பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சரும பிரச்னைகளை போக்க...

பெண்களில் சிலருக்கு முகத்தில் முடி வளர்வது ஒரு பெரிய பிரச்னையாக இருக்கும்.  கடைகளில் நிறைய லோஷன்களும், க்ரீம்களும் கிடைக்கின்றன.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2018, 8:43 pm IST

பெண்களில் சிலருக்கு முகத்தில் முடி வளர்வது ஒரு பெரிய பிரச்னையாக இருக்கும்.  கடைகளில் நிறைய லோஷன்களும், க்ரீம்களும் கிடைக்கின்றன. அவைகளை வாங்கி உபயோகப்படுத்தினாலும் ஒரேயடியாகத் தீர்வு கிடைப்பதில்லை. இதற்கு, நல்ல வைத்தியம் கஸ்தூரி மஞ்சள்.  

கஸ்தூரி மஞ்சள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.  இதனை வாங்கி அத்துடன் கொஞ்சம் பச்சைப் பயறு சேர்த்து வெயிலில் உலர்த்தி மிக்ஸியில் அல்லது மெஷினில் கொடுத்து நைசாக அரைத்து வைத்துக்கொண்டு தினமும் குளிக்கும்போகும் முன் 1 தேக்கரண்டி எடுத்து தண்ணீரில்  குழைத்து முகத்தில் தடவி சிறுது நேரம் வைத்திருந்து பின்னர். நன்கு தேய்த்துக் குளிக்க வேண்டும். கஸ்தூரி மஞ்சளும்  உடனடியாக  முகத்தில் உள்ள முடிகளை  நீக்கி விடாது.

நாளடைவில் தான் போக்கும்; ஆனால், புதிதாக முடிகளை வளரவிடாது. அதனால், தினந்தோறும் விடாமல் கஸ்தூரி மஞ்சள் தூளை முகத்தில் பூசிக் குளித்து வந்தால், விரைவில் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் உதிர்ந்துவிடும். மேலும், நல்ல வழுவழுப்பான முக அழகையும் பெறலாம்.

சரும பிரச்னைகளுக்கு  கஸ்தூரி மஞ்சள் தூளை வெந்நீரில் குழைத்து மேல் பூச்சாகப் பூசி வர வேண்டும்  அல்லது  குளிக்க போகும் முன் கஸ்தூரி மஞ்சள், துளசி ஆகியவற்றைச் சம அளவாகச் சேர்த்து  அரைத்து  உடலில் தேய்த்து, சிறிது நேரம் வைத்திருந்து, வெந்நீரில் குளிக்க வேண்டும்.

குளிப்பதற்கு முன்  கஸ்தூரி மஞ்சள் தூளை பூசுவதற்கு நேரம் கிடைக்கவில்லை என்றால் தினமும் நேரம் கிடைக்கும் போது முகத்தில்  தடவி  வைத்திருந்து  நன்கு காய்ந்ததும் முகத்தை கழுவ வேண்டும்.  இவ்வாறு  செய்து வர  சரும பிரச்னைகள் விரைவில் குணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.