்ட பல அமைப்புகளுடன் இணைந்து ஆண்டுதோறும் தேசிய வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு கண்டுபிடிப்பு போட்டிகளை நடத்தி வருகிறது.

"எதிர்காலத்துக்கான சக்தி மற்றும் இயக்கம்' என்ற பொருளில்  இந்த ஆண்டு நடத்திய போட்டி,   புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி, மின் சேமிப்பு, மின் பயன்பாடு மற்றும் தூய, பாதுகாப்பான, பகிரப்பட்ட, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இயக்கம் குறித்த பிரச்னைகளில் எதிர்காலத் தீர்வுகளை நோக்கியதாக  அமைந்திருந்தது.

KPIT Sparkle 2019 போட்டி கடந்த ஆண்டு தொடங்கி, நிகழாண்டு பிப்ரவரி மாதம் வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் நாடு முழுவதும் இருந்து அறிவியல் மற்றும் பொறியியல் துறை மாணவர்கள் குழுவைச் சேர்ந்த 22 ஆயிரம் பேர் தங்களுடைய 2 ஆயிரம் கண்டுபிடிப்பு உத்திகளை சமர்ப்பித்தனர். இவர்களில் இருந்து 100 குழுவினர் மட்டும் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை மேம்படுத்தித் தர வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவ்வாறு மேம்படுத்தி அளிக்கப்பட்ட மிகச் சிறந்த உத்திகள் மற்றும் செயல் மாதிரிகளில் இருந்து 30 திட்டங்கள் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டன.
இந்த 30 குழுவினர் தங்களின் மேம்பட்ட செயல்படும் மாதிரிகளுடன் கடந்த பிப்ரவரி 23, 24 ஆம் தேதிகளில் புணே பிம்ப்ரி சின்ச்வாட் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பங்கேற்றனர். 

இதில், புணேவைச் சேர்ந்த ராணுவ தொழில்நுட்பக் கழகத்தின் (Army Institute of Technology) சிவம் மிஷ்ரா (21), சச்சின் திவிவேதி (23) ஆகியோர் அடங்கிய பங்ஹம் அவ்ன்ஹ குழு அளித்திருந்த செங்குத்து அச்சு நீர் விசையாழி (Vertical Axis Water Turbine) கண்டுபிடிப்பு பிளாட்டினம் விருது மற்றும்  ரூ. 10 லட்சம் ரொக்கப் பரிசை வென்றது.

பொதுவாக, நீர் விசையாழிகளைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதில் உள்ள மிகப் பெரிய பிரச்னை இதற்கு அணைக்கட்டு அவசியம் என்பது தான். இந்த கட்டமைப்பை உருவாக்க மிக அதிக செலவாகும். இந்த நிலைதான் இதற்கு மாற்றுமுறையைத் தேடவேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியது. 

புணே அக்வா குழுவால் உருவாக்கப்பட்டுள்ள செங்குத்து அச்சு நீர் விசையாழி எளிமையானதாக வடிமைக்கப்பட்டுள்ளதோடு, அதிக மின்சாரத்தையும் உற்பத்தி செய்யக் கூடியதாக உள்ளது. குறிப்பாக, வழக்கமான நீர் விசையாழிகளைக் காட்டிலும் 24 சதவீதம் அதிக திறன்மிக்கதாக இது உள்ளதோடு, இதற்கு அணைக்கட்டு அமைப்பும் தேவையில்லை. 

இதுகுறித்து புணே அக்வா குழுவைச் சேர்ந்த சச்சின் கூறுகையில், ""எங்களுடைய தயாரிப்பில் மேம்பட்ட வடிவிலான பிளேடுகளை உருவாக்கினோம். கிம்பல் மெக்கானிசத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த பிளேடுகள், நீரின் ஓட்டத்துக்கு ஏற்ப தானாக சாய்ந்து, புரண்டு விசையாழியின் மின் உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது'' என்கிறார்.

இந்த நீர் விசையாழியின் புதிய வடிவமைப்பை பெரிய அளவிலான மின் உற்பத்தித் திட்டங்களில் மட்டுமின்றி, சிறிய அளவிலான திட்டங்களிலும் பயன்
படுத்த முடியும். தண்ணீரின் திசை, நீர்மட்ட உயரம் எப்படி மாறினாலும் அதற்கேற்ப மாறிக்கொள்ளும் கிம்பல் மெக்கானிச நீர் விசையாழி என்பது இதன் கூடுதல் சிறப்பு. வழக்கமான நீர் மின் உற்பத்தி திட்டங்களில் இந்த வசதி கிடையாது. இதை ஆற்றுப் பாலங்களின் அடியிலும், ஆற்றின் மேலும், கடல், பெருங்கடல் பகுதியிலும் பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து அக்வா குழுவின் சிவம் கூறுகையில், ""முதலில் நாங்கள் செங்குத்து அச்சு காற்று விசையாழியைத்தான் வடிவமைத்தோம். ஆனால், அது மிகக் குறைந்த மின்சாரத்தை உற்பத்தி செய்ததோடு, நிறைய எதிர்மறை விளைவுகளை அளித்தது. அதன் பிறகு, அதற்காக செய்த பிளேடுகளில் பாதியை வெட்டி நீக்கினோம். இதையடுத்து, அது முன்பைவிட திறன்மிகுந்ததாக இருந்தது. ஆனால், அதை காற்று விசையாழியில் பயன்படுத்த முடியவில்லை. பிறகுதான், அதை வைத்து நீர் விசையாழியை வடிவமைத்தோம். 

Story image

இந்தியாவில் மின் சக்திக்கான மிகப் பெரிய சந்தை வாய்ப்பு உள்ளது. தற்போது, இதுபோன்ற நீர் விசையாழிகளை யாரும் பயன்படுத்தவில்லை. எனவே, நாங்கள் புதிதாக அதைத் தொடங்கியிருக்கிறோம். எங்கள் தயாரிப்பு தனிப்பட்ட ஒருவருக்கு நேரடியாக விற்கக்கூடியதல்ல. இதற்கு நிறைய கணக்கீடுகள், திறன்மிக்க மின் பாதைகள் அவசியம். இதுகுறித்த அனைத்து பார்வைகளுடன் எங்களுடைய தயாரிப்பை மேற்கொண்டு மேம்படுத்தி வருகிறோம்'' என்றார்.

இந்தப் போட்டி குறித்து KPIT நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ரவி பண்டிட் கூறுகையில், ""புதிய தொழில்நுட்பப் போக்குகளை ஆராய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் முயற்சியாகவே Sparkle போட்டிகள் நடத்தப்படுகின்றன. இது தொழில்நுட்பப் பயன்பாட்டில் ஒரு நிலைத்தன்மையை எட்டுவதற்கான முயற்சியின் வெளிப்பாடும்கூட. ஒரு தூய்மையான, சாதுர்யமான மற்றும் பாதுகாப்பான உலகை உருவாக்குவதற்கு, மறுகற்பனை நகர்வுடன் கூடிய சுற்றுச்சூழல் குறித்த நமது புதிய பார்வைக்கு 
இந்தப் போட்டிகள் முக்கியமான பங்களிப்பாக இருக்கும்'' என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.