

ஓமத்தில் வைட்டமின் பி 1, 2, 3 மற்றும் பாஸ்பரஸ், இரும்பு, சுண்ணாம்புச்சத்து ஆகியவை உள்ளன.
ஓமம் அஜீரணத்தைப் போக்கும் சிறந்த மருந்து.
ஓம எண்ணெய்யுடன் லவங்க எண்ணெய்யைச் சேர்த்து, தண்ணீரில் கலந்து வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் போகும்.
ஓம எண்ணெய்யை தடவினால் மூட்டுவலி அறவே குறையும்.
ஓம நீரைக் காய்ச்சி குடித்து வந்தால், கை, கால் நடுக்கம் குணமாகும்.
நல்லெண்ணெய்யுடன் பூண்டும் ஓமமும் சேர்த்துக் காய்ச்சி காதில் விட்டால் காதுவலி குறையும்.
ஓமம் நச்சுக் கொல்லியாகவும் பயன்
படுகிறது.
ஓமத்தைப் பொடி செய்து கொதிக்க வைத்து அந்த நீரைப் பருகி வந்தால் இதயம் பலப்படும்.
ஓம நீரில் ஆவி பிடித்து வந்தால் மூக்கடைப்பும், தலைபாரமும் நீங்கும்.
ஓமத்தை வெல்லத்துடன் சேர்த்துச் சாப்பிட்டால் மார்பு வலி குறையும்.
ஓமம் ஒரு சிறந்த கிருமி நாசினி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.