ராகி அல்வா
தேவையானவை:
ராகி மாவு - 100 கி
சர்க்கரை - 100 கி
நெய் - 50 கி
முந்திரி - 6
திராட்சை - 6
ஏலக்காய் - 4
செய்முறை: ராகி மாவை நன்றாக வறுத்துக் கொள்ளவும். பின்னர், வறுத்த மாவில் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைக்கவும். இந்த கரைசலை வாணலியில் இட்டு சிம்மில் வேக வைக்கவும். இதில் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.
நெய் ஊற்றி அடி பிடிக்காமல் நன்கு கிளற வேண்டும். பாத்திரத்தில் ஒட்டாமல் நெய் வெளியே வரும்போது வறுத்த முந்திரி பருப்பு, திராட்சை, ஏலக்காய்த் தூள் சேர்த்து இறக்கி பரிமாறவும்.
- சுந்தரி காந்தி
வரகு வெல்ல பணியாரம்
தேவையானவை :
வரகரிசி - கால் கிலோ
உளுந்தம் பருப்பு - 100 கிராம்
தேங்காய்த் துருவல் - 1 கிண்ணம்
வாழைப்பழம் (பூவன்பழம்) - 1
வெல்லம் - 100 கிராம்
ஏலக்காய் - 3
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை : வரகையும், உளுந்தம் பருப்பையும் 2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கிரைண்டரில் தோசை மாவுப் பதத்திற்கு அரைத்தெடுக்கவும். பணியார கல்லில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஒரு குழிக்கரண்டியில் மாவை எடுத்து ஊற்றவும். ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போடவும். வெந்ததும் எடுத்து பரிமாறலாம். சுவையான வரகு வெல்ல பணியாரம் தயார்.
- ஏ.எஸ்.கோவிந்தராஜன்
வாழைக்காய் புட்டு
தேவையானவை:
வாழைக்காய் - 1
தேங்காய்த் துருவல் - 2 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
கடுகு - அரை தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - கால் தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
மிளகாய் வற்றல் - 2
கறிவேப்பில்லை - சிறிது
எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
செய்முறை : அடி கனமான பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி அதில் வாழைக்காயைப் போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும். வாழைக்காய் வெந்ததும் காயை வெளியில் எடுத்து தோலை நீக்கிக் கொள்ளவும். அதன்பின் வாழைக்காயை துருவிக் கொள்ளவும். துருவிய வாழைக்காயில் உப்பு, தேங்காய்த் துருவல் போட்டு கலந்து வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, மிளகாயை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும். பின்னர் வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி பின்னர், துருவி வைத்திருக்கும் வாழைக்காய் கலவையை உப்பு சேர்த்து கிளறி இறக்கிவிடவும். வாழைக்காய்ப் புட்டு ரெடி.
சேப்பங்கிழங்கு புளிக்கூட்டு
தேவையானவை:
சேப்பங்கிழங்கு - 5
சாம்பார் பொடி - அரை மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
புளி - நெல்லிக்காய் அளவு
அரைக்க:
தேங்காய்த் துருவல் - 4 மேஜைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 4
தாளிக்க:
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 3
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை: புளியை ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். தாளிக்க கொடுத்துள்ள வெங்காயத்தை சிறியதாக நறுக்கி கொள்ளவும். அரைக்க கொடுத்தவற்றை அரைத்து கொள்ளவும். குக்கரில் தேவையான தண்ணீர் சேர்த்து சேப்பங்கிழங்கைப் போட்டு அடுப்பில் வைக்கவும். நீராவி வந்ததும் வெயிட் போட்டு ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும். 5 நிமிடங்கள் கழித்து மூடியைத் திறந்து கிழங்கை எடுத்து சிறிது நேரம் ஆற விடவும். நன்கு ஆறிய பின் தோல் உரித்து வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு தாளிக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் அடுப்பை சிம்மில் வைத்து சாம்பார் பொடியைப் போட்டு ஒரு நிமிடம் கிளறவும்.
பின் புளித்தண்ணீர், சேப்பங்கிழங்கு, உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும். மசாலா வாடை போனதும் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து கூட்டு கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். இது சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
- தொண்டி முத்தூஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லென்ஸ்கார்ட் 4வது காலாண்டு லாபம் 7.5% சரிவு!

நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!

இன்றைய செய்திகள்! - நேரலை
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


