இயற்கையான உலகம்... அழைத்துச் செல்லும் செயலி!

வாகனங்களின் இரைச்சலும்,அக்கம்பக்கம் உள்ள வீடுகளில் இருந்து வெளிவருகிற ஒலிகளும் என நகரங்களில் எப்போதும் ஒலிகளைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
இயற்கையான உலகம்... அழைத்துச் செல்லும் செயலி!

வாகனங்களின் இரைச்சலும்,அக்கம்பக்கம் உள்ள வீடுகளில் இருந்து வெளிவருகிற ஒலிகளும் என நகரங்களில் எப்போதும் ஒலிகளைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். டென்ஷனும் ஆகலாம்.ஒரு கிளியின் கீச்சிடலை, குருவி எழுப்பும் ஒலியை அதன் நுண்ணிய தன்மைகளுடன் நம்மால் நகரத்தில் கேட்கவே முடியாது.இயற்கையான உலகில் இருந்து நாம் எவ்வளவுக்கு எவ்வளவுவிலகிச் செல்கிறோம் என்பதையை இவை காட்டுகின்றன.

என்றாலும், செயற்கையாகவேனும் இயற்கையுடன் நெருங்கி வாழவே மனிதர்கள் எப்போதும் விரும்புகிறார்கள்.

நகரங்களில் உள்ள மாடித் தோட்டங்கள், பூச்செடிகள்,வீடுகளில் வளர்க்கப்படும் பறவைகள், மீன்கள் எனஎல்லாவற்றையும் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இப்போது, பறவைகள் எழுப்பும் ஒலியை, தவளைகள், பூச்சிகள் எழுப்பும் பல்வேறுவிதமான ஒலிகளை நகரத்திலும் கூடநீங்கள் கேட்க முடியும்.

அது மட்டுமல்ல, பறவைகள், தவளை, பூச்சிகள் எழுப்பும் ஒலியைக் கேட்ட மாத்திரத்திலேயேஅது என்ன பறவை? அது எந்தவகைத் தவளை? அது என்ன பூச்சி? என்று உங்களால் அடையாளம் கண்டு கூற முடியும் என்றால் உங்களுக்காகவே ஒரு செயலி வந்திருக்கிறது. அந்தச் செயலியை வைத்து பல்வேறு பறவைகள், தவளைகள், பூச்சிகளின் ஒலிகளைக் கேட்டு நீங்கள் இன்பமடைய முடியும். அப்படி கேட்பது நல்ல பொழுதுபோக்காகவும் இருக்கும்.அதோடு கூடவே உங்களுக்கு இதுவரை தெரியாத பலபறவைகள், தவளைகள், பூச்சிகள் பற்றித் தெரிந்து கொள்ளவும் இந்த செயலி உதவும்.இந்தச் செயலியை குழந்தைகள், இளம் பருவத்தினர் மட்டுமல்ல,பறவைகளின் ஒலிகளைக் கேட்பதில் ஆர்வமுள்ள, கேட்டு மகிழ்ச்சி அடைகிற, யார் வேண்டுமானாலும் பயன்படுத்தி மகிழலாம்.

இதை உருவாக்கியிருப்பவர்கள்,பெங்களூருவில் உள்ள "இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்'(ஐஐஎஸ்சி) கல்வி நிறுவனத்தில் பயின்ற ஒரு பேராசிரியரும், அதில் படித்த முன்னாள் மாணவர்களும்தான்.செயலியின் பெயர்:வாட்'ஸ் தேட் கால்?

இந்தச் செயலி எவ்வாறு வேலை செய்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பவர்கள், உடனே செய்ய வேண்டியது,இந்தச் செயலியைஅவர்களுடைய செல்லிட பேசியில் கூகுள் பிளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்வதுதான்.பல பறவைகளின், தவளைகளின், பூச்சிகளின் ஒலியை உங்களால் கேட்க முடியும்.உதாரணமாக நீங்கள் "தவளை' என்ற பிரிவை தேர்ந்தெடுத்தால், விதவிதமான தவûளைகளின் ஒலியை நீங்கள் உங்கள் செல்பேசியில் கேட்க முடியும். நான்கு வேறு வேறு வகைத் தவளைகளின் படங்களையும் பார்க்க முடியும்.நீங்கள் கேட்ட ஒலியை எழுப்பிய சரியான தவளையைநீங்கள் கண்டுபிடித்து செயலிக்குத்தெரிவித்தால் உங்கள் கணக்கில் ஒரு மதிப்பெண் சேர்ந்துவிடும். இதேபோன்று நீங்கள் பல்வேறு பறவைகளின் ஒலிகளைக் கேட்டு, அவற்றைத் தெரிவிக்க முடியும். பூச்சிகள் எழுப்பும் ஒலிகளைக் கேட்டும் அவற்றைத் தெரிவிக்க முடியும்.

