ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

முதல் பெண் இமாம்!

இஸ்லாமிய மதத்தில் இமாம் என்பது மிகவும் உயரிய பொறுப்பாகும். இதுவரை ஆண்களே இமாமாக நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் முதன்முறையாக கேரளத்தில் பெண் இமாம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :6 பிப்ரவரி 2018, 6:30 pm

விசா​லாட்சி

இஸ்லாமிய மதத்தில் இமாம் என்பது மிகவும் உயரிய பொறுப்பாகும். இதுவரை ஆண்களே இமாமாக நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் முதன்முறையாக கேரளத்தில் பெண் இமாம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜமீதா டீச்சர் என்ற ஜமீதா, இமாமாகத் தேர்வாகி உள்ளார். இவர் அண்மையில் மலப்புரத்தில் நடந்த தொழுகையில் இமாமாகக் கலந்து கொண்டு தொழுகையை நடத்தியுள்ளார். 
இவர் தற்போது மலப்புரத்தில்தான் வசித்து வருகிறார். அங்கு தினமும் 100 பேருக்கு குரான் கற்றுக்கொடுத்து வருவதால் ஜமீதா டீச்சர் என்று அழைக்கப்பட்டார்.
""நான் இமாமாக நினைத்தபோது என்னைக் குறித்துப் பலரும் தவறாக பேசினர். "நீ தவறான முடிவு எடுக்கிறாய்' என்றார்கள். ஆனால் எனக்குத் தெரியும் கடவுளுக்கு ஆண், பெண் பாகுபாகு கிடையாது. அதனால் நான் செய்வதில் தவறு இல்லை'' என்கிறார் இமாம் ஜமீதா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.