வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 257
ஊரடங்கு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.


ஊரடங்கு பிரகடனம் பண்ணப்பட்ட நிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி தன்னை சோழப் பேரரசின் சக்ரவர்த்தியாக நம்பி தனது சேவகர்களுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறார். அவர் கணேஷிடம் ஆங்கிலத்தில் இருந்து பல கேள்விகளைக் கேட்டு சோதிக்கிறார். இதனிடையே எல்லையில் எதிரிப்படை முன்னேறி வருவதாகத் தகவல் வருகிறது. எதிரியை திக்குமுக்காடச் செய்ய வீரபரகேசரி பல விநோதத் திட்டங்களை வகுக்கிறார். ஆனால் அப்போது யாங் மீ எனும் சீன அழகியான நடிகை வீரபர கேசரியைப் பார்க்க வந்து அவரது ராணியாகி அந்தப்புரத்தில் குடிபெயர்கிறார்.
மன்னர் வீரபரகேசரி விளம்பரத்துறை அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் ல்ட்ர்ற்ர்ள்ட்ர்ர்ற் இல் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். அவர் நடக்கிறார், யோசிக்கிறார், கோப்புகளைத் திறந்து வாசிக்கிறார், புறாவுக்கு உணவளிக்கிறார், அடிபட்ட மானின் காலில் மருந்திடுகிறார், புறாவைத் தின்ன வந்த பருந்துக்கு அறிவுரை செய்து அதைத் திருத்துகிறார்... இப்படி பல காட்சிகள் வெள்ளைக்காரர்களால் படமாக்கப்படுகின்றன. இதை கணேஷ் மற்றும் புரொபஸர் பார்த்து நிற்கிறார்கள்.
கணேஷ்: சார் ஒரு சந்தேகம்... இந்த போட்டோஷூட் என்கிறார்களே, இதை அடிக்கடி இப்போது மக்கள் பயன்படுத்துவதைக் கேட்கிறேன். முன்பெல்லாம் இது அவ்வளவா இல்லே இல்ல? மக்கள் ஒரு பிலிம் கேமராவை எடுத்துக்கிட்டு போட்டோ எடுத்துப்பாங்க... இல்ல ஸ்டுடியோவில் இருந்து ஒருத்தரை அழைச்சு வந்து ஷூட் பண்ணுவாங்க.
புரொபஸர்: ஆமா... நீ ரெண்டாவதா சொன்னியே ஸ்டுடியோ போட்டோகிராபர் வீட்டுக்கோ மண்டபத்துக்கோ வந்து ஷூட் பண்ணுறது அதுதான் photoshoot என இப்போது சொல்லப்படுது. அதாவது புரொபஷனலா ஒரு கலைஞரால் ஓர் ஈவெண்ட் ஷூட் பண்ணப்படுறது தான் போட்டோஷூட். நம்ம பாட்டுக்கு போனில் படம் பிடிச்சா அது பேரு snapshot.
கணேஷ்: நாம கேஷுவலா படம் புடிச்சா அது ஸ்நேப்ஷாட். ஒரு விசயத்தைப் பற்றிய சுருக்கமான பார்வையைக் கூட ஸ்நேப்ஷாட்டுன்னு தானே சொல்லுவோம் சார்?
புரொபஸர்: அப்படி இல்ல... கடந்த காலத்தோடு ஒரு சுருக்கமான அனுபவம் அல்லது தற்காலிகமான காட்சியைப் பற்றிய பார்வை அல்லது ஒரு சித்திரம் எனச் சொல்லலாம். It gives a snapshot of how our work life was in the last few weeks before Corona struck us. அதாவது கரோனா வைரஸ் தாக்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பான தொழில்வாழ்க்கை எப்படி இருந்ததென்ற சித்திரத்தை இது அளிக்கிறது.
கணேஷ்: ஓ... அப்படியா? சார்... இன்னொரு விசயம், போட்டோ பிடிக்கும்போது ஒரு ஸ்நேப் எடுக்கவா எனக் கேட்போமா, ஸ்நேப் என்றாலே புகைப்படம் எடுக்கிறதுன்னுதான் பொருளா?
புரொபஸர்: ஸ்நேப் என்றால் பல அர்த்தங்கள். சட்டுன்னு அறுந்து போறது. The strings on the veena snapped as she played at a furious pace. அவள் வேகமாய் ஆவேசமாய் வீணையை மீட்ட, தந்திகள் சட்டென அறுந்தன. சடக், சரக் என சத்தமிடுவதும் ஸ்நேப் தான். டக்கென ஒரு ஒலியுடன் ஒன்றை அசைப்பதும் ஸ்நேப் தான் - he snapped his bag shut. அவன் தன் பையை சரெக்கென வேகமாய் மூடினான். ஒரு நாய் சட்டென காலைக் கடிப்பதைக் கூட ஸ்நேப் என்றுதான் சொல்வோம். Snappy dog என அப்படியான கடிநாய்களைச் சொல்வோம்.
கணேஷ்: நாய் மாதிரி கடிக்கிற மனிதர்கள்?
புரொபஸர்: "வள்... வள்' ளுன்னு விழுகிற மக்களுக்கும் இது பொருந்தும், she snapped when I forgot to get her the anniversary gift.
அவளுக்கு நான் திருமணநாள் பரிசைக் கொடுக்க மறந்தபோது கோபத்தில் வெடித்தாள். அதாவது to lose self}control, to freak out. அப்படி கோபமா வேகமா கத்துறதையும் Get lost, she snapped எனச் சொல்லலாம்.
கணேஷ்: சார் இப்போ அந்த சொல்லோட பொதுவான அர்த்தம் புரியுது. ஆனா அது ஏன் புகைப்படம் எடுக்கிறதை snap என சொல்லணும்?
புரொபஸர்: அந்த போட்டோ புடிக்கிற சத்தத்துக்காக. இது ஒலியின் அடிப்படையின் உருவான சொல். To snap a picture.
வீரபரகேசரி (கலாசாரத் துறை அமைச்சரிடம்): யோவ் இப்படி மானையும் புறாவையும் தடவி போஸ் கொடுத்து போரடிக்குது, சீக்கிரம் மயிலைக் கொண்டு வாய்யா?
அமைச்சர்: உத்தரவு மன்னா (போகிறார்)
சற்று நேரத்தில் அவர் "பதினாறு வயதினிலே' மயிலை அழைத்து வருகிறார். பின்னாடியே சப்பாணி வருகிறான்.
சப்பாணி: செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா...
மயிலு: ஹொய் ஹொய்
வீரபரகேசரி: யோவ், who are these county bumpkins?
அமைச்சர்: மயிலு மன்னா...
வீரபரகேசரி: நான் சொன்னது நிஜ மயிலை.
அமைச்சர் தலையைச் சொறிகிறார்: காட்டுல இருந்து இதோ பத்திக்கிட்டு வரேன் மன்னா...
(இனியும் பேசுவோம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...