இணைய வெளியினிலே...

வழக்கமாய் வேடிக்கை பார்க்கும்படித்துறைக்கு எதிர்க்கரையில் இருக்கிறேன்.
இணைய வெளியினிலே...


முக நூலிலிருந்து....


வழக்கமாய் வேடிக்கை பார்க்கும்
படித்துறைக்கு எதிர்க்கரையில் இருக்கிறேன்.
பெயர் ஒன்றெனினும்...
அங்கிருந்த நதி வேறு.
இங்கிருக்கும் நதி வேறு.

நேசமிகு ராஜகுமாரன்

வழி மறந்து நின்ற என்னை
நடத்திச் செல்கிறது...
பழகிய பாதையில்
நடந்த கால்கள்.

இளமதி

பிடித்தங்கள் இறுதிவரை
நிலைக்குமென்ற
தப்புக்கணக்கைத்தான்
சரியாகக் காப்பாற்றுகிறோம்,
பொதுவாக...
கனகா பாலன்

பெரும் மரங்கள்

நிறைந்த காட்டினை அழித்து
நான்கு வழிச்சாலை
எட்டு வழிச்சாலை என அமைத்து
சாலைகளின் நடுவே சிறு
செடிகளை நட்டு வைக்கின்றனர்.
விரைந்து செல்லும்
வாகனங்களின் காற்றசைவில்
தலையினை ஆட்டி
சிரிக்கின்றன செடிகளின் மலர்கள்.

வைகை சுரேஷ்

சுட்டுரையிலிருந்து...


துண்டொன்றைக்
கட்டிக் கொண்டு
அம்மாவாக முடிகிறது
குழந்தைகளால் ....
குழந்தையாக
முடியாமல்
அல்லற்பட்டுக் கொண்டிருப்பது
அம்மாக்கள் தான்.

மஞ்சப்பை


துன்பங்கள் நிறைந்த
வாழ்க்கையை
இன்பங்களாக மாற்ற
வேண்டுமானால்...
அனைத்தையும் ரசிக்க
கற்றுக் கொள்..!

பெல் பாய்

முகமும் தேவையில்லை...
முகவரியும் தேவையில்லை...
அன்பான ஆதரவான
ஆறுதலான மொழி கூறும்
இணைய நட்பும் ஒரு வரம்தான்.

அன்புத் தோழி

வலைதளத்திலிருந்து...


விலங்குகள் இல்லாமல் என்ன மனிதன்? எல்லா விலங்குகளும் இந்த பூமியிலிருந்து போய்விடுமானால், பிசாசுத் தனிமையில் மனிதன் இறந்து போவான். விலங்குகளுக்கு நேர்வது யாவும் தாமதமின்றி மனிதனுக்கும் நேரிடும். எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை.
எங்கள் காலடியில் உள்ள நிலம் எங்களுடைய மூதாதையரின் சாம்பல் என்பதை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும். எனில் அவர்கள் நிலத்தை மதிப்பார்கள்.
எங்களுடைய உடன்பிறந்தவர்களின் வாழ்க்கையால் வளமாக்கப்பட்டது இந்த பூமி என்று உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லுங்கள். இந்த பூமி எங்கள் தாய் என்று எங்களுடைய குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்திருந்தோம் என்பதை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.
பூமிக்கு எது நேர்ந்தாலும், அது பூமியின் பிள்ளைகளுக்கும் நேரிடும். நிலத்தின் மீது துப்பும்போது மனிதன் தனது உடம்பின் மீதே துப்பிக் கொள்கிறான்.
எங்களுக்குத் தெரியும் இது: பூமி மனிதனுக்கு உரிமையான தல்ல; மனிதன் பூமிக்கு உரிமையானவன். எங்களுக்குத் தெரியும் இது : ரத்தம் ஒரு குடும்பத்தை ஐக்கியப் படுத்துவதுபோல எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்கின்றன. பூமிக்கு எது நேர்ந்தாலும் அது பூமியின் பிள்ளைகளுக்கு நேரிடும். வாழ்க்கை வலையை நெய்தவன் மனிதனல்ல. அவன் அதில் வெறும் கண்ணி. வலைக்குச் செய்வது எதுவாயினும் அவன் தனக்கே செய்து கொள்கிறான்.

http://vaalnilam.blogspot.com/
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com