வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களுக்கு கிடைக்கும் ஓய்வான பொழுதுகளை வீண்ணடிக்காமல், பயனுள்ளதாக மாற்றி கொண்டால் கணவரின் சுமையை முடிந்த வரை தானும் சுமந்து கொள்ள முடியும். இதனால் மனதிற்கும் நிறைவாக இருக்கும். கணவரிடத்தில் மதிப்பும் உண்டாகும். மேலும், இல்லத்தில் இருந்தபடியே சுயதொழில் மூலம் கணிசமான வருமானமும் கிடைக்க பெறலாம். அந்த வகையில், இந்த வாரத்திற்கான சுயதொழிலைப் பற்றி விளக்குகிறார் சுய தொழில் ஆலோசகர் உமாராஜ்:
ஊதுபத்தி
முன்பெல்லாம் ஊதுபத்தி தயாரிக்க கரித்தூள், மரத்தூள் என கலந்து பிசைந்து பூரி மனையில் இட்டு உருட்டி செய்வோம். இப்பொழுது ஊதுபத்தி குச்சி ரெடிமேடாகவே கிடைக்கிறது. அதை அப்படியே வாங்கி தேவையான வாசனை திரவியம் கலந்தால் ஊதுபத்தி ரெடி. உங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தால், ஊதுபத்தி செய்யும் ஆட்டோமெடிக் மிஷின் வந்துள்ளது. இதில் தேவையான கலவையை கொட்டி பின் குச்சியை தனித்தனியே அனுப்பினால் போதும், ஊதுபத்தி ரெடியாகிவிடும். பின்னர், வாசனை திரவியம் சேர்ப்பதற்கும் மிஷின் உள்ளது. இதில் ஒரே நேரத்தில் 10,000 ஊதுபத்திகள் தயார் செய்ய முடியும்.
சாம்பிராணி
இதே போன்று கம்ப்யூட்டர் சாம்பிராணி தயார் செய்ய மூலப் பொருள் கடைகளில் ரெடிமேடாக கிடைக்கிறது. இதற்கு தேவையான தண்ணீர், சென்ட் போட்டு பிசைந்து அச்சில் போட்டு எடுத்தால் கம்ப்யூட்டர் சாம்பிராணி ரெடி. காய வைத்துப் பின்னர், பாக்கெட் செய்து விற்பனை செய்யலாம். நல்ல லாபம் கிடைக்கும்.
மாடி தோட்டம்
வீட்டில் மொட்டை மாடி இருந்தால் அங்கு மாடித் தோட்டம் அமைத்து அதில் விதவிதமான காய்கறிகள், பழங்கள் பயிரிட்டு விற்பனை செய்யலாம். இதில் ரசாயணம் இல்லாத பயிர் செய்வதால் இதற்கு இரட்டிப்பு விலை கிடைக்கும். மேலும், மொட்டை மாடியில் கோதுமை புல் வளர்க்கலாம். கோதுமை புல் ஜூஸ்ஸிற்கு நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளதால். தற்போது, நீரிழிவு நோயாளிகளிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. எனவே, கோதுமை புல்லை வளர்த்து மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்து காலை நேரங்களில் பார்க் போன்ற இடங்களில் விற்பனை செய்தால் நல்ல வரவேற்பு இருக்கும். அல்லது கோதுமை புல்லை காயவைத்து பொடித்து தூளாக்கி தயார் செய்தும் விற்பனை செய்யலாம். பொதுவாக மாடித் தோட்டம் அமைக்க ரூ. 4,000 முதலீடு இருந்தால் போதும். இது நல்ல லாபகரமானதும், மனதுக்கும் ரம்மியமான தொழில் ஆகும்.
பேப்பர் தட்டு
உங்களால் ரூ. 20,000 முதல் ரூ. 40,000 வரை முதலீடு செய்ய முடியும் என்றால் பேப்பர் தட்டு தொழிலை வீட்டில் இருந்தபடியே செய்யலாம். இதற்கு கை மிஷின் மற்றும் ஆட்டோமெடிக் மிஷன் என இரண்டு வகை உள்ளது. இதற்கு அதிகப்படியான மின்சாரம் தேவையில்லை. வீட்டில் உள்ள மின்சாரமே போதுமானது. தேவையான பேப்பர் பிளேட் தயார் செய்து விடலாம். பிறகு இதனை கடைகளுக்கு, மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய நல்ல லாபம் கிடைக்கும்.
- ஸ்ரீ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தூசு, துரும்புடன் விற்பனை செய்த அரசு மதுபானம்

சென்னை கோட்ட ரயில் நிலையங்களில் 81 தானியங்கி குடிநீா் இயந்திரங்கள்
சட்டவிரோத துப்பாக்கி விற்பனை கும்பலைச் சோ்ந்தவா் கைது

பசு வதை தடை குறித்து பரிசீலிக்கவில்லை: மத்திய சட்ட அமைச்சா்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



