மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

வட்ட வடிவிலான ஸ்மார்ட் போன்!

அறிவியல் வளர்ச்சியால் தொழில்நுட்ப சாதனங்கள் வேகமாக மாற்றம் கண்டு வருகின்றன.

News image
Updated On :21 ஜனவரி 2020, 11:17 am IST

அறிவியல் வளர்ச்சியால் தொழில்நுட்ப சாதனங்கள் வேகமாக மாற்றம் கண்டு வருகின்றன. அதுவும், ஸ்மார்ட் போன்களின் வருகைக்குப் பிறகு, புதிய சேவைகளுடன் வாரந்தோறும் புதிது புதிதாய் வெளியிடப்பட்டு வருகின்றன. சிறிய அளவிலான சாதாரண மொபைல் போன்களுக்கு இருந்த மவுசு, ஸ்மார்ட் போன்களின் புழக்கத்துக்குப் பிறகு பெரிய அளவிலான திரைக்கு மாற்றமாகின. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு செவ்வக வடிவிலான தொடுதிரையின் வடிவில் இருந்து மடிக்கும் வகையிலான தொடுதிரைகள் என தற்போதுதான் மாற்றம் கண்டு வருகின்றன. எனினும், ஸ்மார்ட் போன்களுக்குள் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) மூலம் பல்வேறு நவீன கண்டுபிடிப்புகள் வெளியிடப்பட்டு வந்தாலும், வெளிப்புறத் தோற்றமான செவ்வக வடிவத்தில் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது.
 இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் "டிடோர்' வட்ட வடிவிலான ஸ்மார்ட் போனை உருவாக்கியுள்ளது. உள்ளங்கையில் அடங்கும் அளவில் உள்ள இந்த புதிய அளவிலான ஸ்மார்ட் போன் பார்ப்பதற்கு பெரிய அளவிலான கைக்கடிகாரம் போல் உள்ளது. இரண்டு சிம் கார்டுகளும், 13 மெகா பிக்சல் முன் பக்க கேமராவும் இந்த வட்டவடிவிலான போனில் உள்ளது. ஆன்ட்ராய்டு 9-இல் இயக்கப்படுகிறது. வட்ட வடிவத்திற்கு ஏற்ற ஆப்களை மாற்றம் செய்யும் பணியில் இந்த நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டுவருகிறது.
 இதில், இரண்டு ஹெட்போன்கள் புகுத்தும் இடங்கள் உள்ளன. இதன் மூலம் ஒரே திரையில் இரண்டு பேர், வீடியோக்களைக் காணலாம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், நண்பர்களுக்காகவும், அலுவலகத்தினருக்காகவும் தனித்தனியாக மெசேஜ், போன் புக் இடம்பெற்றுள்ளது இதன் சிறப்பம்சமாகும். அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் மாகாணத்தில் நடைபெற்ற நுகர்வோர் தொழில்நுட்ப சாதனங்களின் சர்வதேச கண்காட்சி 2020-இல் இடம் பெற்ற இந்த வட்ட வடிவிலான ஸ்மார்ட் போன் அனைவரையும் கவர்ந்தது. ஓராண்டில் இந்த போன் விற்பனைக்கு வரும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Story image


 அ.சர்ஃப்ராஸ்
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.