சமூகப் பணி... புதிய வேலை வாய்ப்புகள்!
சமூக, பொருளாதார அடுக்கில் கடைசி நிலையில் இருக்கும் லட்சக்கணக்கான மக்களின் கண்களில் நம்பிக்கை ஒளியை பாய்ச்சி வருபவர்கள் சமூகப்பணியாளர்கள்.


புதிய வேலைவாய்ப்புகளை அள்ளித் தரும் புதிய துறையாக சமூகப்பணி வளர்ந்து வருகிறது. வழக்கமான வணிக, தொழில்சார்ந்த வேலை வாய்ப்புகளைப் போலவே சமூகப் பணி சார்ந்த நிறுவனங்களும் தொழில்முறை கட்டமைப்புடன் செயல்பட தொடங்கியுள்ளன.
சமூக, பொருளாதார அடுக்கில் கடைசி நிலையில் இருக்கும் லட்சக்கணக்கான மக்களின் கண்களில் நம்பிக்கை ஒளியை பாய்ச்சி வருபவர்கள் சமூகப்பணியாளர்கள்.
அன்பு, இரக்கம், அக்கறை ஆகியவற்றை இதயத்தில் தேக்கி தன்னலம் கருதாமல் மக்களுக்கு சேவையாற்றும் தன்னார்வலர்களை தான் சமூகப்பணியாளர்கள் என்று அழைக்கிறார்கள். மனித சமூகத்தின் மீது தங்குதடையற்ற அன்பை பொழியும் சமூகப் பணியாளர்கள் இளம் தலைமுறையை வெகுவாக கவர்ந்து வருகிறார்கள். இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் சமூகப்பணியாளர்களுக்கான தேவையும், அவசியமும் பெருகிக்கொண்டே இருக்கின்றன.
சமூகத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், பலரையும் சமூகப்பணியில் உந்தி தள்ளிவிடுகின்றன. சமூகத்தின் அவலங்களைத் துடைத்தெறியும் வேட்கை கொண்ட அனைவரையும் சமூகப்பணி விட்டுவைப்பதில்லை. ஆனால், சமூகப் பணியை எவரும் முழுநேரமாகச் செய்து வருவதில்லை வாழ்க்கைத் தொழிலாக (வேலை) எதையாவது ஒன்றை பற்றிக்கொண்டு, அவ்வப்போது அல்லது நேரம் கிடைக்கும்போதெல்லாம் சமூகப் பணி செய்து வந்துள்ளனர்.
காலத்தின் வேகத்தில் சமூகப்பணிக்கான தேவை அதிகரித்துள்ளது. அதனால் முழுநேரவேலையாக சமூகப்பணி மாறி வருகிறது. சமூகப்பணி, வேலை வாய்ப்பாக உருவாகியுள்ளது. அதிலும் குறிப்பாக இளைஞர்களின் பங்களிப்பை பெரிதும் எதிர்நோக்கும் வேலைவாய்ப்பாக அது மாறியுள்ளது.
இந்தப் பின்னணியை மனதில் கொண்டு, தொண்டு மற்றும் சமூகப் பணி தொடர்பாக இளைஞர்கள் இடையே காணப்படும் மனநிலை மற்றும் அது குறித்த புரிதலை படம் பிடித்துக்காட்டுவதற்காக தில்லியை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று ஆய்வு நடத்தியது. 14 வயது முதல் 20 வயதினரிடையிலான 500 பேரிடம் எடுக்கப்பட்ட ஆய்வில் பல சுவையான முடிவுகள் வெளியாகியுள்ளன.
சமூகப்பணியில் இளைஞர்கள் ஈர்க்கப்படுவதற்கு கல்வி பின்புலம் காரணமாக அமைவதில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. வெவ்வேறு கல்வி பின்னணியைக் கொண்டிருந்தாலும், சமூகப்பணியில் ஈடுபடுவதற்கான ஆர்வம் இளைஞர்களிடையே இயல்பாக காணப்படுகிறது.
சமூகப்பணியில் இளைஞர்கள் அதிக அளவில் ஈர்க்கப்படுவதற்கு அவர்களின் குடும்பம் மற்றும் நட்புவட்டமே காரணமாக உள்ளது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சமூகப்பணியின் பிரிக்க முடியாத அங்கம் என்று ஆய்வில் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் செயல்பட்டுவரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, நம்பகத்தன்மையோடு செயல்பட்டு வருவதாக ஆய்வில் பங்கேற்ற 50 சத இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வழக்கமான வணிக அல்லது தொழில்நிறுவனங்களை போல செயல்படுகின்றதா? என்றால், "இல்லை" என்று பதில் கூறும் இளைஞர்கள், சமூகப்பணியில் ஆர்வம் இருந்தாலும், அதை முழுநேரம் செய்வதில் தயக்கம் காட்டுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
வேலை, வீட்டுப்பணிகள், சொந்தப் பணிகள் போக கிடைக்கும் மீதி நேரத்தில்தான் சமூகப்பணியில் ஈடுபட பலரும் விரும்புகிறார்கள். ஆனால், சமூகப்பணி, வருவாயை ஈட்டும் முழுநேர வேலையாக உருவெடுத்து வருவதை பலரும் உணரவில்லை. சொந்தச் செலவில் சமூகப் பணியை ஆற்றிய காலம்போய், ஊதியத்துடன் சமூகப்பணி செய்யும் வாய்ப்புகள் அதிகமாகி வருகின்றன. நல்ல நோக்கத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் சமூகப் பணி பயனாளிகளுக்கும், பணியாளர்களுக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. பிறருக்கு உதவி செய்யும் சமூகப்பணியில் தனிப்பட்டதேவைகளை நிறைவு செய்யும் வருவாய் கிடைப்பதோடு, தொழில்ரீதியாகவும் வாழ்க்கையில் முன்னேற வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறது.
அதனால், புதிய வேலைவாய்ப்புகளை அள்ளித் தரும் புதிய துறையாக சமூகப்பணி வளர்ந்து வருகிறது. வழக்கமான வணிக, தொழில்சார்ந்த வேலை வாய்ப்புகளைப் போலவே சமூகப் பணி சார்ந்த நிறுவனங்களும் தொழில்முறை கட்டமைப்புடன் செயல்பட தொடங்கியுள்ளன. அதனால் வேலைவாய்ப்புடன் சமூகப்பணிக்கான மனநிறைவையும் பெற முடியும்.
சமூகத்தில் காணப்படும் பிரச்னைகளை நேரில் கண்டுணர்ந்து, அதற்கான தீர்வுகளை நோக்கி சிந்திக்கவும் அளப்பரிய வாய்ப்புகளை அள்ளித்தரும் துறையாக சமூகப் பணி மாறிவருகிறது. இது தொடர்பான விழிப்புணர்வும் இளைஞர்களிடையே அதிகரித்து காணப்படுகிறது. அதனால் இத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகளும் பெருகியுள்ளன.சமூகப்பணியில் ஈடுபடவிரும்பும் இளைஞர்கள், சமூகம் தொடர்பான சிக்கல்களைப் புரிந்து கொண்டவர்களாகவும், பொறுப்புள்ளவர்களாகவும் மாறிவிடுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...