தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சாட் ஸ்பெஷல் உணவு வகைகள்

வெங்காயம், தக்காளி, கொத்துமல்லித் தழையைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு ஸ்வீட் கார்னை

Updated On :8 ஜூன் 2020, 7:34 am

பானிப் பூரி

Story image

தேவையானவை:

ரெடிமேட் மினி பூரி - தேவைக்கேற்ப

புதினா - ஒரு கைப்பிடி

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி

கொத்துமல்லி - ஒரு கைப்பிடி

பச்சை மிளகாய் - ஒன்று

சீரகம் - ஒரு தேக்கரண்டி

மிளகு - 5

பூண்டு - ஒரு பல்

உருளை - 2

வெங்காயம் - ஒன்று

மிளகாய்த் தூள் - கால் தேக்கரண்டி

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

உப்பு - தேவைக்கேற்ப

செய் முறை: முதலில், புதினா, கறிவேப்பிலை, கொத்துமல்லி, பச்சை மிளகாய், சீரகம், மிளகு, பூண்டு, உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த விழுதுடன் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும். பிறகு உருளைகிழங்கு மற்றும் பச்சை பட்டாணி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர்  உருளை, பட்டாணி மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு பிசையவும்.

விரும்பினால் கொத்துமல்லியும் சேர்க்கலாம். அதனுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.

 அதன்பின்னர் மினி பூரிகளை எடுத்து மேல் பகுதியில் சிறு ஓட்டை போட்டு அதனுள் சிறிது உருளை மசாலாவை வைக்கவும். 

தயார் செய்து வைத்துள்ள புதினா கலந்த தண்ணீரை ஊற்றி பரிமாறவும். சுவையான பானி பூரி தயார்.

***

மசாலா ஸ்வீட் கார்ன்

Story image

தேவையானவை:

ஸ்வீட் கார்ன் - ஒரு கிண்ணம்

வெங்காயம் - ஒன்று

தக்காளி - பாதி

கொத்துமல்லித் தழை - சிறிது

வெண்ணெய் - கால் தேக்கரண்டி

சாட் மசாலா - கால் தேக்கரண்டி

ஓமப் பொடி - சிறிது

செய்முறை: வெங்காயம், தக்காளி, கொத்துமல்லித் தழையைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு ஸ்வீட் கார்னை அரை வேக்காட்டில் வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும். பிறகு வாணலியில் வெண்ணெய் விட்டு அத்துடன்  உதிர்த்து வைத்துள்ள ஸ்வீட் கார்ன் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். அதனுடன் சாட் மசாலாவைச் சேர்த்து கிளறி இறக்கி, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி கலவையை சேர்த்து, ஓமப் பொடி, கொத்து

மல்லித் தூவிப் பரிமாறவும்.

******

மசாலாப் பொரி

தேவையானவை:

பொரி - ஒரு கிண்ணம்.

வேர்க்கடலை - ஒரு கிண்ணம்

காரபூந்தி (அ) மிக்சர் - ஒரு கிண்ணம்

பெரிய வெங்காயம் - ஒன்று

பெங்களூர் தக்காளி - ஒன்று

கேரட் - ஒன்று

வெள்ளரிக்காய் - ஒன்று

கொத்துமல்லித் தழை - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

மிளகாய்த் தூள் - தேவையான அளவு

சிறிய எலுமிச்சை பழம் - ஒன்று

 செய்முறை: பொரி மற்றும் காரபூந்தியை ஒரு கிண்ணம் எடுத்துக் கொள்ளவும். வேர்க்கடலையை வேக வைத்து தோலுரித்து தயாராக வைக்கவும். பிறகு வெங்காயம், தக்காளி, கேரட், வெள்ளரிக்காய், கொத்துமல்லி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து எலுமிச்சை பழத்தைப் பிழிந்து நன்கு கிளறி விடவும். பொரிக் கலவையை ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு பரிமாறவும். மசாலாப் பொரி ரெடி. இதில் மாங்காய்த் துருவலை சேர்த்தும் செய்யலாம் கூடுதல் ருசியாக இருக்கும்.

****

கேப்ஸிகம் - காளான் டிக்கா

Story image

தேவையானவை:

குடை மிளகாய் சதுரமாக வெட்டியது - 6 துண்டுகள்

பெரிய வெங்காயம் வட்டமாக நறுக்கியது - 4 துண்டுகள்

மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி

எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப

காளான் - 3,

நீளமான டிக்கா ஸ்டிக் - 1, (பச்சை மிளகாய் - 2, பூண்டு - 6) விழுதாக அரைக்கவும்.

வறுத்துப் பொடிக்க...

சோம்பு - 1 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

தனியா - 1 தேக்கரண்டி

செய்முறை:  வெங்காயத் துண்டுகளில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து பிரட்டி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பூண்டு, மிளகாய் விழுதை சேர்த்து வதக்கவும்,அத்துடன் உப்பு, சிறிது மிளகுத்தூள் சேர்த்து வதக்கி, அதில் வறுத்த பொடி சேர்த்து கிளறி, அதில் குடை மிளகாய், காளான் சேர்த்து கால் மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு சூடான எண்ணெயில் வறுத்து எடுத்து ஸ்டிக்கில் குடை மிளகாய் துண்டு, வெங்காயத் துண்டு, காளான் என மாறி மாறி செருகி பரிமாறவும்.

****

பாசிப்பயறு தயிர் பூரி

Story image

தேவையானவை:

பானி பூரி - 6 (ரெடிமேடாக கிடைக்கிறது)

பச்சைப்பயறு - 1/2 கிண்ணம் (ஊறவைத்தது)

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

இனிப்பு சட்னிக்கு தேவையானவை

தயிர் - 1/2 கிண்ணம்

சர்க்கரை - 1 தேக்கரண்டி

சீரகத்தூள்- 1 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி

பொடியாக நறுக்கிய மல்லித்தழை சிறிது

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

ஓமப் பொடி, காராபூந்தி - தேவைக்கேற்ப  

இனிப்பு சட்னி செய்முறை...

புளி பேஸ்ட் - 1 தேக்கரண்டி

பேரீட்சை - 4 (கொட்டை நீக்கியது)

காய்ந்த திராட்சை - 1 தேக்கரண்டி

உப்பு - சிறிது

துருவிய வெல்லம் - 1/4 கிண்ணம்

மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி

செய்முறை:  நீரில் ஊறிய பேரீட்சை, திராட்சை, உப்பு, வெல்லம், மிளகுத்தூள் சேர்த்து புளி பேஸ்ட்டுடன் மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். சட்னி கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து இறக்கி விட்டால் இனிப்பு சட்னி ரெடியாகி விடும். பிறகு பச்சைப்பயறை அரை உப்பு சேர்த்து வேகவைத்து மசித்துக் கொள்ளவும். (பச்சைப் பயறுக்கு பதில் பட்டாணி அல்லது விருப்பமான பயறு உபயோகப்படுத்தலாம்).

 பின்னர் பூரியின் மேல் ஓட்டை போட்டு அதனுள் வேகவைத்து மசித்தப் பாசிப் பயறை போடவும். அடுத்து இனிப்பு சட்னி தூவவும். கடைசியாக கடைந்த தயிர் சேர்த்து, ஓமப்பொடி, காராபூந்தித் தூவி பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.