அடைக்கு மாவு அரைக்கும்போது ஊறவைத்த ஒரு கைப்பிடி பச்சைப் பட்டாணியையும் சேர்த்து அரைத்தால் அடை மிகவும் ருசியாக இருக்கும்.
மிளகாய் பஜ்ஜி செய்யும்போது கடலைமாவு கரைசலில் முக்கி எடுக்கும் முன்பு மிளகாயை லேசாகப் பிளந்து அதற்குள் ஓமம், உப்பு, கடலைமாவு, எண்ணெய் நான்கையும் பிசறி லேசாக ஸ்டப் செய்து பிறகு பஜ்ஜி செய்தால் பிரமாதமாக இருக்கும்.
பகளாபாத் தயாரிக்கும்போது சாதம் குழைய வெந்தால்தான் நன்றாக இருக்கும். அதனால் சாதம் வேக வைக்கும் போதே ஒரு டம்ளர் அரிசிக்கு ஒரு தேக்கரண்டி வீதம் அவலைச் சேர்த்து வேக வைத்தால் சாதம் நன்றாக குழைந்திருப்பதுடன் ருசியாகவும் இருக்கும்.
பீட்ரூட் அல்லது கேரட் சமைக்கும்போது கலர் மாறிவிடாமல் இருக்க சிறு துண்டு இஞ்சியைச் சேர்த்து வேகவிட்டால் கேரட், பீட்ரூட் ஆகியவை கலர் மாறாமல் இருக்கும்.
ரசத்தில் தக்காளியைப் பயன்படுத்தும்போது அதை அரிந்துப் போடாமல் கையால் பிய்த்துப் போட்டுக் கொதிக்கவிட்டால் ரசம் சுவை பிரமாதமாக இருக்கும்.
மீதமான தேங்காய்ச் சட்னியை கெட்டியானப் புளிப்பு மோரில் சேர்த்து ஒரு கொதி விட்டால் சுவையான மோர்க் குழம்பு தயார்.
பிரெட் மீந்து விட்டதென்றால் அதனை மிக்ஸியில் இட்டுப் பொடியாக்கி உப்பு, கரம் மசாலா, கொத்துமல்லித்தழை, வெங்காயம் சேர்த்துப் பிசைந்து கட்லெட்டாக எண்ணெய்யில் பொரித்தெடுக்கலாம்.
வாழைத்தண்டை வில்லைகளாக நறுக்கி, பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்பொடி, எலுமிச்சைச்சாறு சேர்த்து குலுக்கி வைத்தால் உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான எண்ணெய் சேர்க்காத ஊறுகாய் ரெடி.
பொட்டுக்கடலையை நைஸாக பொடித்து வைத்துக் கொண்டால் சட்டென தேங்காய் சட்னியுடன் கலக்க, குருமா, மோர்க்குழம்பு வகையறா செய்யவும், சேப்பங்கிழங்கு, உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்யும்போது தூவினால் சுவை கூடுதலாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கைத்தறி நெசவுத் தொழிலைப் பாதுகாக்க தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கப்படும்! - கோபி திமுக வேட்பாளா் என்.நல்லசிவம்

கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவா் சடலமாக மீட்பு

மகளிா் இட ஒதுக்கீடு: பிரதமருக்கு புதுச்சேரி முதல்வா் ஆதரவு

புதுச்சேரியில் டீ, காபி விலை இன்றுமுதல் உயா்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


