ஆன்ட்ராய்டு போனில் தெளிவான வீடியோ!

வீடியோக்களை திரையரங்குகள்,  தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்த்து வந்த காலம் மாறி, உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் பார்க்கும் வசதியை இணையம் வழங்குகிறது. 
ஆன்ட்ராய்டு போனில் தெளிவான வீடியோ!

வீடியோக்களை திரையரங்குகள்,  தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்த்து வந்த காலம் மாறி, உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் பார்க்கும் வசதியை இணையம் வழங்குகிறது. 

வீடியோக்களைப் பகிர உதவும் யூ டியூப் தொடங்கி 16 ஆண்டுகள் ஆகின்றன. கூகுளுக்கு அடுத்தபடியாக உலகில் அதிகமானோர் யூ டியூப்பைப் பயன்படுத்துகின்றனர். முதலில் குறைவான  நேரம் மட்டும் ஓடும் தெளிவற்ற வீடியோக்களை யூ டியூப்பில் பயன்பாட்டாளர்கள் பதிவேற்றம் செய்து வந்தனர். தற்போது வீட்டுக்கு வீடு, தனி நபருக்கு என யூடியூப் சேனலை வைத்து தெளிவான வீடியோக்களை நாள்தோறும் பதிவேற்றம் செய்கிறார்கள். ஏன் முழு நேர திரைப்படத்தையும் யூ டியூப்பில் காணும் அளவுக்கு வளர்ச்சி  ஏற்பட்டுள்ளது.

தற்போது யூ டியூப் வீடியோக்களை ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசிகளில் 4 கே தரத்தில் பார்க்கும் புதிய வசதியை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஐஓஎஸ் செல்லிடப்பேசிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த வசதி வழங்கப்பட்டிருந்தது. ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசி பயன்பாட்டாளர்கள் வீடியோக்களை 1080பி அல்லது புல் ஹெச்டி வரையிலான தரத்தில் மட்டும் பார்த்து வந்தனர். 4 கே தரத்தில் வீடியோ இருந்தாலும், ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசிகளில் குறைவான தரத்தில் மட்டுமே பார்க்க முடிந்தது. ஆனால் தற்போது வீடியோக்களை 2160பி அல்லது 4 கே தெளிவில் பார்க்க முடியும்.

உங்கள் செல்லிடப்பேசியில் 1080பி தரத் தெளிவான திரை இருந்தாலும், 4 கே வீடியோவைப் பார்க்கலாம்.

4 கே தரத்தில் வீடியோவைப் பார்க்க எவ்வளவு டேட்டா செலவாகும் என்பதையும் யூ டியூப் காண்பித்துவிடுகிறது.

இந்த புதிய சேவையைப் பெற யூ டியூப்பை முதலில் அப்டேட் செய்து கொண்டு, வீடியோக்களின் வலது மேல்புறமாக உள்ள மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்து 4கே தரத்துக்கு கிளிக் செய்துவிட்டால் தெள்ளத் தெளிவான வீடியோக்களைப் பார்த்து மகிழலாம்.

எனினும், 4 கே தரத்திலான வீடியோக்களைக் காண டேட்டா அதிக அளவில் செலவாகும். இதற்கு இணைய இணைப்பும் வலுவாக இருக்க வேண்டும். பேட்டரியும் அதிக அளவில் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com