2020-ஆம் ஆண்டு உலக வரலாற்றிலேயே சோகமான ஆண்டாக அமைந்துவிட்டது. கரோனா என்ற கொடிய நோய்க்கு உற்றார், உறவினர்கள் என லட்சக்கணக்கானோரை இழந்துவிட்டோம்.
மக்களை வீட்டிலேயே முடக்கி வைத்து தனிமையென்ற அச்சத்தை கரோனா நம்மிடம் உருவாக்கிவிட்டது. இப்படி, 2020-இல் பெரும்பாலான நாள்கள் மக்கள் வீட்டிலேயே கழித்துவிட்டனர். வீட்டில் முடங்கி இருந்தவர்களுக்கும், மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களுக்கும் உற்ற துணையாக இணையம்தான் இருந்தது.
அப்படிப்பட்ட கரோனா தொற்று, கூகுள் தேடலில் இந்தியர்களிடம் தோல்வி அடைந்துள்ளது. நிகழாண்டு ஜனவரி 1 முதல் நவம்பர் 10 வரையிலான காலகட்டத்தில் கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடியது என்ன என்ற விவரம் என்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டி குறித்து இந்தியர்கள் அதிகமானோர் கூகுளில் தேடியதால் அது முதலிடத்தில் உள்ளது. கரோனா குறித்த தேடல் பின்னுக்கு தள்ளப்பட்டு இரண்டாம் இடத்தில் உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் மூன்றாம் இடத்திலும், பிரதமரின் விவசாயத் திட்டம் நான்காம் இடத்திலும், பிகார் பேரவைத் தேர்தல் தொடர்பான் தேடல்கள் ஐந்தாம் இடத்திலும் உள்ளன.
தனிநபர்கள் தொடர்பான தேடலில், அமெரிக்க அதிபர் ஜோபிடன், பத்திரிகையாளர் அர்னப் கோஸ்வாமி, கரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் திரைப்பட பாடகி கனிக்கா கபூர், நடிகர் அமிதாப் பச்சன், நடிகை கங்கனா ரனாவத், ரிஹா சக்கரவர்த்தி ஆகியோர் கூகுள் தேடலில் முதல் ஐந்திடம் பிடித்துள்ளனர்.
"எப்படி' என்ற தேடலில் "பன்னீர் செய்து எப்படி?' என்பது முதலிடத்திலும், நோய் எதிர்ப்புச் சக்தியை எப்படி அதிகரிப்பது?', "டல்கோனா காபியைச் செய்வது எப்படி?', "பான் -ஆதாரை இணைப்பது எப்படி?' "கிருமி நாசினியை வீட்டில் செய்வது எப்படி?' ஆகியவை முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன.
இதேபோல் "வீட்டிற்கு அருகாமையில்' என்ற தேடலில் "உணவுப் பொருள் கடைகள் எவை?' என்ற தேடல் முதலிடத்திலும், அடுத்ததாக "கரோனா பரிசோதனை மையம் எங்குள்ளது?', "இரவு நேர தங்கும் விடுதி', "மடிக்கணினி கடை', "பிராட் பேண்ட் சேவை' ஆகியவற்றை அதிக அளவில் தேடியுள்ளனர்.
இந்தியர்கள் கிரிக்கெட் போட்டியை அதிகமாக நேசித்து வருகிறார்கள் என்பது நிகழாண்டு கூகுள் தேடலின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
- அ.சர்ஃப்ராஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சிலிண்டர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; இந்தியாவை பாதிக்குமா? - மத்திய அரசு விளக்கம்!

சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆர்ப்பாட்டம்!
ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!
எரிபொருள் தட்டுப்பாடு: இந்தியாவிடம் உதவி கேட்கும் அண்டைநாடுகள்!
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

