கிச்சன் டிப்ஸ்..

பால் குக்கரின் அடியில் ஒட்டிக் கொண்டு என்னதான் தேய்த்தாலும் போகாமல் அடம் பிடிக்கும். பாலை காய்ச்சுவதற்கு முன்பாக பாத்திரத்தை குளிர்ந்த நீரில் கழுவிவிட்டால் இந்த பிரச்னையே வராது.
கிச்சன் டிப்ஸ்..

பால் குக்கரின் அடியில் ஒட்டிக் கொண்டு என்னதான் தேய்த்தாலும் போகாமல் அடம் பிடிக்கும். பாலை காய்ச்சுவதற்கு முன்பாக பாத்திரத்தை குளிர்ந்த நீரில் கழுவிவிட்டால் இந்த பிரச்னையே வராது.

கேஸ்  சீக்கிரம் காலியாகி விடுகிறதா? குற்றம் சிலிண்டரில் அல்ல. கீரையை தவிர எதை சமைத்தாலும் பாத்திரத்தை மூடியே வைத்திருங்கள். எரிபொருள் நீங்கள் ஆச்சரியப்படும் வகையில் கணிசமாக மிச்சமாகும்.

சர்க்கரை டின்னில் எறும்புத் தொல்லை என்பது காலம் காலமாக தொடரும் தொந்தரவு. சர்க்கரை டின்னில் நான்கைந்து கிராம்புகளைப் போட்டு வைத்தால் எறும்பு வரவே வராது. டின்னை திறந்ததுமே கும்மென்ற வாசனை உங்களுக்கு போனஸ்.

முட்டைக்கோசை சமைக்கும் போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.

சமையலுக்கு பயன்படுத்தும் கத்தி அடிக்கடி கூர் மழுங்கி மொக்கை ஆகிவிடுகிறதா? கவலை வேண்டாம். பயன்படுத்திய பிறகு துடைத்துவிட்டு தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் அதன் கூர்மை மழுங்காது.

இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2-க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com