

முக நூலிலிருந்து....
மரத்தின் நிழலைக் கடத்த முடியாத கோபத்தில்
வெள்ளமாய் பெருகி வந்து மரத்தைக் கடத்திப் போனது, நதி.
இரா. எட்வின்
அவரவரும்
அவர் அவராக இருப்பதில்லை.
அவரவரும் எவரெவர்க்காகவோ
எவர் எவராகவோ மாறிவிடுவதால்.
துரை பாரதி
யாரிடமோ
சொல்லிக் கொள்வதுபோல,
சும்மா சொல்லிக் கொள்...
உனக்கு நீயாவது
இருக்கிறாயே.
உமா மோகன்
தெரியும்.
நீங்கள் நாளையைப் படம் எடுப்பவர்.
தெரியும்.
நான் நேற்றை சித்திரம் வரைகிறவன்.
தெரியும்.
நாம் இன்றின் சாப்பாட்டு மேஜையில் ஒன்றாக அமர்ந்திருக்கிறோம்.
வண்ணதாசன்
சிவசங்கரன்
சுட்டுரையிலிருந்து...
ஒருவரின் தேவையைப் பொறுத்தே உங்களுடன் செலவிடப்படும் நேரம் நிர்ணயிக்கப்படுகிறது.
தேவைகள் குறையும் போது நேரங்களும் தேவைகளும் குறைந்து போகும்.
யாழினி
நன்றிக்கு வித்தாக திருப்பி நல்லது செய்யணும்னு அவசியம் இல்லை...
அந்த உணர்வு மனசுல இருந்தாலே போதும்.
நவ்யா
தவறாகச் செய்த பிழைகள்...
சரியாக குத்திக் கிழிக்கிறது மனதை.
நீர்ப்பறவை
நாம் செல்ல வேண்டிய பாதையைத் தொலைத்துவிட்டு தடுமாறும் போதெல்லாம்...
ஒரு புதிய பாதையைக் கண்டுபிடிக்கிறது கால்கள்.
நம்பிக்கையோடு பயணிப்போம்!
தவசி
வலைதளத்திலிருந்து...
பல்லிச் சத்தத்தையும் சகுனமாகக் கருதும் பழக்கம் நம்மிடமுண்டு. பல்லியின் சத்தத்தை வைத்துச் சகுனம் பார்க்கப்படுவதை முன்னிட்டே "கௌரி சாஸ்திரம்' எனும் நூல் எழுதப்பட்டிருக்கிறது. அதில், பல்லியின் சத்த எண்ணிக்கையை அடிப்படையாக வைத்தும் கணிக்கப்பட்டுள்ள சகுனத்தை அறியலாம். அதுமட்டுமல்ல, பல்லி எச்சமிடுவதையும் சத்தமிடுவதையும் கணக்கிட்டு, நல்லதோ கெட்டதோ நடக்குமென்று தமிழ்ச் சமூகம் நம்பியிருக்கிறது.
பல்லி என்றில்லை, காகம், கருடன், கூகை, ஆந்தை, வெüவால் போன்றவையும் சங்க மரபில் சகுனத்திற்கு உதவியுள்ளன. வெளியே கிளம்பும்போது பூனை குறுக்கே வந்தால் காரியம் கெட்டுவிடுமென்று சொல்வதை இப்போதும் கேட்க முடிகிறது. வாய்ப்புகளும் வசதிகளும் அதிகரித்துவிட்ட நகர வாழ்க்கையிலும் இப்படியான நம்பிக்கைகள் தொடர்கின்றன. பூனைகளே அற்றுவிட்ட அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகளும் வார்த்தையிலேனும் பூனையை வைத்திருப்பதைப் பார்க்கலாம்.
தொல்குடிச் சமூகத்தின் தொடர்ச்சியாக இவற்றைச் சகித்துக்கொள்ள வேண்டுமே அல்லாது, அறிவையும் அறிவியலையும் வைத்து வழக்காடுவதில் பிரயோஜனமில்லை. மக்களின் எந்த ஒரு நம்பிக்கையும் கேள்விக்கு அப்பாற்பட்டதல்ல. என்றாலும், இம்மாதிரியான கேள்விகள் ஒருபோதும் நன்மை பயப்பதில்லை என்பதே என் புரிதல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திருவேங்கடம் வட்டார வாக்குச்சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

செல்லத்தாயாா்புரம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

ஏலகிரி மலையில் பற்றி எரியும் காட்டு தீ: செடி, கொடிகள் எரிந்து நாசம்

நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெயா்பலகை திறப்பு
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

