தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அவசியம்...  தரவுகள் தொடர்பான அறிவு!

21-ஆம் நூற்றாண்டில் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன தரவுகள்.   பல நிறுவனங்கள்  நிறுவனம் சார்ந்த  பல்வேறு விஷயங்களில் முடிவெடுக்க   தரவுகளை அடிப்படையாகக் கொண்டே  செயல்பட வேண்டியிருக்கிறது.

News image
Updated On :6 ஜூலை 2021, 12:30 am

சுரேந்தர் ரவி


21-ஆம் நூற்றாண்டில் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன தரவுகள். பல நிறுவனங்கள் நிறுவனம் சார்ந்த பல்வேறு விஷயங்களில் முடிவெடுக்க தரவுகளை அடிப்படையாகக் கொண்டே செயல்பட வேண்டியிருக்கிறது.

இந்த தரவுகளின் அடிப்படையில் ஒரு நிறுவனம் தன்னை மேம்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறது. தரவுகளின் அடிப்படையில் நிறுவனத்தின் பணியாளர்கள், நிறுவனத்தில் செயல்படும் குழுக்களின் செயல்பாடுகளை மேம்படுத்த அது முயற்சி செய்கிறது. தரவுகளைப் பயன்படுத்தி அடுத்தக் கட்டத்துக்கான புது முயற்சிகளிலும், கண்டுபிடிப்புகளிலும் நிறுவனம் ஈடுபட முடிகிறது.

தரவுகள் மூலமாக நிறுவனத்தின் உற்பத்தியையும் செயல்திறனையும் மேம்படுத்த முடியும். நிறுவனத்தின் உற்பத்தி, வரவு, செலவினம், லாபம், விரயச் செலவுகள், பணியாளர்களின் எண்ணிக்கை, கூடுதலாகத் தேவைப்படுவோரின் எண்ணிக்கை, பணியாளர்களின் செயல்திறன் என பல்வேறு வகையான தரவுகளை ஒரே நிறுவனத்தில் சேகரிக்க முடியும்.

தரவுகளைக் கையாளும் பணிகளை பெரும்பாலான நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களிடம் ஒப்படைத்து விடுகின்றன. அதன் காரணமாக நிறுவனத்தின் பெரும்பாலான விஷயங்கள் அங்கு பணியாற்றும் பணியாளர்களுக்குத் தெரிவதில்லை. இது பல்வேறு சிக்கல்களை நிறுவனங்களுக்கு ஏற்படுத்துகிறது.

தரவுகளை முறையாகக் கையாளாததால், பல நிறுவனங்கள் இழப்பைச் சந்திக்கின்றன. அதைத் தடுப்பதற்கு நிறுவனத்தில் பணியாற்றும் இளம் பணியாளர்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

தரவுகள் தொடர்பான அறிவை பணியாளர்கள் பெறும் சூழலை நிறுவனங்கள் ஏற்படுத்த வேண்டும்.

மிக அதிக எண்ணிக்கையில் பல்வேறு வகையான தரவுகள் கிடைக்கும் என்பதால், நிறுவனத்தின் வளர்ச்சிக்குத் தேவையான தரவுகள் எவை, தேவையில்லாத தரவுகள் எவை என இளம் பணியாளர்கள் கண்டறிய வேண்டும். பின்னர், தேவையான தரவுகளை முன்னுரிமை அடிப்படையில் பகுத்து தனித்தனியாக வைக்க வேண்டும்.

தரவுகளைக் கையாளும் விதம் தொடர்பாக பணியாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

தரவுகளைக் கொண்டு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எந்த வகையில் உதவ முடியும் என்பதை அங்கு பணியாற்றும் பணியாளர்களே முடிவெடுக்கும் அளவுக்கு தரவுகள் தொடர்பான அறிவை மேம்படுத்துவது அவசியம்.

அந்தத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு நிறுவனத்தின் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அதற்கு நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் தரவுகள் தொடர்பான அறிவைப் பெறுவது அவசியம். தரவுகள் தொடர்பாகப் பணியாளர்களுக்குப் பயிற்சியளிக்கப்படவேண்டும்.

தரவுகள் தொடர்பான அறிவை பணியாளர்கள் வளர்த்துக் கொள்ள அவர்களுக்கு சரியான நேரத்தில் உதவுவதற்கான அதிகாரிகளையும் நிறுவனங்கள் நியமிக்க வேண்டும். தரவு மேலாண்மையில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகள் மூலமாக பணியாளர்களுக்குப் பயிற்சியளிக்கலாம்.

தரவுகள் தொடர்பான அறிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், இளைஞர்கள் அதில் கூடுதல் பயிற்சி பெற்று திறனை வளர்த்துக் கொள்வது அவசியம்.

கல்லூரி நாள்களிலோ, பள்ளியில் இருந்து கல்லூரியில் சேர்வதற்கு இடைப்பட்ட காலத்திலோ தரவுகளைச் சிறந்த முறையில் கையாள்வது தொடர்பான சிறப்புப் பயிற்சிகளை இளைஞர்கள் மேற்கொள்ளலாம்.

இந்தப் பயிற்சிகள் இளைஞர்களுக்குக் கூடுதல் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும். ஒரே வேலைக்குப் பல பேர் போட்டியிடும் வேளையில், தரவுகள் தொடர்பான அறிவைப் பெற்றிருப்பது கூடுதல் திறனாக நிறுவனங்களால் கருதப்படும். வேலை வாய்ப்பில் தரவுகள் தொடர்பான அறிவைப் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

தரவுகளை மிக வேகமாக ஆராய்வது, கிடைக்கப் பெறும் பல்வேறு தரவுகளில் தேவையானவற்றை மட்டும் பிரித்தெடுப்பது, அவற்றை வெகுவிரைவில் கையாள்வது ஆகிய திறன்களை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

சுயமாகவே நிறுவனங்கள் சார்ந்த பல்வேறு தரவுகளைச் சேகரித்து அவற்றின் மூலமாக இளைஞர்கள் பயிற்சியை மேற்கொள்ளலாம். இது அவர்களின் சிந்தனைத் திறனை மேம்படுத்துவதோடு முடிவெடுக்கும் திறனையும் அதிகப்
படுத்தும்.

தகவல்-தொழில்நுட்ப வசதிகள் அதிகரித்து வருவதால், மின்னணு உபகரணங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

அதனால், தரவுகள் உருவாவதும் அதிகரித்துள்ளது. தரவுகளை முறையாகப் பகுத்து, சரிபார்த்து அவற்றை சரியான முறையில் மேலாண்மை செய்பவர்களுக்குச் சிறந்த எதிர்காலம் காத்திருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்
கின்றனர்.

தரவுகள் தொடர்பான அறிவைப் பெறுவது மேலோட்டமாகப் பார்க்கும்போது எளிதான காரியமாகத் தோன்றினாலும், உண்மையில் அதற்கென கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.