கரோனா கால இணையதள சேவைகள்!

உலகையே கரோனா தீநுண்மி   ஆட்டிப்படைத்து,  மனித குலத்தை அழிக்கும் பணியில் அயராது ஈடுபட்டு வருகிறது.
கரோனா கால இணையதள சேவைகள்!


உலகையே கரோனா தீநுண்மி   ஆட்டிப்படைத்து,  மனித குலத்தை அழிக்கும் பணியில் அயராது ஈடுபட்டு வருகிறது.
இந்தியாவில் சுனாமி வேகத்தில் பரவி வரும் கரோனா பேரலையைத் தடுக்க முகநூல், சுட்டுரை, வாட்ஸ்அப் ஆகிய சமூக ஊடக நிறுவனங்கள் 
களத்தில் இறங்கி உள்ளன. 
கரோனாவைத் தடுக்கும் தற்போதைய ஆயுதமாக உள்ள தடுப்பூசியை இந்தியர்கள் அனைவரும் செலுத்திக் கொள்ள இந்த நிறுவனங்கள் உதவி செய்
கின்றன.
இதற்காக முகநூல் நிறுவனம் மத்திய அரசுடன் இணைந்து நாட்டில் எந்தெந்த இடங்களில் எத்தனை மணி நேரம் தடுப்பூசி கிடைக்கும் என்பன போன்ற தகவல்களை அளிக்கும் சேவையை விரைவில் தொடங்க உள்ளது. 
"வேக்சின் ஃபைன்டர்' என்ற அந்த சேவையை 17 இந்திய மொழிகளில் தொடங்கவும் முகநூல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் இயங்கி வரும் சமூக சேவை அமைப்புகளையும் இûணைத்து சர்வதேச நிறுவனங்கள் அளிக்கும் மருத்துவ உபகரணங்கள் உரியவர்களுக்குச் சென்றடையவும் உதவுகிறது.
இதேபோல், முகநூல் நிறுவனத்தின் மற்றுமொரு சமூக ஊடகமான வாட்ஸ்அப்பிலும் இந்த சேவையை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இந்தச் சேவையைப் பெற முதலில் +91 9013151515 என்ற எண்ணைத் தொலைபேசியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் வாட்ஸ்அப் சென்று அந்த எண்ணுக்கு "நமஸ்தே' என்று குறுந்தகவலை அனுப்ப வேண்டும். தானியங்கி சேவையான இது, அஞ்சல் எண்ணைக் கேட்கும். அதைப் பதிவிட்டதும்,
அந்தப் பகுதியில் உள்ள கரோனா தடுப்பூசி மையங்களைக் காண்பிக்கும்.
இதேபோல் சுட்டுரையிலும் (டிவிட்டர்) கரோனா நோயாளிகள் தங்கள் பகுதிகளில் கிடைக்கும் சேவைகளையும், மருத்துவ உதவிகளையும்  அறிந்து கொள்ள தனி சேவை உள்ளது. தேவையான தகவல்களை  ட்ற்ற்ல்ள்://ஸ்ரீர்ஸ்ண்க்19-ற்ஜ்ண்ற்ற்ங்ழ்.ண்ய்/  என்ற  இணயைதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.
மத்திய அரசின் "கோவின்' இணையதளத்திலும், செயலியிலும் தடுப்பூசி தொடர்பான தகவல்களைப் பெறலாம். இதேபோல், "பைன்ட் ஸ்லாட்.இன்', "கெட்ஜேப்.இன்', "அன்டர்45.இன்' ஆகிய இணையதளங்களும் இதுபோன்ற தகவல் சேவைகளை அளிக்கின்றன.
"கூகுள் மேப்', "மேப் மை இந்தியா' ஆகியவற்றிலும் கரோனை தடுப்பூசிகள் போடும் இடங்களைக் கண்டு பிடித்துவிடலாம்.
உலக நாடுகள் ஒன்றிணைந்து அளித்து வரும் தொழில்நுட்ப உதவிகளை அனைவரும் பயன்படுத்தி கரோனா பிடியில் இருந்து தப்பிப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com