நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அளவுக்கு மிஞ்சினால்... உடற்பயிற்சியும் நஞ்சு!

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வார்கள்.

News image
Updated On :20 ஏப்ரல் 2021, 12:30 am

வி.குமாரமுருகன்


அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வார்கள். அனைத்திற்குமே இது பொருந்தக்கூடிய முதுமொழி. சாப்பாடு மட்டும் அல்ல எந்த ஒரு விஷயத்திலும் தேவையான அளவு ஈடுபாடு காட்டினால் அது சிறப்பான பலனைத் தரும். 

அதை விட்டுவிட்டு அதீத ஈடுபாடு காட்டினால் சில சமயங்களில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.திரைப்படங்களில் கூட அளவாக நடிப்பவர்கள் மட்டுமே சிறந்த நடிகர்களாக ஜொலிக்க முடிகிறது. கூடுதலாக நடிப்பவர்களுக்கு "ஓவர் ஆக்டிங்' என்று முத்திரை குத்தப்படுகிறது. 

உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்காக மேற்கொள்ளக்கூடிய உடற்பயிற்சிகள் கூட அளவோடு இருக்க வேண்டும் . 

உடற்பயிற்சி உடலுக்கு மிகச் சிறந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், உடற்பயிற்சியில் முழுநேரமும் ஈடுபட்டு அதற்கு"அடிக்ட்' ஆகி விட்டால் அது பாதகமாக அமைந்துவிடும் . 

உடற்பயிற்சியில் அடிக்ட் ஆகி விட்டால் அதன் மூலம் கிடைக்கும் நன்மையை விட தீமை அதிகமாகி விடும் என சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

போதுமான கால இடைவெளி, ஓய்வு இவை இல்லாமல் ஒருவர் தொடர்ச்சியாக உடற்பயிற்சியை மேற் கொண்டார் என்றால் அது அவருக்கு உடல்நலக் குறைபாடு, காயங்கள், உடல் வலிமை இழத்தல், சத்துக் குறைபாடு போன்றவற்றை ஏற்படுத்தக் கூடும். 

உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் நாள் முழுவதும் ஓய்வு இல்லாமல் அதனை மேற்கொள்ளும்போது அதனைத் தொடர்ந்து செய்யவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கும். இது ஒருவித மன அழுத்தத்தை ஏற்படுத்தும். 

சிலருக்கு ஏற்படும் மன அழுத்தம், உடல்நலக் குறைபாடு இவற்றிலிருந்து மீண்டு எழுவதற்கு உடற்பயிற்சி ஒரு சிறந்த மருந்தாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 

ஆனால், அதுவே ஓய்வு இல்லாமல் தொடர்கதையாகச் செய்தோமானால் அது நமக்குப் பாதகமாக அமையக்கூடும். மன அழுத்தத்தில் இருந்து விடுபட மருத்துவர்கள் உடற்பயிற்சியை மேற்கொள்ள ஆலோசனை வழங்குவார்கள். நாம் உடற்பயிற்சி செய்வதனால் நமது உடலில் எண்டார்பின்ஸ் வெளிப்படும்.

அதுமட்டுமல்லாமல்நமது ஹார்மோன்களையும் சமநிலைப்படுத்த உடற்பயிற்சிகள் உதவுகின்றன என்பதை ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. 

ஜிம் சென்று உடற்பயிற்சி மேற்கொள்பவர்களில் 8 சதவீதம் பேர் அதற்கு அடிமையாகி விடுகின்றனர். அவர்கள் மீண்டும், மீண்டும் ஒரே மாதிரியான உடற்பயிற்சிகளை மேற் கொள்கின்றனர். இதற்கு காரணம் அவர்களால் அடுத்த நிலையில் உள்ள உடற்பயிற்சிகளை மேற்கொள்ள இயலாமல் இருக்கலாம். மூன்று சதவிகித உடற்பயிற்சியாளர்கள் அவர்கள் மேற்கொள்ளும் உடற்பயிற்சியினை நிறுத்தாமல் தொடர்ந்து மேற்கொள்கின்றனர். உடல் ஆரோக்கியம், உடல் பருமனை கட்டுக்குள் வைக்க, அழகான தோற்றத்தை வெளிக்காட்ட , மன அழுத்தத்தைப் போக்க என இதுபோன்ற பல காரணங்களுக்காக உடற்பயிற்சியை மேற்கொள்பவர்கள் மற்றவர்களுடன் அதனைப் பகிர்ந்து கொள்கின்றனர். 

இதுவே இதில் அடிமையாக உள்ளவர்கள் இதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவது இல்லை. தொடர்ந்து இடைவிடாமல் உடற்பயிற்சியில் முழு மூச்சாக ஈடுபடுகிறவர்கள்வாழ்க்கையில் மிகுந்த சிரமங்களை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளும் ஏற்படலாம்.

இதற்கு காரணம் இவ்வகை உடற்பயிற்சியாளர்கள்,அவர்களுடைய பலத்தை மற்றவர்களுக்கு வெளிக்காட்ட அபாயகரமான பயிற்சிகளை மேற்கொள்வதுதான்.

இதன் மூலம் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என நம்புகின்றனர்.

கோபம், ஆர்வம், சோகம் இவற்றையெல்லாம் இதன் மூலம் வெளிக்காட்ட நினைக்கின்றனர். இந்த அதீத உடற்பயிற்சி அவர்களது குடும்ப வாழ்வில் இன்னல்களை ஏற்படுத்திவிடுகிறது . 

இவர்களால் சமூக பொறுப்புகள், குடும்ப பொறுப்புகள், வேலை போன்றவற்றில் கவனம் செலுத்த இயலாமல் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முயல்கின்றனர். 

உடற்பயிற்சி நம்மை மன அழுத்தத்தில் இருந்தும்எதிர்மறையான எண்ணங்களில் இருந்தும் விடுபட உதவுகிறது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அது நமது உணர்வுகளையும், உறவுகளையும் விட உடற்பயிற்சி மேலானது என்ற எண்ணம் எப்பொழுது நமக்கு தோன்றுகிறதோ, அப்போது நாம் அதற்கு அடிமையாக உள்ளோம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். 

அதிலிருந்து விடுபடுவதற்கு நாம் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். 
உடற்பயிற்சி மட்டுமே உடல் ஆரோக்கியத்தையும், மனவலிமையும், உடல் வலிமையையும் தரும் என்று நினைத்து மற்ற பணிகளில் இருந்து கவனத்தைத் திருப்பினால் அது வாழ்க்கை போக்கை மாற்றிவிடும். எனவே உடற்பயிற்சியை உறுதியுடன் செய்வோம்.உரிய அளவுடன் செய்வோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.