பளு தூக்கும் போட்டியில் பல்வேறு பதக்கங்களைப் பெற்று, சாதனை படைத்து வளரும் விளையாட்டு வீராங்கனையாக சுதா விளங்கி வருகிறார்.

வீரம் விளைந்த வேலூர் மாவட்டத்தில், பளு-வலு தூக்கும் வீரர்கள் நிறைந்த குடியாத்தத்தைச் சேர்ந்தவர் இவர். இங்குள்ள சுந்தரகுட்டை கிராமத்தில் பிறந்தவர். 20 வயது நிரம்பியவர். சிறு வயது முதலே விளையாட்டில் ஆர்வம் மிக்கவராக இருந்தார்.
"த்ரோபால்' என பெண்கள் விளையாடும் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்தவருக்கு, நெல்லூர்பேட்டை அரசினர் மேல்
நிலைப் பள்ளியில் 2009-ஆம் ஆண்டு பிளஸ் 2 படிக்கும்போது, பளு தூக்கும் விளையாட்டில் ஆர்வம் அதிகரித்தது. பயிற்சியாளர் கண்ணபிரானின் வழிகாட்டுதலின்பேரில், பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினார்.
இதன்பிறகு இவரது சாதனைகள் தொடங்கின. உள்ளூர் போட்டி முதல் தேசிய அளவிலான போட்டிகள் வரை எண்ணற்ற போட்டிகளில் பங்கேற்றார். இதுவரை 7 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார். ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதை லட்சியமாகக் கொண்டு பயிற்சி பெற்றுவருகிறார் சுதா.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
""பளு-வலு தூக்கும் போட்டிகளை நடத்தவும், பயிற்சிகளைப் பெறவும் வீரர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ஆதரவு தர வேண்டும். அரசு வேலைவாய்ப்புகளில் பளு தூக்கும் வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டையும் அளிக்க வேண்டும். மாநில போட்டிகளில் வென்றவர்களுக்கு உடல்தகுதித் தேர்வை மட்டும் நடத்தி, காவல் துறையில் அளிக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் மீண்டும் வழங்க வேண்டும்'' என்றார்.
இளகிய மனம் படைத்த இளம்பெண்ணும் பளு தூக்கும் போட்டியில் சிறந்துவிளங்குவது ஆச்சரியமளிக்கிறது..!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் மிருணாள் தாக்குர்!
வென்று வா தலைவா... தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் சிபி சத்யராஜ் கடிதம்!

ஜெயிலர் - 2 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டி கொண்டாட்டம்!

தமிழ்நாட்டில் ஒன்றுமில்லாத பாஜகவுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்! கேஜரிவால்
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

