கின்னஸ் சாதனைக்குப் போகும் திருக்குறள்
பள்ளியில் படிக்க வரும்போது, பள்ளி சுவர்களில் எழுதப்பட்டிருக்கும் திருக்குறள். பஸ்ஸில் பயணிக்கும்போது அதில் எழுதப்பட்டிருக்கும் திருக்குறள் என தினம் தினம் வாசித்து


பள்ளியில் படிக்க வரும்போது, பள்ளி சுவர்களில் எழுதப்பட்டிருக்கும் திருக்குறள். பஸ்ஸில் பயணிக்கும்போது அதில் எழுதப்பட்டிருக்கும் திருக்குறள் என தினம் தினம் வாசித்து வாசித்து மனப்பாடம் ஆனபோது, திருக்குறள் பிற்காலத்தில் தன்னை முழுமையாக வளைத்துக் கொண்டுவிடும். ஒரு திருப்பத்தை உண்டாக்கும் என்று கிருத்திகாவிற்கு தெரியாது.
24 வயதாகும் கிருத்திகா புதுவை ராஜீவ் காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறார்.
கிருத்திகா நுண்கலையில் முதுகலை பட்டதாரி என்பதும், பரத நாட்டியம் பற்றி தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் M.Phill., செய்துள்ளார்..
பரத நாட்டியக் கலைஞராகவும் விளங்கும் கிருத்திகா, தனது நடன குருவான ஜெயஸ்ரீ நாராயணன் துணையுடன், வாய்ப்பாட்டு, இசைக்கருவி விற்பன்னர்களிடம் ஓராண்டு காலமாக கலந்து ஆலோசித்து, 1330 திருக்குறள்களை இசை வடிவில் தாள, லய கூறுக்குள் கொண்டுவந்து சிட்டைப்படுத்தி, பரத நாட்டிய நிகழ்ச்சியாக உருவாக்கியிருக்கிறார்.
அதை இடைவேளை இல்லாமல் தொடர்ந்து 6 நாட்கள் நீண்ட நடன நிகழ்ச்சி நடத்தத் தன்னைத் தயார் செய்து வருகிறார் கிருத்திகா.
காப்பியங்கள் நடன, இசை வடிவம் பெற்றுள்ளன. காப்பியங்களில் கதை இருப்பதால், நடனக் காட்சிகள் அமைப்பதில் சிரமம் இல்லை. நிகழ்ச்சிகளைப் பார்க்கிறவர்களுக்கும் கதை தெரிந்திருப்பதால் நிகழ்ச்சியுடன் அவர்களால் பயணிக்க, ரசிக்க முடியும். ஆனால் திருக்குறளில் கதை ஏதும் இல்லை. நீதி போதனை மட்டுமே உள்ளது. அப்படி இருக்க, பார்வையாளர்களுக்குப் பிடிக்கும் வகையில் திருக்குறளை எப்படி கையாண்டார். கிருத்திகாவே சொல்கிறார்:
""திருக்குறளை மேடையில் நடன இசை வடிவத்தில் அரங்கேற்றப் போகிறேன் என்று சொன்னதும், இது விஷப் பரீட்சை. வேண்டாம் என்று எச்சரித்தார்கள். முயற்சி செய்தால் முடியாதது ஏதும் இல்லை. இந்த முயற்சியை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டேன். எனது முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறுவதற்கு, எனது குருவும், இதர இசை விற்பன்னர்களும் பெற்றோர்களும்தான் காரணம்.
சிறுவயதிலிருந்தே திருக்குறள் மீது எனக்கு ஈர்ப்பு உண்டு. ஏன் என்று காரணம் கேட்டால் சொல்லத்தெரியாது. வெறும் 7 சொற்களில் பல பெரிய விஷயங்களைச் சொல்லியிருப்பவர் திருவள்ளுவர். திருக்குறளின் அர்த்தம் புரியப் புரிய, திருக்குறள் என்னை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டது. பரத்வாஜ் அறத்துப்பால் குறளுக்கு இசை வடிவம் கொடுத்திருக்கிறார். நான், இசையுடன், நடன வடிவமும் கொடுக்கத் தீர்மானித்தேன்.
இந்த திட்டம், எதிர்பார்த்ததைவிட ரொம்ப அருமையாக வந்திருக்கிறதென்றே நான் நினைக்கிறேன். எந்த புராணமும், காப்பியமும் கடவுள் வாழ்த்துடன் தொடங்குவதால், கச்சேரிகளில் முதல் ராகமாக எடுத்துக்கொள்ளப்படும் நாட்டை ராகத்தில் கடவுள் வாழ்த்து அதிகாரத்திற்கு இசைவடிவம் கொடுத்தோம். அமிர்தவர்ஷிணி ராகம் பாடினால் மழை பெய்யும் என்பது நம்பிக்கை. மழை பற்றிய "வான் சிறப்பு' அதிகாரத்திற்கு அமிர்தவர்ஷிணி ராகத்தைக் கொண்டு சென்றோம். சுமார் 90 ராகங்களில் திருக்குறளுக்கு இசை வடிவம் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரத்திற்கும் தொடக்கத்தில் பொருத்தமான ஒலிகளையும் பின்னணியில் ஒலிக்கச் செய்துள்ளோம். வான் சிறப்பு அதிகார நடன இசை வடிவம் தொடங்குமுன், இடி, மின்னல், மழை ள்ர்ன்ய்க் ங்ச்ச்ங்ஸ்ரீற் கொடுத்து துவங்குவோம்.
2016இல் கின்னஸ் சாதனைக்கான 6 நாள் தொடர்ந்து திருக்குறள் நீண்ட நாட்டிய நிகழ்ச்சியை புதுவையில் அரங்கேற்றப் போகிறேன். ஒரு மணி நேர நிகழ்ச்சிக்குப் பிறகு ஐந்து நிமிடம் ஓய்வுக்கு வாய்ப்பு உண்டு. தூக்கம், உடை மாற்றத்திற்கு ஒதுக்குவேன். ஒரு திருக்குறள் அதிகார நிகழ்ச்சி முடிந்து அடுத்த அதிகார நிகழ்ச்சி தொடங்குவதற்கு, முப்பது விநாடி இடைவெளி கிடைக்கும். அந்த இடைவெளியில், பழச்சாறு, குளுகோஸ், தண்ணீர் சில ஸ்பூன்கள் குடிக்கலாம். அதுதான் அந்த 6 நாள்களுக்கான எனது உணவு.
கேரளத்தில் ஹேமலதா என்பவர் 123 மணி 15 நிமிடங்கள் தொடர்ந்து நடனமாடி கின்னஸ் சாதனைகளில் இடம்பிடித்திருக்கிறார். அந்த சாதனையை முறியடிக்கவே 144 மணி நேர அதாவது 6 நாட்கள் தொடர்ந்து நடனமாட தீர்மானித்திருக்கிறேன்.
8 வயதில் பரத நாட்டியம் கற்றுக்கொள்ள தொடங்கினேன். பள்ளி, கல்லூரி, பல்கலைகழக நடனப் போட்டிகளில் பங்கெடுத்து பரிசுகள், ள்ஸ்ரீட்ர்ப்ர்ழ்ள்ட்ண்ல் வாங்கியிருக்கிறேன். கலை கலாச்சார பரிவர்த்தனை திட்டத்தில் சீனா,
வியட்நாம் நாடுகளில் எனது நடன நிகழ்ச்சிகள் அரங்கேறியிருக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...