இந்தச் செயலியை உருவாக்கியவர் ஸ்ரீகாந்த் தியோடர்.தற்போது மகாராஷ்டிரா மாநிலம் புணே நகரில் உள்ள ஃபிளேம் பல்கலைக்கழகத்தில் என்விரான்மென்டல் துறையில் உதவிப் பேராசிரியராகப்பணி புரிந்து வருகிறார். இவர் முனைவர் பட்டம் பெற்றது,"இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்' - பெங்களூருவில் தான்.

அவர் இந்தச் செயலி உருவானது குறித்துப் பேசும்போது...

""இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் - பெங்களூருவில் நான் படிக்கும்போது,அங்கே சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தில்பேராசிரியையாகப் பணியாற்றும் ரோகிணி பாலசுப்பிரமணியன் வழிகாட்டுதலில் இந்தச் செயலியை படிப்பு தொடர்பான ஒரு புராஜெக்ட் என்ற அடிப்படையில் வடிவமைத்தேன். என்னுடன் இரண்டு ஆய்வு மாணவர்களும் பங்கேற்றனர்.

அதற்கு முந்தைய ஆண்டு பிப்ரவரி மாதம் 28 - ஆம் தேதி ஐஐஎஸ்சி அறிவியல் தினத்தைக் கொண்டாடியது. அப்போது அங்கு பயிலும் மாணவர்களின் திறமையை வெளிக்காட்டும்விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர்.அப்போது நாங்கள் பல்வேறு பறவைகளின், தவளைகளின், பூச்சிகளின் ஒலியை எழுப்பி மாணவர்களைக் கேட்கச் செய்தோம்.மாணவர்களில் சிலர்,ஒலியைக் கேட்டு அந்த ஒலியை எழுப்பிய பறவையைக் கண்டுபிடித்துச் சொன்னார்கள்.சரியாகச் சொன்ன மாணவர்களுடைய கணக்கில் அவர்கள் சொன்ன எண்ணிக்கையைப் பொருத்து அவர்கள் எடுத்த ஸ்கோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த நிகழ்ச்சியை நாங்கள் நடத்தியபோது, மாணவர்கள் எழுப்பிய உற்சாக ஒலி எங்களுக்கு ஊக்கமளித்தது.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நாங்கள் பல்வேறு பறவைகளின், தவளைகளின், பூச்சிகளின் ஒலிகளைப் பயன்படுத்தி இந்தச் செயலியை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டோம். 2019 - இல் தொடங்கிய எங்களுடைய முயற்சி வெற்றி அடைய இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஏனென்றால், பறவைகள், தவளைகள், பூச்சிகள் வாழும் காடுகள்,சிறிய ஊர்களுக்குச் சென்று அவை எழுப்புகிற ஒலியைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றைப் பதிவு செய்வது என்பது ஒருவரால் செய்ய முடியாத செயல். அதற்கு நிறையப் பேர் தேவைப்படுவார்கள்.மேலும் செயலியை உருவாக்குவதற்குத் தேவையான பொருள்களும் அவசியம். இந்தச் செயலியை இந்தியாவில் உள்ளவர்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இங்குள்ள பறவைகள், தவளைகள், பூச்சிகள் எழுப்பும் ஒலிகளைக் கொண்டுஉருவாக்கினோம். அதிலும் குறிப்பாக இந்தச் செயலி பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், மாணவர்களுக்குப் பயன்பட வேண்டும் என்று நினைத்தோம். சாதாரணமாகவே குழந்தைகள் வெளி உலகில் இருந்தே அதிகம் கற்றுக் கொள்கிறார்கள்.பறவைகளின், விலங்குகளின் ஒலிகளை ஆர்வத்துடன் கேட்பார்கள். அவற்றை நன்றாக நினைவில் வைத்துக் கொள்வார்கள்.வன உலகை அனுபவிக்கமக்கள் காதுகளையும், கண்களையும் திறந்து வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே இதை உருவாக்கினோம்.

இந்தச் செயலியில் நூறு பறவைகள் எழுப்பும் ஒலிகளைப் பதிவு செய்திருக்கிறோம்.பத்திலிருந்து 13 வகை தவளைகளின் ஒலிகளையும் அவற்றின் படங்களுடன் பதிவு செய்து வைத்திருக்கிறோம்.உண்மையில் இந்தச் செயலியில் உள்ளதை விடபல ஆயிரம்மடங்கு உயிரினங்கள் உலகில் வாழ்கின்றன.எல்லாவற்றையும் பதிவு செய்வதற்கு இந்த வாழ்நாள் போதாது'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com