47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ட்விட்டர்... தவறான பின்னூட்டத்தைத் தடுக்கலாம்!

ஒரு தகவலை வைரலாக்க உதவும் ட்விட்டர் சமூக வலைதளத்தில் பதிவிடப்படும் தகவல்களுக்கு வரும் பின்னூட்ட கருத்துகள் ஏராளம்.

News image
Updated On :15 பிப்ரவரி 2022, 12:30 am

அ. சர்ஃப்ராஸ்

ஒரு தகவலை வைரலாக்க உதவும் ட்விட்டர் சமூக வலைதளத்தில் பதிவிடப்படும் தகவல்களுக்கு வரும் பின்னூட்ட கருத்துகள் ஏராளம். அதில் சில கருத்துகள் விவாதத்துக்கு ஆரோக்கியமானவையாக இருந்தாலும், பல கருத்துகள் தனிமனித தாக்குதலைத் தொடுக்கும் வகையில் அமைந்துவிடுகின்றன.

இதற்குப் பயந்தே பலர் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பதிவிடுவதையே தவிர்த்துவிடுகிறார்கள்.

இதுபோன்ற தனிமனித தாக்குதல் பின்னூட்டகருத்துகளை - எதிர்மறை பின்னூட்ட கருத்துகளை - எல்லாரும் தெரிந்து கொள்ளாதபடி தடுக்க, ட்விட்டர் ஒரு புதிய சேவையைத் தொடங்கி உள்ளது. "டவுன்வோட்' என்ற இந்த புதிய சேவை மூலம்தேவையற்ற பின்னூட்ட கருத்துகளைத் தேர்வு செய்துவிட்டால் அந்தத் தகவல்கள் எல்லாருக்கும் தெரியாது. மேலும், இந்தத் தேர்வு செய்யப்பட்ட பின்னூட்டகருத்துகள், பயனாளிக்கு மட்டும் தெரியும். வேறு நபர்களுக்குத் தெரியாது.

இதற்காக தனி பொத்தானை ட்விட்டர் உருவாக்கி உள்ளது. இதன் மூலம் தேவையற்ற, விஷமத்தனமான கருத்துகளைத் தொடர்ந்து பதிவிடுபவர்கள் கண்டறியப்படுவார்கள். ட்விட்டர் நிறுவனம் சோதனை முயற்சியில் ஆய்வுக்காக இந்த சேவையைப் பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளது.

கணினி வழி ட்விட்டர் பயன்பாட்டாளர்களுக்கு மட்டும் வழங்கப்படும் இந்த சேவை, விரைவில் அனைவருக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேபோல், தற்போது 280 வார்த்தைகளாக உள்ள தகவல் பதிவின் அளவை, "ஆர்டிகல்ஸ்' என்ற புதிய சேவையின் மூலம் விரிவாகப் பதிவிடும் வசதியும் விரைவில் அறிமுகமாக உள்ளது.

விடியோக்கள் இயங்கும் வேகத்தைக் கூட்டவும், குறைக்கவும் செய்யும் புதிய சேவையையும் ட்விட்டர் தொடங்கி உள்ளது. 0.25எக்ஸ் முதல் 2.0 எக்ஸ் வரையில் இந்த புதிய சேவையில் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. இதுவும் சோதனை அடிப்படையில் சில பயன்பாட்டாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக்கின் பயன்பாடு மக்களிடையே குறைந்து வருவதால், அந்த இடத்தைப் பிடிக்க ட்விட்டர் பல்வேறு புதிய சேவைகளைத் தொடர்ந்து அறிவித்து வருவதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.