செல்லிட பேசி... முகபாவனைகளே போதும்!
ஸ்மார்ட் போன்கள் வெளியிடப்பட்ட தொடக்க காலத்தில் அதன் திரையைத் தொடுவதற்காக தனியாக கருவி வழங்கப்பட்டது.


ஸ்மார்ட் போன்கள் வெளியிடப்பட்ட தொடக்க காலத்தில் அதன் திரையைத் தொடுவதற்காகதனியாக கருவி வழங்கப்பட்டது. பின்னர் விரல் நுனியே தொடும் கருவியாக மாற்றப்பட்டது. கட்டளையிட்டால் போதும் என்று ஒலியின் அடிப்படையில் ஸ்மார்ட்போனை இயக்கும் தொழில்நுட்பம் இப்போது வளர்ச்சி பெற்றுள்ளது.
தற்போது ஸ்மார்ட் போனைத் தொடாமலும், ஒலிக் கட்டளைகளை எழுப்பாமலும் உங்கள் முகபாவனைகளை வைத்து ஸ்மார்ட் போனை இயக்கும் புதிய தொழில்நுட்பத்தை கூகுளின் ஆண்ட்ராய்டு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ஆண்ட்ராய்டு 12 பீட்டா வெர்ஷனில் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய சேவையின் மூலம், பல்வேறுமுகபாவனைகளை வைத்து ஸ்மார்ட் போனைக் கட்டுப்படுத்தி இயக்கிவிடலாம்.
இதற்காக கேமரா ஸ்விட்சஸ் என்ற புதிய சேவையை ஆண்ட்ராய்டு தொடங்கி உள்ளது.
தற்போதைக்கு வாயைத் திறப்பது, சிரிப்பது, புருவங்களை உயர்த்துவது, கண்களை இடதுபுறம் சிமிட்டுவது, கண்களை வலது பக்கம் சிமிட்டுவது, கண்களை மேல் நோக்கி பார்ப்பது ஆகிய 6 முகபாவனைகளை வைத்து ஸ்மார்ட்போனை இயக்கும் சேவை வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஒவ்வொரு முகபாவனைகளுக்கும் ஒரு கட்டளையை நாம் தேர்வு செய்து கொள்ளாலம். வாயைத் திறந்தால் கேமராவை ஆன் செய்வது, சிரித்தால் மெசேஜை திறப்பது போன்றவற்றை நாமே தேர்வு செய்யலாம்.
கரோனா காலத்தில் பலர் தங்களது செல்லிட பேசிகளை தொடாமல் இயக்கி வரும் நிலையில், இந்த
முகபாவனைகள் மூலம் இயங்கும் செல்லிட பேசி மக்களிடம் அதிகமான வரவேற்பைப் பெறும் என்பதில் ஐயமில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...