ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஐன்ஸ்டினை மிஞ்சிய இந்திய வம்சாவளிச் சிறுமி

மொழித் திறன், பொது அறிவு, நினைவுத் திறன், கணிதத் திறன், சிக்கலுக்குத் தீர்வு காணும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அறிவுத் திறனை சோதிக்கும் 150 கேள்விகள் கொண்ட தேர்வை மென்ஸô அமைப்பு நடத்தி வருகிறது.

News image
Updated On :15 செப்டம்பர் 2015, 7:14 am

டி.எஸ்.​ஆர். வெங்​கட்​ர​ம​ணா​​

மொழித் திறன், பொது அறிவு, நினைவுத் திறன், கணிதத் திறன், சிக்கலுக்குத் தீர்வு காணும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அறிவுத் திறனை சோதிக்கும் 150 கேள்விகள் கொண்ட தேர்வை மென்ஸா அமைப்பு நடத்தி வருகிறது.

இந்தத் தேர்வில் லிடியா செபாஸ்டின் என்கிற 12 வயது சிறுமி 162 மதிப்பெண்களைப் பெற்றார். இவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட இந்திய வம்சாவளிச் சிறுமி ஆவார். மென்ஸô அறிவுத் திறன் சோதனையில் இதுவே அதிகபட்ச மதிப்பெண் ஆகும்.

லிடியா பிறந்த 6 மாதங்களிலேயே பேசத் தொடங்கிவிட்டார் என்று மருத்துவர்களான இவரது பெற்றோர் கூறினர். புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வமுள்ள லிடியா, வயலின் வாசிப்பதிலும் வல்லவர். இந்தத் தேர்வை எழுதுவதற்காக, கடந்த ஓராண்டாகப் பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் படித்து வந்தார். உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைனைவிட அதிக அறிவுத் திறன் குறியீட்டு எண்ணை இச்சிறுமி பெற்றுள்ளார்.

ஆனால் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், எந்த அறிவுத் திறன் தேர்வும் எழுதியதில்லை. மென்ஸா சோதனை அடிப்படையில், அவரது அறிவுத் திறன் குறியீட்டெண் 160.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.