தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கூகுளின் புதிய சேவைகள்!

ஸ்மார்ட் போன் பயன்பாடு தொடங்கியதில் இருந்தே ஆன்ட்ராய்டு மென்பொருள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

News image
Updated On :9 மார்ச் 2021, 12:30 am

அ. சர்ஃப்ராஸ்

ஸ்மார்ட் போன் பயன்பாடு தொடங்கியதில் இருந்தே ஆன்ட்ராய்டு மென்பொருள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 2008-இல் தொடங்கப்பட்ட ஆன்ட்ராய்டு பயன்பாடு இன்று பல்வேறு தொழில்நுட்ப உச்சங்களைத் தொட்டுள்ளது.

மக்களின் வாழ்க்கைப் பயணத்துக்கு ஏற்ப செயலிகளைப் பயனாளர்களே உருவாக்க அனுமதி அளித்து அதை பிளே ஸ்டோர் மூலம் கூகுள் நிறுவனம் செயலாக்கம் செய்து வருகிறது.

இந்த வரிசையில் கூகுளும் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுக்கு தனது பங்களிப்பாக புதிய சேவைகளை அறிவித்துள்ளது.

பாஸ்வேர்ட் எனும் கடவுச் சொல்லை நீங்கள் பதிவிட்டால், அது ஏற்கெனவே இணையதளத்தில் திருடப்பட்டு வெளியான கடவுச்சொல் பட்டியலில் உள்ளதா என சரி பார்த்து சொல்லிவிடும். ஆன்ட்ராய்டு 9 வெர்ஷன் அதற்கு மேல் உள்ள ஸ்மார்ட் போன்களில் இந்த சேவையைப் பயன்படுத்தலாம்.

அடுத்ததாக, குறுஞ்செய்திகளை (டெக்ஸ்ட்மெசேஜ்) பதிவிட்டு அதைத் தொடர்ந்து கிளிக் செய்தால் அந்தச் செய்தி எந்த தேதிக்கு, எத்தனை மணிக்கு அனுப்பலாம் என்பதைத் தேர்வு செய்யலாம். நண்பர்கள், உறவினர்கள் உள்பட பிறருக்கு பல்வேறு செயல்பாடுகளை ஞாபகப்படுத்த இந்தச் சேவை பயனுள்ளதாக இருக்கும். ஆன்ட்ராய்டு 7 வெர்ஷன் அதற்கு மேல் உள்ள ஸ்மார்ட் போன்களில் இதைப் பயன்படுத்தலாம்.

மேலும், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஸ்மார்ட் போன் திரைகளில் வரும் தகவல்களைப் படித்து ஒலி வடிவில் சொல்லும் புதிய சேவையையும் கூகுள் அறிமுகப்படுத்தி உள்ளது.

அதேபோல், கூகுள் மேப்பை டார்க் மோடில் பயன்படுத்தும் புதிய சேவையையும் கூகுள் அறிமுகம் செய்துள்ளது.

கார்களில் பயன்படுத்தப்படும் பெரிய தொடு திரைகளை இரண்டாகப் பிரித்து கூகுள் மேப்பையும், மீடியா கண்ட்ரோலையும் ஒன்றாகச் சேர்த்து பயன்படுத்தும் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு 6 வெர்ஷன் அதற்கு மேல் உள்ள கருவிகளில் இதைப் பயன்படுத்தலாம்.

அதேபோல், உங்கள் ஸ்மார்ட் போன் லாக் செய்யப்பட்டிருந்தாலும் கூகுள் அஸிஸ்டன்டைப் பயன்படுத்தி கட்டளையிட்டு செயல்படலாம். டெக்ஸ்ட் மெசேஜûஸப் படிக்கவும், போனில் சேமிக்கப்பட்டிருக்கும் நம்பர்களைத் தொடர்பு கொள்ளவும், அலாரம் வைக்கவும் உள்ளிட்ட சேவைகளை வார்த்தைக் கட்டளையின் மூலம் செயல்படுத்தலாம்.

இந்த புதிய சேவைகளுக்கான செயலிகளை கூகுள் நிறுவனம் உலகம் முழுவதும் அறிமுகம் செய்யத் தொடங்கிவிட்டது. மக்களின் அன்றாடப் பணிகளுக்கு கூகுளின் இந்த புதிய சேவைகள் பயன்படும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.