திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

வேடிக்கை மற்றும் கேலிச்சித்திரப் போட்டி!

ஐக்கிய நாடுகளின் பெண்கள் அமைப்பு, ஐரோப்பிய ஆணையம், பெல்ஜியம், பிரான்சு, மெக்சிகோ ஆகியவை இணைந்து "உலகளாவிய வேடிக்கை மற்றும் கேலிச்சித்திரப் போட்டி'க்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றன.

Published On :28 ஜனவரி 2024, 12:55 am IST


ஐக்கிய நாடுகளின் பெண்கள் அமைப்பு, ஐரோப்பிய ஆணையம், பெல்ஜியம், பிரான்சு, மெக்சிகோ ஆகியவை இணைந்து "உலகளாவிய வேடிக்கை மற்றும் கேலிச்சித்திரப் போட்டி'க்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றன. பெய்ஜிங் பிரகடனத்தின் 25 - ஆம் ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்பெறும் இப்போட்டியில் பாலினச் சமத்துவத்தில் நம்பிக்கையுடையவர்கள், எதிர்-காலத்திற்கான பெண்களின் சமமான உரிமைகளை உணர்ந்தவர்கள் பங்கேற்கலாம். 

பெண்கள் மற்றும் சுற்றுச்சூழல்,   அதிகாரம் மற்றும் முடிவெடுக்கும் திறனில் பெண்கள்,  பெண் குழந்தை,  பெண்கள் மற்றும் பொருளாதாரம்,   பெண்கள் மற்றும் வறுமை,  பெண்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்ட  12 தலைப்புகளில் படங்கள் வரையலாம். 

பங்கேற்பு விதிமுறைகள்

இப்போட்டியில் பங்கேற்பவர்கள் 18-1-2021 அன்று 18 வயது முதல் 25 வயதுக்குள் இருப்பவர்களாக இருக்க வேண்டும்.  சட்டப்படியான பெயர்களிலேயே படங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.  வரையும் படத்தில் சொற்கள் எதுவும் இருக்கக் கூடாது.     வரையும் படம் ஏ4 (210 மி.மீ ல 297 மி.மீ) அளவிலான தாளில் அமைய வேண்டும். நீளவாக்கிலோ அல்லது படுக்கைவாக்கிலோ இருக்கலாம். வரையும் படம், பல படங்களைக் உள்ளடக்கியதாக இருந்தால் படங்களின் எண்ணிக்கை ஆறு பெட்டிகளுக்கு அதிகமின்றி ஏ4 தாள் அளவிலேயே இருக்க வேண்டும்.  படத்தின் பிரிதிறன் அளவு 150 டிபிஐ அல்லது அதற்கு அதிகமானதாக இருக்க வேண்டும். படம்  jpg, jpeg, png மற்றும் pdf கோப்புகளாக அமைய வேண்டும். 

சமர்ப்பிக்கப்படும் படம் உண்மையானதாகவும், இதுவரை வேறு எந்தவொரு ஊடகத்திலும் வெளியிடப்படாததாகவும் இருக்க வேண்டும். 

படங்கள் சமர்ப்பிக்க வேண்டிய  கடைசி நாள்: 14-3-2021.

பரிசுகள் 

இப்போட்டியில் முதல் பரிசு 1200, இரண்டாம் பரிசு 750, மூன்றாம் பரிசு 500  ஈரோ டாலர்களாக வழங்கப்படும்.  அவை இந்திய ரூபாய் மதிப்பில்  முறையே,  ரூ.10,60,00 - ரூ.66,000 - ரூ.44,000 ஆகும்.  இறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பெற்ற படங்கள் அனைத்தும் பாரிஸ் நகரில் நடைபெறும் சமத்துவ மன்றத்தில் படம் சமர்ப்பித்தவர்களின் மின்னஞ்சல் முகவரியுடன் காட்சிப்படுத்தப்படும். போட்டிக்கான முடிவுகள் 2021 -ஆம் ஆண்டு மே மாதத்தில் வெளியிடப்படும்.


இப்போட்டி குறித்த மேலும் கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பின் வலைத்தளத்தின் https://www.unwomen.org/en/news/stories/2021/1/announcement-comic-and-cartoon-competition  எனும் இணைய முகவரியினைப் பயன்படுத்தலாம்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.