எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

இணைய வெளியினிலே...

கணிணி வழிக் கல்வி!

News image
Updated On :1 செப்டம்பர் 2020, 12:30 am

DIN


முகநூலிலிருந்து...

கணிணி வழிக் கல்வி!


இந்திரன் ராஜேந்திரன்

ஒரு நொடி கூட ஆகாது.
என் மணிக்கட்டில் ஊரும் பூச்சியைச்
சுலபமாய்க் கொன்றுவிடலாம்.
கொல்லும் அந்த ஒரு நொடி அற்ற
காலத்துடன் அல்லவா ஓடிக்கொண்டு 
இருக்கிறது என் கடிகாரம்?
கருணையின் பாடலைப் பாடி அல்லவாகுதித்துக் குதித்துச் செல்கிறது அந்த மூன்றாவது முள்?

வண்ணதாசன் சிவசங்கரன்

காரணமின்றி வாழ்வில் யாரையும் நாம் சந்திப்பதில்லை...
பாடமாகச் சிலர்... பாலமாகச் சிலர்.

சிவகுமார் சாமு ஜீவகாருண்யன்

காலம் யாருக்கெல்லாம் காயாகவும், கசப்பாகவும்
இருக்கிறதோ...  அவர்களிடமே அந்தக் காலம் 
ஒருநாள் கனியுமென்ற நம்பிக்கையும் இருக்கிறது.

கவி வளநாடன்


சுட்டுரையிலிருந்து...

உள்ளூர் தொட்டு
உலகம் வரை பேரெடுத்தேன்...
உங்கள் தகவலை 
ரகசியமாகப் பரிமாறிக் 
கொண்டுவந்தேன்.  
ஆனால் இன்றோ... 
ஆதரவற்ற குழந்தையாய்
வீதியோரத்தில் விழுந்து கிடக்கிறேன்.

செல்வமணி  


என்னைச் செதுக்கிக் கொண்டிருக்கிறது...
என்  ஒவ்வொரு தோல்வியும்.

ருத்ரா

புத்தகங்களே கிடைக்கவில்லையென்றாலும் படித்துக்கொண்டே இருங்கள்...
மனிதர்களை.

டீ இன்னும் வரலை  

வலைதளத்திலிருந்து...

மாற்று மருத்துவமுறைகளான சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோ, யுனானி, மருத்துவமுறைகளில் புதிது புதிதாக தோன்றிக்கொண்டேயிருக்கும் நோய்களுக்கு புதிது புதிதாக மருந்துகளைக் கண்டுபிடிப்பதில்லை. ஏனெனில் இந்த மருத்துவமுறைகள் நோய்களைப் பற்றியோ, பரிசோதனைச்சாலை முடிவுகளைப் பற்றியோ மட்டுமே கவலைப்படுவதில்லை. நோய் பாதித்த மனிதனைப் பற்றியே கவனம் கொள்கின்றன. எல்லாமருத்துவமுறைகளிலும் நோயைப் பற்றிய தத்துவப்பார்வை உண்டு. அந்தத் தத்துவப்பார்வையே அந்த மருத்துவமுறையின் அடிப்படையைத் தீர்மானிக்கிறது.

பாக்டீரியா, வைரûஸ விட மனிதன் உயிரியல்ரீதியில் மிக முன்னேறிய உயிரினம். மனித உடலின் பாதுகாப்பு அமைப்பு நவீனமானது. தன்னைப் புதுப்பித்துக்கொண்டேயிருப்பது. உடலில் நுழையும் தீய நுண்ணுயிரியைப் பற்றிய அத்தனை விவரங்களையும் உடனே தெரிந்து கொண்டு அதற்கு எதிராக தன்னுடைய பாதுகாப்பு அமைப்பையும் வியூகங்களையும் அமைத்துக் கொள்கிறது. அதையும் தாண்டி மனிதன் நோயுறுகிறானென்றால், அதற்குக் காரணம் பாதுகாப்பு அமைப்பின் பலவீனம் அல்லது நோயெதிர்ப்பு சக்தியின் பலவீனம்.

மாற்று மருத்துவமுறைகள் இந்தப்புள்ளியில் தான் தங்களுடைய கவனத்தைக் குவிக்கின்றன. புதிது புதிதாக எத்தனை வைரஸ்கள், பாக்டீரியாக்கள் வந்தாலும் மாற்று மருத்துவமுறைகள் அவற்றின் தோற்றம், வளர்ச்சி, வடிவம், குணம், இவற்றைப் பற்றிக் கவலைப்படுவதை விட,  மனிதனின் பாதுகாப்பு அரண்களைப் பலப்படுத்துகின்றன. அதனால் உலகம் முழுவதும் எத்தகைய கொள்ளை நோய்கள் வந்தபோதும் மாற்று மருத்துவமுறைகள் தங்களுடைய அடிப்படையான "நோயுற்ற மனிதனுக்கு மருந்து' என்ற கொள்கையிலிருந்து விலகுவதில்லை.

பொதுவாகவே கொள்ளைநோய்க்காலத்தில் நுண்ணியிரிகள் மிகுந்த பலத்துடன் இருக்கும். ஏனெனில் ஒவ்வொரு நோயாளரிடமிருந்து மற்றொரு நோயாளரைத் தொற்றும்போது அவற்றின் வீரியம் அதிகரித்துக் கொண்டே போகும். அதனால் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும். அந்தக் காலகட்டத்தில் கொள்ளைநோய்களின் நோய்க்குறிகள் பெரும்பாலும் ஒரே மாதிரி இருப்பதால் மாற்றுமருத்துவத்தில் அந்த நோய்க்குறிகளின் தன்மைக்கேற்ப மருந்துகளை தடுப்பு மருந்தாகவும், நோய் பாதித்தவர்களுக்கு துயர் தீர்க்கும் மருந்தாகவும் 
கொடுக்கின்றனர்.

http://udhayasankarwriter.blogspot.com/

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.