சினிமாவை பற்றி எனக்கு புணேவில் உள்ள திரைப்பட கல்லூரியில் பயிற்சி. தேசிய திரைப்ட விழாக்களில் பங்கு என்று பல வருடம் புதுடில்லியில் இருந்து விட்டு இங்கு வந்துள்ளேன். அப்பொழுது நான் அதிகம் பார்த்தது பல்வேறு பெரிய நடிகர்களின் படங்களைத்தான். காரணம் அவர்களது படங்கள்தான் அங்கு வெளியாகும். இல்லையென்றால் ஆங்கிலப் படங்களைதான் பார்போம். தினமும் படங்கள் என்பது இங்கு வந்தபிறகுதான் ஆரம்பமானது. இதுவே எனக்கு பேருதவியாக இருந்தது. இதனாலேயே எனக்கு எந்த ஒரு திரைப்பட தயாரிப்பாளரையோ, நடிகர் நடித்த படங்களையோ நான் பாகுபடுத்தி பார்ப்பது கிடையது. எல்லாரும் எனக்கு ஒன்றுதான். அரசாங்கம் செய்ய சொன்ன வேலையை நான் இங்கு செய்ய வந்திருக்கிறேன். அவ்வளவுதான். அதனால், எனக்கு பிடித்த இயக்குநர் அல்லது நடிகர் என்று சிறிய அளவில் கூட விருப்பு, வெறுப்பு இல்லாமல் பணியாற்ற முடிகிறது.