தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வாழ்க்கைத் திறன் வழிகாட்டி!

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அதிக மதிப்பெண் எடுப்பதுதான் வாழ்க்கையின் வெற்றிக்கு ஒரே வழி என்கிற தவறான வழிகாட்டுதலால், பல இளைஞர்கள் உயர் மதிப்பெண்களை மட்டும் வைத்துக் கொண்டு

News image
Updated On :20 ஏப்ரல் 2021, 12:30 am

பி.ராஜகுமாரி


பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அதிக மதிப்பெண் எடுப்பதுதான் வாழ்க்கையின் வெற்றிக்கு ஒரே வழி என்கிற தவறான வழிகாட்டுதலால், பல இளைஞர்கள் உயர் மதிப்பெண்களை மட்டும் வைத்துக் கொண்டு வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

பணி தேடிச் செல்லும் இளைஞர்களுக்கான நேர்காணல்களில் மதிப்பெண்களைத் தாண்டி, அவர்களிடம் வேறு என்ன திறமைகளெல்லாம் இருக்கின்றன? என்று பரிசோதித்துப் பார்க்கப் படுகின்றன. படிப்புக்குக் கொடுக்கப்படும் மதிப்பை விட, அவர் களிடமிருக்கும் பல்வேறு திறன்களுக்குக் கொடுக்கப்படும் மதிப்பு கூடுதலானது. எனவே, மாணவர்களும், இளைஞர்களும் தங்களது படிப்புடன் வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு வாழ்க்கைத்
திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

அன்றாட வாழ்க்கையின் தேவைகளையும், சவால்களையும் திறம்படச் சமாளிக்க உதவும் தகவமைப்பையும், நேர்மறையான நடத்தைகளையும் வாழ்க்கைத் திறன்கள் என்று சொல்லலாம். மனிதவாழ்க்கையில், நாம் சந்திக்கும் பிரச்னைகள் மற்றும் எதிர் கொள்ளும் கேள்விகளைக் கையாளப் பயன்படும் கல்வியாக இந்தவாழ்க்கைத்திறன் உள்ளது. பிறரின் நேரடியான அனுபவங் களின் மூலம் பெறப்பட்ட படிப்பினைகளிலிருந்து வழிகாட்டுபவை யாகவும் இந்த வாழ்க்கைத் திறன்கள் இருக்கின்றன.

இந்த வாழ்க்கைத் திறன்களை அடிப்படையாகக் கொண்டு ஓர் இணையதளம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த இணைய தளத்தில் தனித்திறன்கள் (பெர்சனல் ஸ்கில்ஸ்), தனித்தேர்ச்சித் திறன்கள் (இன்டர்பெர்சனல் ஸ்கில்ஸ்), தலைமைத்துவத் திறன்கள் (லீடர்ஷிப் ஸ்கில்ஸ்), கற்றல் திறன்கள் (லேர்னிங் ஸ்கில்ஸ்), முன்வைப்புத் திறன்கள் (பிரசன்டேஷன் ஸ்கில்ஸ்), எழுதும்திறன்கள் (ரைட்டிங் ஸ்கில்ஸ்), எண் திறன்கள் (நியூமரெசிஸ் கில்ஸ்) , பெற்றோருக்கான திறன்கள் (பேரண்டிங் ஸ்கில்ஸ்) ஆகிய தலைப்புகளில் முதன்மைத் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.

ஒவ்வொரு முதன்மைத் தலைப்புகளின் கீழும் ஆங்கில எழுத்துகளின் அகரவரிசைப்படி பல்வேறு தலைப்புகள் பட்டியலிடப் பட்டிருக்கின்றன. இதில் தேவையான தலைப்பின் மேல் சொடுக்கி, அது குறித்த படங்களுடன் கூடிய முழுமையான செய்திகளைப் படித்துத் தெரிந்து கொண்டு, அதன்படி நம் திறன்களை வளர்த்துக் கொள்ள முடியும்.

ஒவ்வொரு முதன்மைத் தலைப்புகளின் கீழும் பல்வேறு துணைத் தலைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு துணைத் தலைப்புகளின் கீழும் பல்வேறு உள் தலைப்புகள் கொடுக்கப்பட்டு, அந்தத் தலைப்புகளில் படங்களுடன் கூடிய விரிவான விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. இந்த இணையதளம் முழுமைக்கும் வாழ்க்கைத் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கான பல்வேறு வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.

மாணவர்கள், இளைஞர்கள் மட்டுமில்லை, வாழ்க்கைத் திறன்களை வளர்த்துக் கொள்ள விரும்பும் அனைவரும் www.skillsyouneed.com/எனும் இணைய முகவரிக்குச் செல்லலாம். வாழ்க்கைத் திறன்களை வளர்த்துக் கொண்டு, வாழ்க்கையில் முன்னேற்றமடையலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.