உலகின் எந்த மூலையில்  இருந்தும் இயக்கலாம்!

மனிதர்கள் செய்யக் கூடிய வேலைகளை ரோபோக்கள் செய்கின்றன. எந்த வேலைகளை ரோபோக்கள் செய்ய வேண்டுமோ அதற்கேற்றவாறு அவற்றை ருவாக்கியிருப்பார்கள்.
உலகின் எந்த மூலையில்  இருந்தும் இயக்கலாம்!

மனிதர்கள் செய்யக் கூடிய வேலைகளை ரோபோக்கள் செய்கின்றன. எந்த வேலைகளை ரோபோக்கள் செய்ய வேண்டுமோ அதற்கேற்றவாறு அவற்றை ருவாக்கியிருப்பார்கள். மனிதர்களைப் போல வேலை செய்யும் திறன் படைத்த இந்த ரோபோக்களை இயக்க மனிதர்களே தேவைப்படுகிறார்கள்.

மனிதர்களின் கண்பார்வையில் அவை இதற்கு முன்பு இயக்கப்பட்டு வந்தன. ரோபோவை இயக்குபவர்கள் அதன் அருகிலேயே இருக்க வேண்டும்.

பாஸ்டன் டைனமிக்ஸ் என்ற நிறுவனம் இப்போது உருவாக்கியுள்ள ரோபோக்களை உலகின் எந்த மூலையில் இருந்து வேண்டுமானாலும் இயக்கலாம். இதற்கு ஸ்கவுட் என்ற வெப் ப்ரவுசர் பயன்படுகிறது. இணையத்தின் மூலமாக இந்த ஸ்கவுட் இயக்கப்படுகிறது.

தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் இந்த ரோபோக்கள், இதுவரை 400 -க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பாஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ரோபோக்களைப் பயன்படுத்தி கட்டுமான வேலைகளைச் செய்யலாம். ஆழமான சுரங்கங்களில் இந்த ரோபோக்களை வேலை செய்ய வைக்கலாம். அணுக்கதிர் வீச்சு உள்ள அணுமின்நிலையங்களில் பணியாற்றச் சொல்லலாம். எண்ணெய் எடுக்கும் இடங்களில் பணிபுரியச் சொல்லலாம்.

இந்த நிறுவனத்தின் 80 சதவீத பங்குகளை ஹூண்டாய் நிறுவனம் வாங்கியிருக்கிறது. அது இந்த ரோபோவின் விற்பனை எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதற்காக நிறைய விளம்பரப் படங்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஸ்கிப்பிங் விளையாடும் ரோபோ, கதவைத் திறக்கும் ரோபோ, பொருள்களை எடுத்துச் செல்லும் ரோபோ, மாடிப் படிகளில் ஏறும் ரோபோ என நிறைய விளம்பரப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த விளம்பரப் படங்களில் இந்த ரோபோக்களை மேஜை மேல் உள்ள கம்ப்யூட்டரில் இருந்து இயக்குகிறார்கள்.

இந்த ரோபோக்கள் பெரும் அளவில் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன. 74,500 அமெரிக்க டாலர் விலை உள்ள பேசிக் மாடல் ரோபோக்கள், பொதுவாக போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன. அந்தப் பகுதியில் செல்லும் வாகனங்கள், மனிதர்கள், நடைபெறும் நிகழ்வுகளைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்வதற்காக இந்த ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கணினி விசைப் பலகையின் மூலமாகவோ, ஜாய் ஸ்டிக்கின் மூலமாகவோ இணையத் தொடர்பின் உதவியால் இந்த ரோபோவைத் தொலைதூரத்தில் இருந்து இயக்க முடியும்.

மனிதர்கள் அருகே இருந்து கொண்டு தங்களுடைய நேரடிக் கண்காணிப்பில் இந்த ரோபோக்களை இயக்கும்போது, ஏதேனும் எதிர்பாராத விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்பதால், தொலைதூரத்தில் இருந்து இயக்கக் கூடிய ரோபோக்களை உருவாக்கியிருப்பதாக பாஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com