47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிங்கப்பூரின் கரோனா கருவி!

கரோனா நோய்த் தொற்று பரவல் உலகத்தையே ஆட்டிப் படைத்து வருகிறது. மனித இழப்பு மட்டுமின்றி பொருளாதாரத்தைப் பின்னுக்குத் தள்ளி,   வல்லரசு நாடுகளையே விழிபிதுங்கி நிற்க வைத்துள்ளது கரோனா.

News image
Updated On :22 செப்டம்பர் 2020, 12:30 am

அ. சர்ஃப்ராஸ்

கரோனா நோய்த் தொற்று பரவல் உலகத்தையே ஆட்டிப் படைத்து வருகிறது. மனித இழப்பு மட்டுமின்றி பொருளாதாரத்தைப் பின்னுக்குத் தள்ளி, வல்லரசு நாடுகளையே விழிபிதுங்கி நிற்க வைத்துள்ளது கரோனா.
பொது முடக்கத்தை தொடர்ந்து அமல்படுத்தினால்... வறுமையினால் உயிர்பாதிப்பு அதிகரிக்கும் என அறிந்த உலக நாடுகள், பொது முடக்கத்தைக் கைவிட்டு நோய்த் தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதில் சிங்கப்பூர் முன்னோடியாகத் திகழ்கிறது. கரோனா தொற்று பரவலைக் கண்டறிவதற்கான செல்லிடப்பேசி செயலியை முதலில் அறிமுகம் செய்த நாடும் சிங்கப்பூர்தான். ஆனால் வயதானவர்கள்
ஸ்மார்ட் போன்களைக் கையாள்வதைச் சிரமமாக கருதுவதால் 100 சதவீத மக்களை இது சென்றடையவில்லை.
ஆகையால், ஸ்மார்ட் போன், இணையம், செயலி என எதுவும் இல்லாமல் கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்
களைக் கண்டறியும் கருவியை சிங்கப்பூர் அரசு மக்களுக்கு அளித்து வருகிறது.
இந்தக் கருவியை வெளியே செல்லும்போது எடுத்துச் சென்றால் போதும், நம் அருகே வருபவர்களின் விவரங்களை அந்த கருவி சேமித்து வைத்துக் கொள்ளும். இந்தக் கருவி வைத்திருப்பவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டால், இந்தக் கருவியை அரசிடம் ஒப்படைத்தால்போதும், நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களை அது தெரிவித்துவிடும்.
இந்தக் கருவியை சிங்கப்பூர்காரர்களுக்கு மட்டுமின்றி, வெளிநாட்டுப் பயணிகளுக்கும் அரசு வழங்கி வருகிறது. முதலில் வயதானவர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இந்தக் கருவி விநியோகிக்கப்படுகிறது. இந்தக் கருவிக்கு அந்நாட்டு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
100 சதவீதம் மக்கள் இதைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால், பாதிக்கப்பட்டவர்களை எளிதில் கண்டறியலாம் என்று அரசு கருதுகிறது. இதன் மூலம் ஹோட்டல்கள், சினிமா தியேட்டர்கள் போன்றவற்றை மீண்டும் தொடங்கி பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லலாம் என சிங்கப்பூர் அரசு எதிர்பார்க்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.