வாங்க இங்கிலீஷ் பேசலாம் 273 

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்டநிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.
வாங்க இங்கிலீஷ் பேசலாம் 273 
Updated on
2 min read

ஊரடங்கு பிரகடனம் செய்யப்பட்டநிலையில் புரொபஸர், கணேஷ் மற்றும் ஜூலி புரொபஸரின் நண்பரான வீரபரகேசரியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீரபரகேசரி தன்னை சோழப் பேரரசின் சக்கவர்த்தியாக நம்பி தனது சேவகர்களின் உதவியுடன் தனது பெரிய வீட்டில் வாழ்ந்து வருகிறவர். அங்கு மன்னரின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது. அப்போது பயன்படுத்தப்படும் சுவாரஸ்யமான பழமொழியான you cannot have the cake and eat it too என்பதன் பொருளைப் பற்றிக் கேட்கும்போது அதை விளக்கும் ஜூலி you cannot have it both ways என புதிய சொலவடையைப் பயன்படுத்துகிறது. என்னதான் பொருள் இரண்டுக்கும்? பார்ப்போமா?
ஜூலி: முதலில் கேக் விசயத்துக்கு வருகிறேன். இப்போ உன் கிட்ட ஒரு கேக் இருக்கு. 
கணேஷ்: எங்கே? 
ஜூலி: இருக்குன்னு வச்சுக்கயேன்.
கணேஷ்: சரி வச்சுக்கிறேன். என்ன கேக்? 
ஜூலி: ஏதோ ஒண்ணு. கேக் இருக்குன்னு நினைச்சுக்கோ. அதையே உனக்கு சாப்பிடவும் ஆசையா இருக்கு. அதேநேரத்தில் அப்புறமா சாப்பிட வச்சுக்கணுமுன்னும் தோணுது. ஒரு பக்கம் எச்சில் ஊறுது, ஆனால் மூளை அதை இரவு உணவுக்குப் பிறகு சாப்பிட வச்சுக்கோன்னும் சொல்லுது. ஒண்ணு செய்தால் இன்னொண்ணு சாத்தியமில்லை. சரியா? 
கணேஷ்: சரிதான். 
ஜூலி: இதுவரைக்கும் புரிஞ்சுதே. இப்போ, இதேமாதிரி வாழ்க்கையில் நிறைய சந்தர்ப்பங்கள் வரும். ஒரு பெண்ணைப் பார்த்து ஆசைப்படுறே. போய் அவளிடம் "ஐ லவ் யூ'சொன்னால் செருப்படியோஅவமானமோ நிராகரிப்போ ஒரு பக்கம் கிடைக்கலாம், அல்லது அவள் ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படலாம். 
சொல்லாமல் விட்டால் ரெண்டுமே சாத்தியமில்லை.
கணேஷ்: சொல்லாமலே காதலி ஏத்துக்க நான் என்ன சொல்லாமலே லிவிங்க்ஸ்டனா? 
ஜூலி: கரெக்ட். பரீட்சைக்கு முந்தினநாள் ஒன்று படிக்கலாம் அல்லது ஜாலியாக சினிமா பார்க்கலாம், பொண்ணுங்களிடம் சாட் பண்ணலாம். அப்படிப் பண்ணினா பரீட்சையில் கோட்டை விட வேண்டியதுதான். ரெண்டுமே வேணுமுன்னா முடியாது. இங்க கேக் என்பது நேரம். புரியுதா?
கணேஷ்: என் கையில் இருக்கிற கேக் என்பது என்னிடம் இருக்கிற அவகாசம், அதை வைத்து ரிஸ்க் எடுப்பது அந்த கேக்கை சாப்பிடுவது, ரிஸ்க் எடுக்காமல் இருப்பது அதை பின்னாளுக்கு ஒத்தி வைப்பது. இதுதான் you cannot have it both ways என்பதன் பொருளும். 
புரொபஸர்: இதில் ட்ஹஸ்ங் எனும் வினைச்சொல்தான் சுவாரஸ்யம். 
கணேஷ்: எப்படி சார்? 
புரொபஸர்: Have என்பதற்கு ஓர் உணவுப்பொருளை வைத்திருப்பது மற்றும் அதைச் சாப்பிடுவது என இரட்டைப்பொருள் உண்டு. You need to have breakfast early என்றால் நீ சீக்கிரமாகவே காலையுணவை அருந்த 
வேண்டும் எனப் பொருள். I have a lot a money with me என்றால் என்னிடம் நிறைய காசு இருக்கிறது எனப் பொருள். have எனும் சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள். you cannot have a cake and eat it too எனும் பழமொழியில் have என்பது கேக்கை வைத்திருப்பதாஅல்லதுசாப்பிடுவதாஎனகுழப்பம் ஏற்படுகிறது. you cannot keep a cake ஆஅல்லது you cannot eat a cakeஆ என முதல் பாதியைக் கேட்கும்போது பொருள் மயக்கம் ஏற்படுகிறது. இதை வைத்தே இந்த பழமொழி இரட்டைப் பொருளுடன் சுவாரஸ்யமாகிறது. 
கணேஷ்: சூப்பர் சார். தெளிவா புரிஞ்சிருச்சு. அந்த bite the bullet என்பதையும் புரிய வையுங்க. அதை அடிக்கடிகேள்விப்பட்டிருக்கேன். என்ன அர்த்தமுன்னுதான் விளங்கல. 
புரொபஸர்: அந்த காலத்தில் போரின்போது காயப்படும் ஒரு வீரனுக்கு அறுவைச் சிகிச்சை செய்து குண்டடிபட்டு உடம்புக்குள் போன உலோகத்துண்டை வெளியே எடுக்கிறார்கள் என வைப்போம். அப்போது மயக்க மருந்து எல்லாம் இருக்காது. முழுபிரக்ஞையுடன் அவன் இருக்கும்போதே அறுவைச் சிகிச்சை நடக்கும். அவன்அப்போதுஅசையாமல் வலியைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். அதற்காக அவன் வாயில் ஒரு துப்பாக்கி ரவையைக் கொடுத்து கடித்துக் கொள்ளச் சொல்லுவார்களாம். இதுதான் bite the bullet என இப்போது சிரமத்தைப் பொறுத்துக் கொண்டு கடுமையான முடிவுகளை எடுப்பது எனும் அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. 1891- இல் எழுத்தாளர் ருட்யார்ட் கிப்ளிங் தனது The Light that Failed எனும் நாவலில் இதை முதன்முறையாகப் பயன்படுத்தினார்.
(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com