116 வயதில் கரோனா...: நலமடைந்த பாட்டி!

உலகில் அதிக வயதுடையவர்களின் பட்டியலை அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் உள்ள ஜெரன்டாலஜி ரிசர்ச் குரூப் என்றநிறுவனம் வெளியிட்டு வருகிறது.
116 வயதில் கரோனா...: நலமடைந்த பாட்டி!

உலகில் அதிக வயதுடையவர்களின் பட்டியலை அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் உள்ள ஜெரன்டாலஜி ரிசர்ச் குரூப் என்றநிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்நிறுவனம் அளித்துள்ள தகவல்களின்படி ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கனே தனகா என்ற பெண்மணிதான் உலகிலேயே அதிகம் வயதானவர். அவருக்கு வயது 118. அந்த வரிசையில் உலகின் மூத்த வயதுடையவர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடிப்பவர் சிஸ்டர் ஆன்ட்ரி. அவருடைய இயற்பெயர் லுசிலி ரேன்டன். இவருக்கு 116 வயது நிறைவடைந்துவிட்டது. தெற்கு பிரான்சில் உள்ள டவ்ளன் நகரில் தனது ஓய்வில்லத்தில் அவர் வசித்து வருகிறார். கடந்த 11 - ஆம் தேதி தனது 117 ஆவது பிறந்த நாளை ஆடம்பரமின்றிக் கொண்டாடி இருக்கிறார்.

இவர் வாழும் குடியிருப்பில் மொத்தம் 88 பேர் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் 81 பேருக்கு கரோனா வைரஸ் தாக்கியது உறுதிப்படுத்தப்பட்டது. 81 பேரில் 10 பேர் சிகிச்சை பயனின்றி இறந்துவிட்டார்கள்.

117 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் சிஸ்டர் ஆன்ட்ரிக்கு கடந்த ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் கரோனா தொற்று ஏற்பட்டது. உடனே சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர், மூன்று வாரங்கள் தொடர் சிகிச்சையில் இருந்தார். இப்போது முற்றிலும் குணமாகிவிட்டார் ஆன்ட்ரி.

இதில் என்ன அதிசயம் என்றால், கரோனா தொற்று ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் அவருக்குத் தென்படாமல் இருந்ததுதான்.

""எனக்கு கரோனா தொற்று ஏற்பட்டது என்பதை என்னால் உணர முடியவில்லை'' என்கிறார் ஆன்ட்ரி.

கண்பார்வையற்ற சிஸ்டர் ஆன்ட்ரி, சக்கரநாற்காலியில் அமர்ந்துதான் தன் வாழ்க்கைப் பயணத்தை நடத்துகிறார்.

அவருடைய கவலையெல்லாம் வழக்கமான அவருடைய உணள, தூங்கும் நேரம் ஆகியவற்றை மருத்துவர்கள் மாற்றிவிடுவார்களோ என்பதுதான்.

கரோனா தாக்குதலுக்கு உள்ளான ஆன்ட்ரியை நிறைய தொலைக்காட்சிகள், ஊடகங்கள் நேர்காணல் மேற்கொண்டன.

""கரோனா தொற்று ஏற்பட்டுவிட்டதே... உங்களுக்குப் பயமாக இல்லையா?'' என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் பலரையும் வியக்க வைத்தது.

""கரோனா தொற்றால் எனக்கு எந்தப் பயமும் இல்லை. ஏனென்றால் சாவைப் பற்றிய பயம் எனக்கு இல்லை. உயிருடன் இருக்கும் தற்போது உங்கள் அனைவருடனும் மிகளம் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒருவேளை நான் இறந்துவிட்டால், ஏற்கெனவே இறந்துபோன என் அண்ணன், தாத்தா, பாட்டி ஆகியோருடன் போய்ச் சேர்ந்து அவர்களுடன் சந்தோஷமாக இருப்பேன்'' என்கிறார் சிஸ்டர் ஆன்ட்ரி.

1904 -ஆம் ஆண்டு பிப்ரவரி 11 - ஆம் தேதி பிறந்த அவர், கரோனா தொற்றினால் எந்தவித மன பாதிப்பும் இல்லாமல், மிகளம் அமைதியாக இருக்கிறார். தனது பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து ஆர்வத்துடன் இருந்திருக்கிறார்.

கரோனா தொற்றின் காரணமாக தனது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு நிறையப் பேரை அழைக்க முடியவில்லையே என்பதுதான் அவருடைய ஒரே வருத்தமாக இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com