யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

ஹார்ரியின் காதல், காமிக்ஸ் புத்தகமாக..! 

வரவிருக்கும் மே 19- ஆம் தேதியை இங்கிலாந்து மக்களால் மறக்க முடியாது. காரணம், இங்கிலாந்து அரச குடும்பத்தின் இரண்டாவது இளவரசரான ஹார்ரி, அமெரிக்க நடிகையான மேகன் மார்கிள்ளை

News image
Updated On :18 ஏப்ரல் 2018, 10:17 am IST

வரவிருக்கும் மே 19- ஆம் தேதியை இங்கிலாந்து மக்களால் மறக்க முடியாது. காரணம், இங்கிலாந்து அரச குடும்பத்தின் இரண்டாவது இளவரசரான ஹார்ரி, அமெரிக்க நடிகையான மேகன் மார்கிள்ளை அன்றுதான் அதிகாரபூர்வமாக திருமணம் செய்து கொள்ளப் போகிறார்.
 திருமணத்தை ஒட்டி தட புடலாக ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடந்து வந்தாலும், ஹாரி-மேகன் காதல் குறித்து ஒரு காமிக்ஸ் புத்தகம் ஒன்று "தி ராயல்ஸ்: பிரின்ஸ் ஹார்ரி & மேகன் மார்க்ள்' என்ற தலைப்பில் மூன்று ரக அச்சுப் பதிப்பில் வெளியாகியுள்ளது. இதை அமெரிக்க நிறுவனம் வெளியிட்டுள்ளது.
 ஹார்ரி, மேகன் வாழ்க்கையில் முக்கிய தருணங்கள், இருவருக்கும் இடையில் எப்படி காதல் மலர்ந்தது குறித்தும் இந்த காமிக்ஸ் புத்தகத்தில் படங்களுடன் விவரிக்கப்பட்டுள்ளன. ஹார்ரியின் அம்மாவான டயானாவின் இறப்பு குறித்தும் இந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்தப் புத்தகம் அமேசான் மூலம் விற்பனையாகிறது.
 - பனுஜா
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.