கை வைத்​தி​யம்​!​

வயிற்​றுப்​போக்​கைக் கட்டுப்​ப​டுத்த ஜவ்​வ​ரி​சி​யைச் சாதம்​போல் வேக​வைத்து மோரில் கரைத்து உப்​புப்​போட்​டுச் சாப்​பிட வயிற்​றுப்​போக்கு நிற்​கும். வயிற்று வலி​யும் இருக்​காது.
கை வைத்​தி​யம்​!​


வயிற்​றுப்​போக்​கைக் கட்டுப்​ப​டுத்த ஜவ்​வ​ரி​சி​யைச் சாதம்​போல் வேக​வைத்து மோரில் கரைத்து உப்​புப்​போட்​டுச் சாப்​பிட வயிற்​றுப்​போக்கு நிற்​கும். வயிற்று வலி​யும் இருக்​காது.

 குழந்​தை​க​ளுக்கு நோய் வரா​மல் இருக்க தின​மும் ஒரு செப்​புப் பாத்​தி​ரத்​தில் தண்​ணீர் ஊற்றி கொஞ்​சம் துளசி இலை​களை அதில் போட்டு 5 மணி நேரம் ஊற விடுங்​கள். பிறகு அந்​தத் தண்​ணீ​ரைக் குழந்​தை​க​ளுக்​குக் கொடுத்து வந்​தால் எந்த வியா​தி​யும் அவர்​களை அண்​டாது.

பாகற்​காயை நறுக்​கிக் காய​வைத்​துத் தூளாக்​கிக் கொள்​ளுங்​கள். இதில் ஒரு தேக்​க​ரண்டி தூளை ஒரு டம்​ளர் வெந்​நீ​ரில் கலந்து குடித்​து​வர அல்​சர் சீக்​கி​ரமே குண​மா​கும்.

மூட்டு வலி, முழங்​கால் வலி​யைக் குறைக்க முடக்​கத்​தான் கீரை, பச்சை மிள​காய், சீர​கத்தை அரைத்​துத் தோசை மாவில் கலந்து தோசை வார்த்​துச் சாப்​பிட நல்ல பலன் கிடைக்​கும்.

தக்​கா​ளி​யைச் சமைக்​கா​மல் பச்​சை​யாக மென்று சாப்​பி​டு​வ​தால் வாய்ப்​புண் ஆறும்.

சொறி, வேர்க்​குரு வரா​மல் தடுக்க பாசிப்​ப​யறு, மஞ்​சள் தூள், வேப்​பி​லையை மைபோல் அரைத்து உட​லில் பூசி 10 நிமி​டம் கழித்​துக் குளித்து வாருங்​கள். சரு​மம் ஆரோக்​கி​ய​மாக இருக்​கும்.

மாது​ளம் பழச்​சாற்​று​டன் இஞ்​சிச் சாறு கலந்து சாப்​பிட்டு வர இரு​மல் குண​மா​கும்.

செவ்​வா​ழைப் பழத்தை தொடர்ந்து சாப்​பிட்டு வந்​தால் உட​லில் நோய் எதிர்ப்பு ஆற்​றல் உரு​வா​கும்.

திராட்​சைப் பழச்​சாற்றை அருந்தி வர குடல் புண் குண​மா​கும்.

விளாம்​ப​ழத்​தின் சதை​யு​டன் திப்​பி​லி​யை​யும் மிள​கை​யும் தூள் செய்து சேர்த்​துப் பயன்​ப​டுத்த பித்த மயக்​கம்; தொண்டை நோய்​கள் குண​மா​கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com