தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கடைக்குப் போய் வரும் ரோபோ!

அமெரிக்காவின் நாஸா விண்வெளி ஆய்வு நிறுவனத்துக்கு அடுத்தபடியாக, தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ். அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான எலான் மஸ்க் உலகின் மிகப் பெரிய பணக்காரர். 

News image
Updated On :31 ஆகஸ்ட் 2021, 12:30 am

அ. சர்ஃப்ராஸ்


அமெரிக்காவின் நாஸா விண்வெளி ஆய்வு நிறுவனத்துக்கு அடுத்தபடியாக, தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ். அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான எலான் மஸ்க் உலகின் மிகப் பெரிய பணக்காரர். 

ஆய்வுக்காக மேற்கொள்ளப்பட்ட விண்வெளிப் பயணங்களை அண்மையில் வர்த்தகரீதியான சாகசத்துக்காக அமேசான் நிறுவனர் ஜெஃப் பிஜோûஸ அனுப்பி வைத்து சாதனை படைத்தார்.

விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் இருந்து, டெஸ்லா கார் நிறுவனத்தை நிறுவிய எலான் மஸ்க், அதில் செயற்கை நுண்ணறிவு எனும் தொழில்நுட்பப் புதுமைகளைப் புகுத்தி ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் காராக மாற்றினார்.

மாறி வரும் சூழலுக்கு ஏற்ப நீண்டதூரம் பயணிக்கும் மின்சார கார்களை புதிய தொழில்நுட்பங்களுடன் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். 

தற்போது தனது கார் நிறுவனத்தின் மூலம் மனித வடிவிலான ரோபோவை உருவாக்கப் போவதாக யாரும் எதிர்ப்பாராத வகையில்  எலான் மஸ்க் 
அறிவித்துள்ளார்.

இந்த ரோபோ வீட்டு வேலைகளைச் செய்வதோடு, கடைக்குச் சென்று பொருள்களை வாங்கி வரும் பணியையும் செய்யும் என்றும் இதனால் பணியாளர்களின் தட்டுப்பாடு நீங்கும் என்றும் அவர் தெரிவித்தார். இதன் விலை அதிகமாக இருக்காது என்றும் அவர் கூறினார்.

மனிதர்களைப்போல் ஐந்து அடி உயரம் கொண்ட இந்த ரோபோவின் தலையில், தானியங்கி கார்களில் உள்ள கேமராக்கள் பொருத்தப்படும். ரோபோவின் முகம், தகவல் அறியும் கணினி திரையைப் போன்று வடிவமைக்கப்படும்.

இந்த ரோபோ 68 கிலோவைச் சுமக்கும் திறன் உடையதாக உருவாக்கப்பட்டுள்ளது. மணிக்கு எட்டு கி.மீ. வேகத்தில் ஓடும் திறமையும் கொண்டது. இந்த ரோபோ அடுத்த ஆண்டு வெளியாகலாம் என்று  எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார்.

"எந்திரன்' திரைப்படத்தில் மனித ரோபோவைப் பார்த்து பழகிய நமக்கு எலான் மஸ்கின் ஹுமனாய்டு ரோபோ  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.