ஜவாகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வு!

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் பற்றி அனைவருக்கும் தெரியும்.  இந்தப் பல்கலைக்கழகத்தில்  ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடிஸ்,  ஸ்கூல் ஆஃப் லாங்க்வேஜ்,  ஸ்கூல் ஆஃப் சோசியல் சயின்சஸ்,  ஸ்கூல் ஆஃப் 
ஜவாகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வு!
Published on
Updated on
1 min read

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் பற்றி அனைவருக்கும் தெரியும். இந்தப் பல்கலைக்கழகத்தில் ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடிஸ், ஸ்கூல் ஆஃப் லாங்க்வேஜ், ஸ்கூல் ஆஃப் சோசியல் சயின்சஸ், ஸ்கூல் ஆஃப் என்விரான்மென்டல் சயின்சஸ், ஸ்கூல் ஆஃப் லைஃப் சயின்சஸ், ஸ்கூல் ஆஃப் பயோ டெக்னாலஜி, ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங், ஸ்பெஷல் சென்டர் ஃபார் இ- லேர்னிங், ஸ்பெஷல் சென்டர் ஃபார் நானோ சயின்ஸ், ஸ்பெஷல் சென்டர் ஃபார் மாலிக்குலர் மெடிசின், ஸ்பெஷல் சென்டர் ஃபார் நேஷனல் செக்யூரிட்டி ஸ்டடிஸ் உள்ளிட்ட பலதுறைகளில் படிப்புகள் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன.

இந்த படிப்புகளில் சேர ஜேஎன்யுஇஇ (ஜவஹர்லால் நேரு யுனிவர்சிட்டி என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன்) என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெறுகிற மதிப்பெண்களின் அடிப்படையில் இந்தப் பல்கலைக்கழகத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இந்த நுழைவுத் தேர்வை எழுத விரும்புபவர்கள் என்ற இணையதளம் மூலமாக 27.8.2021 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதேபோன்று தேர்வுக்கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவே 27.8.2021 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

மல்ட்டிபிள் சாய்ஸ் வடிவில் நடைபெறும் இந்தத் தேர்வில் 100 கேள்விகள் இடம் பெறும். கேள்விக்குத் தவறான பதிலை ஒரு மாணவர் எழுதினால் அதற்கு நெகட்டிவ் மதிப்பெண் இல்லை. எனவே மாணவர்கள் தைரியமாக இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம். மூன்று மணி நேரங்கள் நடைபெறும் இந்தத் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதியிலிருந்து 23 தேதிக்குள் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களிலும், புதுச்சேரியிலும் இதற்கான தேர்வு மையங்கள் செயல்படும். மாணவர்கள் சேர்க்கையில் இடஒதுக்கீடு சலுகை வழங்கப்படும்.

இந்த நுழைவுத் தேர்வு குறித்து கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் v என்ற இணையதள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

தொடர்பு எண்: 011-40759000

இணையதள முகவரி: jnu@nta.ac.in

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com