பறக்கும் கார்!

பறக்கும் கார்களை கிராபிக்ஸ் படங்களில் பார்த்திருப்போம். 2021-இல் இது நிஜமாகி உள்ளது. 
பறக்கும் கார்!


பறக்கும் கார்களை கிராபிக்ஸ் படங்களில் பார்த்திருப்போம். 2021-இல் இது நிஜமாகி உள்ளது. 

சாலையில் சாதாரண காராக பயணித்து, இரண்டு நிமிடம் 15 நொடிகளில் விமானமாக இறக்கையை விரித்து 35 நிமிடம் மணிக்கு 190 கி.மீ. வேகத்தில் தொடர்ந்து பறந்து சாதனை படைத்துள்ளது இந்த பறக்கும் கார். இதில் இரண்டு பேர் அமர்ந்து பயணிக்கலாம். 

பின்னர் மீண்டும் தரையிறங்கியதும் இறக்கைகளை மடக்கி சாதாரண காராக சாலையில் செல்கிறது. 

விமானங்களைப்போல் இறக்கைகளில் ராட்சத பேன்கள் இல்லாமல் பிஎம்டிபுள்யு கார் என்ஜின், சாதாரண பெட்ரோல் ஆகியவற்றைப் பயன் படுத்தியே இந்த கார் பறப்பதுதான் இதன் சிறப்பு. 

ஸ்லோவேகியா நாட்டில் உள்ள நிட்ரா, பிராடிஸ்லாவா விமான நிலையங்களுக்கு இடையே பறந்து சோதனைப் பயணத்தை சாதனைப் பயணமாக மாற்றியுள்ளது பறக்கும் கார். 

இந்தக் காரை தயாரித்த ஸ்டீபன் கிளைன் கார் மாற்றும் விமான ஓட்டுநராக இதை  இயக்கினார். 1,000 கி.மீ. தூரத்துக்கு 8,200 அடி உயரத்தில் 40 மணி நேரத்துக்கு தொடர்ந்து பறக்கும் திறன் படைத்தது இந்த கார் என்று ஸ்டீபன் கூறுகிறார். 

சாலையிலும், வானிலும் ஒரே கார் இரட்டை போக்குவரத்தாக பயன்படுத்துவது மிகப் பெரிய அறிவியல் மாற்றம் என்றும் இரண்டு ஆண்டுகளில், இரண்டு மில்லியன் யூரோக்கள் செலவில் இது தயாரிக்கப்பட்டது என்றும் அவர் கூறுகிறார். 

அமெரிக்காவில் மட்டும் சுமார் 40 ஆயிரம் பேர் இந்த பறக்கும் காரை  பதிவு செய்துள்ளனர்.  எனினும், பெரிய டிரோன்களைப்போல் நின்ற இடத்தில் இருந்து இந்த கார் பறக்க இயலாதது, இதன் பின்னடைவாகக் கருதப்படுகிறது. குறைந்தது 300 மீட்டர் ஓடுதளம் இருந்தால் மட்டுமே இதை விமானமாக மாற்றி பறந்து செல்ல முடியும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com