பேரிக்காயின் ஆங்கிலப் பெயர் பேர் (PEAR). இதன் தாவரப் பெயர் பைரஸ்கம்யூனிஸ் (PYRUS COMMUNIS) ஆகும். பேரிக்காய், ஆப்பிள் வகையைச் சேர்ந்தது. ஆப்பிளை விட விலை மிகவும் குறைவானது. அதனால், இதை "ஏழைகளின் ஆப்பிள்' என்று சிறப்பு பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது.
பேரிக்காய் நன்கு முற்றி கனியாகிறது. நாம் சாப்பிடுவது பேரிக்கனிதான். ஆனால் பொதுவாக பேரிக்காய் என்றே சொல்கிறோம்.
பேரிக்காயில் நீர்ச்சத்து அதிகமுள்ளதால் இங்கிலாந்து மக்கள் பேரிக்காயை "கோடைக்கால தண்ணீர்குடம்' என்று கூறுகிறார்கள்.
சத்துகள்: பேரிக்காயில் புரதம், மாவுப்பொருள்கள், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, நார்ப்பொருட்கள், மெக்னீசியம், சோடியம், தாமிரம், கந்தகம், குளோரின், வைட்டமின்கள் "ஏ', "பி', பெக்டின் முதலிய சத்துகள் உள்ளன.
மருத்துவப் பயன்கள்:
• பேரிக்காயில் கால்சியம், பாஸ்பரஸ் கணிசமாக உள்ளதால் எலும்பு வளர்ச்சிக்கும் நல்லது.
• பேரிக்காயை ஜூஸ் செய்து குடிப்பதை விட, துண்டுகளாக்கி மென்று தின்பதால், இதிலுள்ள சத்துப் பொருட்கள் சிதையாமல் முழுவதும் கிடைக்கும்.
• பேரிக்காயை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் ரத்தத்திலுள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து ரத்த ஓட்டத்தை சீராக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். ரத்தத்தில் ஆக்சிஜன் அதிகம் கிடைக்கச் செய்யும். மலச்சிக்கலைப் போக்கும். சீதபேதியைக் கட்டுபடுத்தும் குணம் இதற்கு உண்டு. அஜீரணக் கோளாறுகளை அகற்றி, நன்கு பசியை உண்டாக்கும்.
• பெக்டின் உள்ளதால் குடல் புற்றுநோய் திசுக்கள் வளராது காக்கும் ஆற்றல் உள்ளது பேரிக்காய்.
• பேரிக்காய் சாற்றுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வர உடல் வலுப்பெறும். சோர்வு, மன இறுக்கம் நீக்கி புத்துணர்வு தரும்.
• பேரிக்காயில் நுண்ணூட்ட சத்துகளும், வைட்டமின்களும் தாராளமாக இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
• கோடை காலத்தில் உடல் உஷ்ணத்தைக் குறைத்து, குளிர்ச்சியை ஏற்படுத்தும் .
• பற்களுக்கு உறுதியைத்தரும். ஈறுகளைப் பலப்படுத்தும். இதனால் பற்களில் ஏற்படும் சொத்தையையும் தடுக்கும்.
• பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளைக் குணப்படுத்தி, ஒழுங்குப்படுத்தும்.
• நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் பேரிக்காயை அடிக்கடி உண்டு வர, நரம்புகள் பலம் பெறும்.
-உ.ராமநாதன், நாகர்கோவில்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பதற்றமாக இருந்தேன்; சதம் விளாசிய பிறகு விராட் கோலி பேசியதென்ன?

முறையான வெளியீட்டுக்குத் தகுதியானவர்கள்! - கருப்பு படக்குழுவுக்கு தனுஷ் ஆதரவு!

கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!

துறைச் செயலர்கள் மாற்றம்... செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ்!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

