

முக நூலிலிருந்து....
விதை தூவும் பறவை
எடுத்துக் கொள்வதில்லை
செல்ஃபி.
மழைபொழிந்திடும் மேகங்கள்
தண்ணீர்க் கட்டணம்
வசூலிக்கவில்லை.
மரங்களை வளர்த்தெடுக்கும் பூமி
வரி கேட்பதில்லை.
பூக்களின் சேர்க்கைக்கு
பதிவுக் கட்டணம் கேட்பதில்லை
தேனீ.
நா.வே.அருள்
தன் இருக்கைக்குப் பக்கத்தில்
அமர்ந்திருக்கிறவன் பற்றிய
கவலை இல்லை.
இருக்கை காலியான போதும்
வருத்தம் இல்லை.
இருக்கை இல்லாமல் இருந்திருக்கலாம்
என்றகவலையின் முன்.
வதிலை பிரபா
நான் எல்லாவற்றையும்
கேட்டுக் கொண்டிருக்கிறேன்...
நீங்கள் பேசிக்கொண்டேயிருங்கள்.
ஒரு வேண்டுகோள்...
கற்றுக்கொள்ள மட்டும்
என்னை அனுமதியுங்கள்.
இன்னும் கல்லாததைக் கற்பதற்கு
நான் ஆவலோடு இருக்கிறேன்.
மெளனன் யாத்ரீகா
சுட்டுரையிலிருந்து...
முதுகுக்குப் பின்னால்
கத்தி போன்ற வார்த்தைகளால் குத்தி விட்டு...
முன்னால் வந்து நண்பன் போல்
நலம் விசாரித்துச் செல்லும்
மனிதர்கள் வாழும் உலகம் இது.
அன்பிற்கினியாள்
பயந்தவர்களே
குரலை உயர்த்திப்
பேசுவார்கள்.
இஹன்ஷி
பிடிக்குதோ பிடிக்கவில்லையோ
பிடித்தவர்களிடம் சில சமயம்
நடிக்கத்தான் வேண்டியிருக்கிறது...
பல பிரச்னைகளைத் தவிர்க்க.
நான்
பல மனிதர்களையும்,
பல கதைகளையும்,
பல கனவுகளையும்
சுமந்து செல்கிறது
அந்த ஜெனரல்
கம்பார்ட்மெண்ட்!
மார்ஷல்
வலைதளத்திலிருந்து...
திருக்குறள் எதையும் புதிதாகக் கண்டு சொல்லும் நூல் அல்ல. எங்கும், எப்போதும் நிறைந்து இருக்கும் அறத்தை தொகுத்துச் சொன்ன நூல். அவ்வளவுதான்.
"நெருப்பில் கை வைக்காதே. சுடும்' என்று அம்மா சொல்கிறாள். பிள்ளை "அது எப்படி சுடும்?' என்று கை வைக்கிறான். சுடுகிறது. அம்மா சொன்னதால் சுடவில்லை. அம்மா சொல்லாவிட்டாலும் சுட்டிருக்கும்.
அது போல வள்ளுவர் செய்திருப்பது "சுடும்' என்ற செய்தியைச் சொல்வது. வாழ்க்கையை மிக நுணுக்கமாக ஆராய்ந்து, அதன் இரகசியங்களை அறிந்து தொகுத்துச் சொன்னது.
பொருளைப் போட்டால் அது புவி ஈர்ப்பு காரணமாக கீழே விழும் என்று சொன்னது நியூட்டன். அவர் சொல்லாவிட்டாலும் புவி ஈர்ப்பு இழுக்கத்தான் செய்யும்.அது ஓர்அறிவியல் உண்மை. நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அது நடந்தே தீரும்.
"எனக்கு நியூட்டனின் சித்தாந்தத்தில் நம்பிக்கை இல்லை. நான் பத்தாவது மாடியில் இருந்து குதிக்கப் போகிறேன்' என்று சொல்பவர்களை நாம் என்ன செய்ய முடியும்? அவர்கள் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்யலாம். அவ்வளவுதான்.
பெண் ஒழுங்காக இருந்தால் ஆணுக்குச் சிறப்பு என்றால்,அப்படி என்றால் ஆண் ஒழுங்காக இருந்தால் பெண்ணுக்கு சிறப்பு இல்லையா என்று கேட்டால், சிறப்புத்தான். பின் ஏன் அதை வள்ளுவர் சொல்லவில்லை. பெண் மட்டும் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று சொல்கிறாரே என்று கேட்டால், ஆணுக்கு பதினொரு கடமைகள் சொல்லி இருக்கிறார். அவற்றை ஊன்றிப் படித்தால், அவர் ஆண் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார் என்று புரியும்.
http://interestingtamilpoems.blogspot.com/
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திருவேங்கடம் வட்டார வாக்குச்சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

செல்லத்தாயாா்புரம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

ஏலகிரி மலையில் பற்றி எரியும் காட்டு தீ: செடி, கொடிகள் எரிந்து நாசம்

நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெயா்பலகை திறப்பு
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

