நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

டீ விற்றவரின் மகள் விமானப்படை அதிகாரி

ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தங்களது கடின உழைப்பால் உச்சம் தொடுகிறார்கள்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2020, 12:30 am

ஜெ


ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தங்களது கடின உழைப்பால் உச்சம் தொடுகிறார்கள். அவர்களில் ஒருவர் தான் அன்சல். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த டீ விற்பனை செய்தவரின் மகளான 23 வயதான அன்சல் விமானப்படை அதிகாரியாகி தனது பயிற்சியை நிறைவு செய்துள்ளார். அன்சல் தந்தை சுரேஷ் கங்க்வாலிடம் பேசிய போது சொன்னார்:

""சிறு வயது முதலே அன்சல் இந்திய விமானப்படையில் சேர விரும்பினார் எங்களுக்கும், எங்கள் குடும்பத்துக்கும் அவளின் கனவை நினைவாக்குவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. ஆனால் அன்சல் தன் முடிவில் திடமாக இருந்தார். அன்சல் படிப்பிலும், பாஸ்கெட்பால் விளையாட்டிலும் சிறந்து விளங்கினார். கேதார்நாத்தில் நடந்த வெள்ளப்பாதிப்பின் போது இந்திய விமானப்படையின் சிறப்பான மீட்புப் பணிகளைப் பார்த்த அன்சல் அப்போதே விமானப்படையில் சேர முடி வெடுத்தார் அன்சல். இந்திய விமானப்படையில் தன்னை இணைத்துக் கொள்ளப் புத்தகக்கடைகளில் அதற்கான புத்தகங்களை வாங்கிப் படிக்க ஆரம்பித்தார். தீவிரமாகத் தேர்வுக்குத் தயாரானார். தொடர்ந்து முயற்சித்து, 6-ஆவது முறை வெற்றியை ஈட்டினார் அன்சல். 

எனது மகளின் படிப்புக்குக் கட்டணம் செலுத்த முடியாமல் பலமுறை பணமின்றித் தவித்துள்ளேன். இப்போது என் மகள் விமானப்படையில் இணைந்துள்ளது பெருமைமிக்கத் தருணமாகும்'' என்றார். 

இது பற்றி அன்சல் கூறும் போது:

""நான் கம்ப்யூட்டர் சயின்ஸில் பட்டம் பெற்று மத்திய பிரதேச தொழிலாளர் நலத்துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி கொண்டு தான் தேர்வு எழுதி விமானப்படைக்குத் தேர்வானேன். நான் பாதுகாப்பு துறையில் பணியில் சேரப் போகிறேன் என்றதும் என் பெற்றோருக்குக் கவலையாக இருந்தது. இது எல்லா பெற்றோருக்கும் ஏற்படுவது இயல்பு தான். ஆனால் என்னுடைய லட்சியத்திற்கு உதவ மறுக்கவில்லை. நாட்டிற்காகச் சேவை செய்யக் கிடைத்த வாய்ப்பை நான் பெருமையாகக் கருதுகிறேன்.  பொதுமுடக்கம் காரணமாக என்னுடைய பதவியேற்பு விழாவிற்கு அப்பா-அம்மாவால் வர முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது'' என்றார்.  

தற்போது அன்சலுடைய இந்த வெற்றியைப் பார்த்து, மத்திய பிரதேசத்தின் முதலமைச்சர், ஷிவ்ராஜ் சிங் சௌஹான் பாராட்டியுள்ளார். "சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த அன்சல் இன்று இந்திய விமானப்படையின் விமானத்தில் உயரப் பறக்கவிருக்கிறார். நாட்டின் பெருமையையும் உயரப்பறக்க வைப்பார். அவருக்கு என் வாழ்த்துக்கள்' என்று ட்வீட் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.