/

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 216

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள்.

News image
Updated On :12 நவம்பர் 2019, 4:20 am

ஆர்.அபி​லாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள். அங்கே அவர்கள் நடாஷா என்னும் பெண்ணுடன் சேர்ந்து மருத்துவரின் அறையில் அரட்டையடிக்கிறார்கள். இந்தியர்கள் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதில் வரும் பிழைகளை உண்மையென நம்பி தவறான பிரயோகங்களைத் தொடர்ந்து பயன்படுத்தும் Indianism பற்றி பேச்சு திரும்புகிறது. அவர்கள் பல இந்திய ஆங்கில தவறுகளைப் பற்றி பேசுகிறார்கள்.

கணேஷ்: டாக்டர் சற்று முன்னர் lose my mind என சொன்னீங்களே...

சேஷாச்சலம்: ஆமா...

கணேஷ்: அப்படீன்னா மனதை இழப்பதா? மனதை அவளிடம் தொலைத்து விட்டேன் என சொல்லுவாங்களே அப்படியா? ஆனா நீங்க சொன்ன வாக்கியத்தில் அபத்தத்தை சகிக்க முடியாது என்னால் என ஆரம்பிக்கிறீங்க. அப்படி நெகட்டிவ்வான விசயத்துக்கு இது பொருந்தி வரலையே.

சேஷாச்சலம்: இதுக்கு கடுமையான கோபத்தில் கட்டுப்பாட்டை இழப்பது என அர்த்தம் வரும். அல்லது பயத்திலோ குழப்பத்திலோ கோபத்திலோ முட்டாள்தனமாக நடந்து கொள்வது என்றும் வரும். When he saw his wife cheating on him, he lost his mind. தன் மனைவி தகாத உறவில் ஈடுபட்டிருப்பதை அவன் அறிந்து கொண்ட போது தன் கட்டுப்பாட்டை முழுக்க இழந்தான். இதே போல lose somebody’s reason, lose one’s sanity, go out of mind என்றும் சொல்லலாம். இந்த பயன்பாட்டுக்கும் பைத்தியம் பிடிப்பது எனும் பொருளும் உள்ளதை நாம் மறக்கக் கூடாது. 

கணேஷ்: டாக்டர், cheating என்றால் ஏமாத்துறது தானே, ஏன் அதோட ர்ய் சேர்க்கிறீங்க?

சேஷாச்சலம்: நல்ல கேள்வி. Cheat என்றால் வெறுமனே ஏமாத்தறது. ஆனால் on என்பது அடுத்து உடனே வரும் போது அது தாம்பத்ய உறவில் வரும் துரோகமாகிறது.  

நடாஷா: டாக்டர் இங்கே உங்க கிட்ட பேசிக்கிட்டு இருந்தா என்னோட ஸ்ட்ரெஸ் பெரிசா குறைஞ்சிடும் போல இருக்கு. அதுக்கு நன்றி.

சேஷாச்சலம்: அது நல்லது தான். நமக்கு பிடிச்ச மாதிரி விசயங்களில் ஈடுபடுறது, பிடிச்ச மாதிரி விசயங்களை அதிகமாக பேசுறது, நம்மை ஏதாவது ஒன்றில் இப்படி இழப்பது ஸ்ட்ரெஸ் குறைய நல்லது. ஆனால் அந்த மாத்திரைகளையும் எடுத்துக்க மறக்கக் கூடாது. ப்ர்ஜ் க்ர்ள்ங் தான் கொடுத்திருக்கேன். எந்த ஆபத்தும் வராது. பயப்படாதே.

நடாஷா: தேங்க்ஸ் டாக்டர். இப்போ நான் உங்களைப் பார்க்க வர வேண்டிய அவசியமே இல்ல. ஆனால் காலையில் இருந்தே I was a little nervous, jittery, பதற்றமாகவே இருந்துது. அது தான் எட்டிப் பார்த்திட்டு போகலாம்னு வந்தேன். Now I feel better.  

சேஷாச்சலம்: வெரி குட். Do you have anything on your mind?

நடாஷா: Plenty Doctor. ஈவினிங் என் நாய்க்குட்டியை ஸ்விம்மிங் அழைச்சிட்டு போகணும். ஸ்பா கூட்டிட்டு போய் அவனோட நகத்தை வெட்டி விடனும்.
கணேஷ்: கொடுத்து வைத்த நாய்க்குட்டி.

நடாஷா (கணேஷிடம்): ஷட் அப்.

சேஷாச்சலம்: ஹா...ஹா... நாயை அப்படி அழைச்சுட்டு போறது அவளுக்குப் பெரிய ள்ற்ழ்ங்ள்ள் க்ஷன்ள்ற்ங்ழ் கணேஷ். அவளோட பதற்றத்தை வெகுவாக குறைக்கிற ஒரு நடவடிக்கை. அந்த நாய் அவளுக்கு அவளோட ஒரு extension. She projects her feelings on her pet. அது அழகாக வசதியாக இருக்கும் போது தானும் அப்படி மகிழ்ச்சியா இருக்கிறதா அவளுக்குத் தோன்றும். ஆன்ற்...
நடாஷா: என்ன டாக்டர்?

சேஷாச்சலம்: when you say something is on your mind the meaning is entirely different.   அதுக்குப் பதிலா there are plenty of things in my mind என்று நீ சொன்னால் சரியாக இருக்கும்.

நடாஷா: புரியல டாக்டர்.

சேஷாச்சலம்: விளக்குறேன்.

(இனியும் பேசுவோம்) 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.