புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வெயில் காலத்துல இந்தப் பிரச்னை வரலாம்! பத்திரமா இருங்க!

கோடையில் உடலில் நீர் வற்றி, உறுப்புகளுக்கு தேவையான நீர் ஆதாரங்கள் பாதிக்கப் படுவதால், அடிக்கடி நாவறட்சி, தாகம், சிறுநீர் போகும்போது எரிச்சல் போன்றவை ஏற்படும்.

News image
Updated On :4 ஏப்ரல் 2018, 5:58 am

எஸ். வளர்மதி

கோடையில் உடலில் நீர் வற்றி, உறுப்புகளுக்கு தேவையான நீர் ஆதாரங்கள் பாதிக்கப் படுவதால், அடிக்கடி நாவறட்சி, தாகம், சிறுநீர் போகும்போது எரிச்சல் போன்றவை ஏற்படும். சிறுநீர் தொடர்பான பாதிப்புகளுக்கு இங்கே சில மருத்துவ முறைகள்:
 

நீர் எரிச்சல் தீர: காக்கிரட்டான் வேரை அரைத்துப் பாலில் காய்ச்சி அருந்தலாம். கல்யாண முருங்கை இலைச் சாற்றை மோரில் கலந்து இருவேளைகள் அருந்த, பயன் கிடைக்கும். வல்லாரைக்கீரை, கிழாநெல்லி இவற்றை அரைத்து, காலை வேளையில் தயிரில் கலந்து அருந்தலாம்.
 

சிறுநீர்த்தடை விலக: சங்கு புஷ்ப இலை, வேர், பட்டை இவற்றை சாறு பிழிந்து 20 மிலி வெள்ளாட்டுப் பாலுடன் அருந்தலாம். நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு நீங்க:  நன்னாரிவேர் 5 கிராம் அரைத்து, பசுபாலில் கலந்து அருந்தலாம். உடல் சூட்டை நன்றாகத் தணிக்கும் தன்மையுள்ளது. பனங்கற்கண்டை பொடித்து பாலில் கலந்து அருந்தலாம். புளியங்கொட்டைத் தோலை நன்கு காயவைத்து, பொடியாக்கி, அதைப் பசும்பாலில் கலந்து அருந்தலாம். அன்னாசிப் பழச் சாறும் நீர்கடுப்பிற்கு நல்லது.
 

சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் ரணம் நீங்க: சந்தனக்கட்டையை பால்விட்டு அரைத்து அதை அருந்தினால் நிவாரணம் கிடைக்கும். கடுமையான வெயிலில் குடை, தொப்பி இல்லாமல் வெயிலில் செல்வதை தவிர்க்கவேண்டும்.
 

- எஸ். வளர்மதி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.