உயிர்க் கொல்லி நோய் வந்தும் உழைப்பால் உயர்ந்தவர்!
நமக்கு எதாவது நோயோ, துயரமோ ஏற்பட்டால் துவண்டு விடுவோம். வாழ்க்கையே முடிந்து விட்டது என்று நொந்துக் கொள்வோம்.


நமக்கு எதாவது நோயோ, துயரமோ ஏற்பட்டால் துவண்டு விடுவோம். வாழ்க்கையே முடிந்து விட்டது என்று நொந்துக் கொள்வோம். அல்லது நமக்கு வந்துள்ளது நம் தலைவிதி என்று நினைத்து அமைதியாகிவிடுவோம். ஆனால் இது எதையுமே செய்யாமல்,வாழ்க்கையில் போராடி, இரவுப் பகல் பாராமல் உழைத்து, இன்று உலக நாடுகள் அழைக்க ஓடிக் கொண்டிருக்கிறார் ப.கெüசல்யா. யார் இவர்? இவர்தான் பாசிடிவ் வுமன் நெட்வொர்க் அமைப்பின் தலைவி. இந்த அமைப்பில் சுமார் 35,000 பெண்கள் அங்கத்தினர்களாக இருக்கிறார்கள். எல்லோருமே ஏஐய ஆல் பாதிக்கப்பட்டவர்கள். இந்த அமைப்பு ஏஐய நோய் உள்ளவர்களுக்கு முடிந்தவரை உதவி செய்கிறது. இந்தியாவில் இந்த நோயைப் பார்த்து பயப்படும் நிலையில் தைரியமாகத் தனக்கு இந்த நோய் இருக்கிறது என்று முதலில் கூறியவர் கெüசல்யா. பல்வேறு விருதுகளை பெற்ற கெüசல்யா தன்னைப் பற்றியும், தான் ஆரம்பித்த அமைப்பு பற்றியும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்:
""நான் நாமக்கல்லில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு போடி நாயக்கன்பட்டியில் உள்ள எனது பாட்டி வீட்டில் வசித்து வந்தேன். நான் வேண்டாம் என்று கூறியும் எனது அத்தைப் பையனை எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள். அவர் ஒரு லாரி டிரைவர். இது நடந்தது 1995- இல். நாங்கள் இருவரும் 15 நாள்கள் ஒன்றாக வாழ்ந்தோம். பாக்கி 15 நாள்கள் எனக்கு இடைவிடாத ஜுரம் தாக்கியது. என்ன செய்வது என்று புரியாமல் நான் என் பாட்டிவீட்டிற்கு வந்து விட்டேன். ஏன் இந்த ஜுரம் என்று பார்க்க ரத்தப் பரிசோதனை செய்தார்கள். புதிதாக கல்யாணமானவள் என்பதால் எல்லாவிதமானப் பரிசோதனையும் செய்து பார்த்தார்கள். அப்பொழுதுதான் தெரிந்தது எனக்கு உயிர் கொல்லி நோயான ஏஐய தாக்கம் உள்ளது என்று. எங்கிருந்து இந்த நோய் வந்துள்ளது என்று பார்க்கும் போதுதான் தெரிந்தது என் கணவர் மூலம் வந்தது என்றும், அவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இந்த நோய் இருந்திருக்கிறது என்றும் அறிந்தோம். தெரிந்தே இவர்கள் என் வாழ்க்கையை அழித்துவிட்டார்கள். இந்த நோயின் தாக்கம் என்னைப் பெரிய அளவில் பயமுறுத்த, நான் அதை எதிர்த்து மாத்திரை மருந்து சாப்பிட, வாழ்க்கையே ஒரு மிகப்பெரிய போராட்ட
மாகிவிட்டது.
என் நிலையை நான் உணர்வதற்கே சில மாதங்கள் தேவைப்பட்டது. வாழ்வா? சாவா? என்று வரும் பொழுது, நான் வாழ்வை தேர்ந்தெடுத்தேன். நான் எந்த தவறும் செய்யவில்லை, பின் எனக்கு ஏன் இந்த தண்டனை? நான் ஏன் சாகவேண்டும்? என் மனம் என்னைக் கேள்வி மேல் கேள்விக் கேட்டது. இதன் நடுவில் சில மாதங்களில் என் கணவரும் இறந்துவிட்டார். அதன்பிறகு சிறுசிறு வேலை செய்து என் வயிற்றைக் கழுவி வந்தேன். இந்த நிலையில்தான் வேறு ஒரு பெண்ணுக்கும் இதே நோய் தாக்கி இருப்பதை அறிந்தேன். நான் ஏதாவது செய்யவேண்டும் என்று என் மனம் சொல்லியது. தனி ஒரு பெண்ணாக எது செய்தாலும் அது சரிபட்டு வராது என்று தோன்றியது. ஒரு அமைப்பை ஆரம்பித்தால் என்ன? என்ற எண்ணம் தோன்றியது.
முன்பே நான் வேறு ஒரு சங்கத்தில் வேலை செய்த அனுபவம் கைக் கொடுக்க டர்ள்ண்ற்ண்ஸ்ங் ரர்ம்ங்ய் சங்ற்ஜ்ர்ழ்ந் அமைப்பை, நானும் சில
பெண்களும் இணைந்து துவக்கினோம். கொஞ்சம் கொஞ்சமாக அமைப்பு பெரிதாகிக் கொண்டே சென்றது. எவ்வளவு பெரிதாக இருந்தாலும் உதவி என்று வந்துவிட்டால் அது சரிசமமாகப் பங்கு வைக்கப்படும். பொருளும் மனமும் உள்ள பலரும் எங்களுக்கு உதவ, என்னைப் போன்ற பலரும் உழைக்கத் தயாரானோம். இந்த மாதம் எங்கள் அமைப்பு உறுப்பினர்கள் என்றில்லாமல், தண்ணீர் சூழ்ந்தச் சென்னையில் முடிந்த வரையில் உதவிக் கரம் கொடுத்தோம்.
எங்கள் அமைப்பிற்கு பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன. அதில் வெளிநாட்டு விருதுகளும் அடங்கும். குறிப்பாக "மதுராவின் மாமனிதர்' விருது பெற்றேன். இது மறக்க முடியாதது. காரணம், இந்த விருதுடன் ஒருலட்சம் ரூபாயும் கிடைத்தது. எங்கள் அமைப்பிற்கு இந்தப் பணம் மிகவும் சரியான நேரத்தில் உதவியாக இருந்தது. பாராளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் தலைவியுமான சோனியா காந்தி அம்மையார் என் பெயரைச் சொல்லி பேசியது எனக்குப் பெருமையான விஷயம்.
இன்று மிக முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? இந்த நோய் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு தேவை. அஐஈள் உள்ள இருவர் மணந்து கொள்ளலாம். ஆனால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு இந்த நோய் வராமல் இருக்க, இப்பொழுது மருந்துகளும் வந்துள்ளளன. அதை அவர்கள் சரியான சமயத்தில் எடுத்துக் கொண்டு குழந்தையைக் காக்கலாம்.
கெüசல்யா, மந, ம.ஓ., போன்ற நாடுகளுக்கு மட்டுமல்ல பார்சலோனா போன்ற நகரங்களுக்கும் சென்று அங்குப் பரிசையும், பாராட்டையும் பெற்றதோடு நில்லாமல் இந்த நோயை எப்படி கட்டுப் படுத்தலாம் என்றும் கற்றுக் கொண்டு வந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...